உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

##3 . அருளிச் செயல்கள்-தத்துவக் கருத்து எம்பெருமான்கள். மேற்கூறிய எம்பெருமான்கள் போலன்றி, காண்பதற்குத்தேசத்தாலும் காலத்தாலும் கரணத்தாலும் கிட்டு வதற்குச் சேயதாயன்றி, கோயில்களிலும் வீடுகளிலும் என்றும் ஒக்க எல்லார்க்கும் கண்ணுக்கு இலக்காம்படி 'பின்னானார் வணங்கும் சோதியாக’ ’ இருப்பவன் அர்ச்சாவதார எம்பெரு மான். பல இடங்களிலும் எழுந்தருளியிருக்கும் நிலைகளை நினைந்து 'மடுக்கள்’’ என்று பன்மையாக அருளிச் செய்தார். அவதாரங்களின் குணங்கள் எல்லாம் அர்ச்சையினிடத்திலே குறைவற்று நிறைந்திருப்பதாலும் அவதாரங்களின் திருவுரு வங்களை அர்ச்சை வடிவமாகப் பல இடங்களில் மேற்கொண்டி ருப்பதாலும் அதிலே தேங்கின மடுக்கள்போலே’ என்று குறிப்பிட்டார் இந்த ஆசாரியப் பெருமகனார். இந்த ஐந்து நிலை எம்பெருமான்களையும் மிகத் தெளிவாக விளக்கின ஆசாரியப் பெருமகனாரைப் போற்றுகின்றோம்; பாராட்டுகின்றோம். இறையதுபவம்: பக்தியினால் எப்பெருமானை அநுபவத்தல் பலவகைப்பட்டிருக்கும். அவனுடைய திருநாமங்களைச் சொல்லி அநுபவத்த்ல், அவனுடைய வடிவழகை வருணித்து அநுப வித்தல், அவன் உகந்தருளின திவ்விய தேசங்களின் வளங் களைப் பேசி அநுபவித்தல், அங்கே அபிமானமுள்ள அடியவர்கள் களின் பெருமையைப் பேசி அநுபவித்தல் என்று இப்படிப் பலவகையாக நடைபெறும் இறையநுபவம் திருமங்கை யாழ்வாரின் பாசுரங்களை ஊன்றிப் படிப்போர் அவர் எம் பெருமானை இப்படியெல்லாம். அநுபவித்து மகிழ்ந்ததை அறியலாம். திருமங்கையாழ்வாரின் பாசுரங்களை ஊன்றிப் படிப்போர் அவர் எம்பெருமானை இரண்டு வழிகளில் அநுபவிப்பதை நன்கு அறியலாம். ஒன்று: தாமான தன்மையிலிருந்து கொண்டு எம்பெருமானை அநுபவித்தல்; இரண்டு பிராட்டியின் தன்மையை எறிட்டுக்கொண்டு வேற்றுவாயாலே பெண்பேச் 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/150&oldid=775575" இலிருந்து மீள்விக்கப்பட்டது