உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$9 கலியனின் வாழ்வும் வழியும் வந்தார் எனக்கருதுவோர்: ஆழ்வார் இந்தத் திருப்பதிக்கு வந்தார் எனக் கருதுவோரின் கருத்தையும் ஈண்டு எடுத்துக் காட்டுவேன். ஆழ்வார் எவ்வுள் கிடந்தானைச் சேவித்த பின்பு திருவல்லிக்கேணிக்கு எழுந்தருள்வதற்கு முன்பே திரு நின்றவூரைச் சேர்ந்தார்; அத்திருப்பதியில் எழுந்தருளியுள்ள பத்தராவிப் பெருமாள் அப்பொழுது ஆழ்வாருக்கு முகம் கொடா மல் பிராட்டியாரோடு கொஞ்சிக் கொண்டு (ஸ்ரஸசல்லாபம் செய்து கொண்டு) பராமுகமாக இருந்திடவே, ஆழ்வார் அத் திருப்பதியை விட்டு அப்பால் சென்று திருவல்லிக்கேணியையும் திருநீர்மலையையும் சேவித்து, அதன்பின்னர்த் திருக்கடல் மல்லையை அடைந்து அத்தலத்துப் பெருமானைச் சேவித்து நிற்கும் பொழுது, திருநின்றவூர் எம்பெருமான் திருமகளால் தூண்டப்பெற்று இவ்வாழ்வார் திருவாக்கினால் மங்களாசா சனம் பெற்றுச் சிறப்புறக் கருதிக் கடல் மல்லையில் வந்து சேவை சாதிக்க இப்போது நின்றவூர் நித்திலத்தைக். கண்டது நான் கடல் மல்லைத் தலசயனத்தே என்று திருநின்றவூர்ப் பத்த ராவிப் பெருமாளையும் இங்கே சேவிக்கப்பெற்றதாக அருளிச் செய்கின்றாரென்று பெரியோர்களின் நிர்வாகம்' என்று குறிப் பிடுவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள். நம் ஆராய்ச்சியை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு எப்படி எப்படியெல்லாம் பக்தர்கள் அர்ச்சாவதாாமூர்த்திகளை அது பவித்தார்கள் என்று வியப்பு அடைகின்றோம். அதே சமயத் தில் நம்மால் அந்த அளவுக்குஅநுபவிக்க முடியவில்லையே’ என்ற கழிவிரக்கமும் கொள்ளுகின்றோம். nomassassassassassareassassomræmasemæszawaoe 31 பெரி. திரு. 2.5 ; 2 (திவ்வியார்த்த தீபிகை காண்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/26&oldid=775611" இலிருந்து மீள்விக்கப்பட்டது