உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கலியன் குரல் இந்த வாக்கியத்தில் பரத்துவம் முதலான எம்பெருமான் நிலை களின் அருமையையும் அர்ச்சாவதாரத்தின் எளிமையையும் எடுத்துக்காட்டுகளின்மூலம் விளக்குவர் இந்த ஆசாரியப் பெரு மகனார். இதனை ஈண்டு விளக்குவது இன்றியமையாத தர்கின்றது. தண்ணிர் வேட்கை கொண்டவனுக்கு வேறு இடங்கட்குச் செல்லவேண்டாதபடி தண்ணிர் தான் நிற்கும் இடத்தில் பூமிக்கடியில் இருந்தாலும் கொட்டும் குந்தாலியும் கொண்டு கல்லினால் அல்லது குடிக்கக் கிடைக்காதிருப்பதுபோல, எம்பெரு மானைக்கண்டு பற்ற வேண்டும்’ என்ற அவா இருந்தும் கட்கிலி: என்று நம்மாழ்வார் குறிப்பிட்டபடி கணகளால் காணமுடியாதபடி அட்டாங்க யோக முயற்சியால் மட்டிலும் கண்க்கிட்டுபவன் அந்தர்யாமித்துவ நிலையிலுள்ள இறைவன். "அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமமுது’’’ என்று பரகாலர் கூறியபடி இந்த லீலாவிபூதி (படைப்பு அழிப்பு முதலான விளையாட்டிற்குரிய உலகங்களுக்கு) அப்பாற்ப்ட்டிருப்பவன பரத்துவநிலை எம்பெரு மான். அப்படி மிக்க நெடுந்துTரம் அன்றியே இந்த உலகின் எல்லைக்குள்ளே இருப்பினும், “பாலாழி நீ கிடைக்கும் பண்பே யாக கேட்டேயும் என்று சடகோபர் கூறுகின்றபடி கேட்டி ருக்கும் என்ப தன்றிச் சென்று காண அரிதாம்படி இருப்பவன் வியூக நிலை எம்பெருமான். மிக அண்மையிலிருந்தும் வெள்ளம் வருங்காலத்தில் இருந் தவர்கட்கு மட்டிலும் பருகும் படியாய் வேறுகாலங்களில் இருப் பவர்கட்குப் பருகுவதற்கு அரிதாய் இருக்கும் பெருக்காறு போறு லே மண்மீது உழல்வாய்’ சி என்று நம்மாழ்வார் கூறுவது போல் பூமியிலே அவதரித்துச் சஞ்சரித்தும் அக்காலத்தில் வசித் தவர்கட்கு மட்டிலும் அடையத்தக்கவர்களாய்ப் பிற்காலத்தில் உள்ள இவனுக்குக் கிட்டாதபடி இருப்பவர்கள் விபவ நிலை

  • x*

48. திருவாய், 7. 2: 3 49. திருநெடுந் 14 50. பெரிய. திருவத், 34 51. திருவாய். 6, 9; 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/149&oldid=775571" இலிருந்து மீள்விக்கப்பட்டது