உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 கலியனின் வாழ்வும் வழியும் தொழிய, அவனை விட்டுக் கனமும் தரித்தற் கொண்ணாமல் பெருவிடாய்ப்பட்டவர்கள் நீரிலே விழுந்து நீரைக் குடிப்பது, நீரை வாரி மேலே இறைத்துக் கொள்வது முதலான செயல் களைச் செய்யுமாப் போலே, எம் பெருமானை வாயாலே பேசியும், தலையாலே வணங்கியும், நெஞ்சாலே நினைத்தும் தரிசிக்கப் பார்க்கின்றார்-திருக்குறுந் தாண்டகத்தில். இதில் உள்ள பாசுரங்கள் 20 3. திருகெடுக்தாண்டகம்: இது முப்பது பாசுரங்களைக் கொண்டது. இவற்றின் பொருள் நெறி நோக்கி முதல் பத்து, இரண்டாம் பத்து, மூன்றாம் பத்து என்று மூன்று பகுதிகளாகக் கொண்டும் சிலர் கூறுவர். முதல் பத்து ஆழ்வாரின் தாமான தன்மையிலும், இரண்டாம் பத்து பிராட்டியின் தன்மையை ஏறிட்டுக் கொண்டு தாய்ப் பேச்சிலும்; மூன்றாம் பத்து மகள் பேச்சிலுமாக அமைந்துள்ளன. பெரியவாச்சான் பிள்ளை இதைச் சரமப்பிரபந்தமாகக் கொள்வர். 4. திருஎழுக்கூற்றிருக்கை: சித்திரக் கவி வகைகளுள் இரதபந்தம் அமைப்பில் அமைந்துள்ளது. இது, இரதபந்தமா வது, தேரின் உருவந்தோன்றக் கட்டங்கள் போட்டு அவற்றில் எண் முறையே பாசுரப் பகுதிகளை அடக்க வேண்டும். தேருக்கு மேற்பகுதி என்றும், கீழ்ப்பகுதி என்றும் இரண்டு பகுதிகளாக இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஒவ்வொரு பகுதியிலும் ஏழு கூறுகள் உண்டாகும்படிக் கீறவேண்டும். அப்படிக் கீறும்போது முதற் கூறு மூன்று அறையும், இரண்டாம் கூறு ஐந்து அறையும், மூன்றாம் கூறு ஏழு அறையும், நான்காம் கூறு ஒன்பது அறையும், ஐந்தாம் கூறு பதினோர றையும், ஆறாம் கூறு பதின்மூன்றறையும், ஏழாம் கூறு அங்ங்ணமேயாக, இப்படி ஒன்றிற் கொன்று இரண்டறை மேற் முறையே கீறவேண்டும். மேற்பாகத்தில் தலையிலி தும் ساLL கீழ்பாகத்தில் அடியிலிருந்தும் இந்த முறை கொள்ளத் தக்கது. வீரசோழியம் முதலிய இலக்கண நூல்களில் இதன் இலக்கணம் கூறப்பெற்றுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/36&oldid=775623" இலிருந்து மீள்விக்கப்பட்டது