உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியன் குரல் என்று வழங்கப்படுகின்றது. பத்தாம்பத்து ஏழாம் திருமொழியில் மட்டிலும் பதினான்கு பாசுரங்கள் உள்ளன. பதினோராம் பத்தில் பதினான்கு பாகங்கள் உள்ளன. பதினோராம் பத்தில் மட்டிலும் எட்டுத் திருமொழிகள். ஆகவே, பெரிய திருமொழியில் உள்ள பாசுரங்களின் தொகை 1984 ஆகும். அர்ச்சாவதார அநுபவத்தைப் பகரும் திருமொழிகளைத் தவிர ராமா வதாரத்தை இராட்சச பாவனையாலும், கிருட்டிணாவதாரத்தை யசோதை பாவனையாலும், மற்றைய அவதாரங்களின் மேன்மை யோடு கிருட்டினாவதாரத்தின் எளிமையைச் சேர்த்து அநுப வித்தலும் போன்ற அதுபவங்களைக் கூறும் திருமொழிகளும் உள்ளன. தவிர, தாய்ப் பாசுரமாகவும், தலைவிப் பாசுரமா கவும் அதுபவித்த திருமொழிகளும் உள்ளன. விடவாவதார மகி மையும், விவாவதாரங்களில் எம்பெருமானுடைய செளலப்பிய மும் பரத்துவமும் எதிரெதிராகக் கூறும் இரண்டு தோழியர் அநுபவமும் திருமொழிகளாக அமைந்துள்ளன. நாட்டுப் புறப் பாடல்களின் சாயையில் ஒரு சில திருமொழிகள் அமைந்துள்ளன. இறுதித் திருமொழி உடல் உறவை அறுத்துத் தந்தருளுமாறு வேண்டும் என்ற பிரார்த்தனையாக முடிகின்றது. 2. திருக்குதுக்தாண்டகம் தாண்டகம் என்பது தமிழில் ஒருவகைப் பிரபந்தம். இஃது அறுசீர் கொண்ட அளவொத்த அடிகன் நான்கினாலாவது, எண்சீர் கொண்ட அளவொத்த அடிகள் நான்கினாலாவது இஷ்ட தேவதையைப் புகழ்ந்து பாடும் பிரபந்தமாகும். அறுசீர் கொண்டது குறுந்தாண்டகம்; இதில் மெய்யெழுத்தும் உட்படப் பதினைந்து எழுத்துக்குக் குறையா மலும், இருபத்தாறெழுத்துக்கு மேற்படாமலும் இருத்தல் வேண் டும். நெடுந்தாண்டகத்தில் அடிதோறும் இருபத்தாறெழுத்துக்கு மேற்பட்டே இருத்தல் வேண்டும். இவற்றின் இலக்கணத்தைப் பன்னிரு பாட்டியல் போன்ற பாட்டியல் நூல்களில் காணலாம். பசி மிகுதியாகும்வரையில் சோறிடத் தாமதம் செய்யும் தாயைப் போலவே, எம்பெருமானும் தன்னை அதுபவிப்பதற்கு உறுப்பான பெருவிடாய் பிறப்பிப்பதற்காக முகங் காட்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/35&oldid=775622" இலிருந்து மீள்விக்கப்பட்டது