உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 கலியனின் வாழ்வும் வழியும் அடுத்துபாண்டிநாட்டுத் திருப்பதிகளைச் சேவிக்கத் திரு வுள்ளம் பற்றுகின்றார். திருமெய்யம் தொடங்கி திருப்புல் லாணி, திருமாலிருஞ்சோலை, திருக்கோட்டியூர், மதுரைக் கூடல் (தென்மதுரை), திருமோகூர், திருத்தண்கால் (சிவகாசிக் கருகிலுள்ளது), திருக்குறுங்குடி ஆகிய திவ்விய தேசங்களை யெல்லாம் சேவித்து அவற்றை மங்களா சாசனம் செய்கின்றார். அடுத்து, மலை நாட்டுத் திருப்பதிகளுள் திருநாவாய், திரு மூழிக்களம் ஆகியவற்றைச் சேவித்துத் தம் திருத்தலப் பயணத் தைத் தலைக்கட்டுகின்றார். இங்கனமாக, இந்த ஆழ்வார் 108 திவ்வியதேசங்களுள் 22 போக, மிகுந்தவைகளை (86) மங்களா சாசனம் செய்தருளுகின்றார். இந்த ஆழ்வார் தமக்கு யாதொரு காரணமும் பற்றாமல் கிடைத்த திருமந்திரத்தையும் அதற்கு உள்ளீடான சீமந் நாராயணனுடைய சொரூபகுப, குண, விபூதி சேஷ்டிதங்களையும், அருள்மாரி என்னும்படி பெரிய பிராட்டியாாருளாலே இவற்றையெல்லாம் கண்டு அநுபவித்து அதனால் உண்டான பேருங்களிப்பால் 1) பெரிய திருமொழி, 2) திருக்குறுந்தாண்டகம், 3} திருதெடுக்தாண்டகம், 4) திருவெழுக்கூற்றிருக்கை, 5) சிறிய திருமடல், 6) பெரிய திருமடல் என்கின்ற ஆறு பிரபந்தங்களையும் அருளிச்செய்தனர். நம்மாழ்வார் அருளிசெய்துள்ள நான்கு திருமறைகளின் சாரமாகத் திகழும் திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி, திரு வாய் மொழி என்ற நான்கு பிரபந்தங்களுக்கு ஆறு அங்கமாக இந்தப் பிரபந்தங்கள் அமைந்துள்ளனவாகக் கொள்ளப்படும். இங்கு எண்கள் ஒற்றுமையேயன்றி பொருள் ஒற்றுமை இல்லை என்பதை நாம் உளங்கொள்ள வேண்டும். இனி, இந்தப் பிர பந்தங்களைப்பற்றிச் சிறிது அறிந்து கொள்வது பொருத்தமா கின்றது. 1. பெரிய திருமொழி: இதில் அடங்கிய பத்துகள் பதி னொன்று, பத்துத்திருமொழிகள் (ஒரு திரு மொழி என்பது பத்துப் பாசுரங்களைக் கொண்டது) கொண்டதை ஒரு பத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/34&oldid=775621" இலிருந்து மீள்விக்கப்பட்டது