உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3i கலியனின் வாழ்வும் வழியும் எத்தினை மருங்கினும் மகடூஉ மடல்மேல் பொற்புடை நெறிமை இன்மையான " என்பது தொல்காப்பியம். திருவள்ளுவரும், க்டலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில். கி என்று இந்நெறியை வலியுறுத்துவதைக் காணலாம். திருமங்கையாழ்வார் பிராட்டி தசையை அடைந்து பரகால நாயகி ஆனபின்னர் மடலூரப் புகுதல் பொருந்துமோ என்ற வினா எழுகின்றது. இந்த ஆழ்வார் அருளியுள்ள சிறிய திருமடல்’ 'பெரியதிருமடல்’ என்ற பிரபந்தங்களிலும் ஆழ்வார் நாயகி மடலேறத் துணிவதாகக் கூறப்பெறுகின்றது. இதனைத் தமிழ் மரபினை மீறிய ஒரு புரட்சி என்று கருதலாமா என்பது வினா. இரண்டு திருமடல்களிலும் ஆழ்வார் நாயகி மடலூர்வன், மடலூர்வன்' என்று சொல்வி அச்சமுறுத்தினாரேயன்றி அச் செயலை முற்ற முடிய நடத்தினதாகக் கூறவில்லை. சிறிய திரு மடலில், - ஒர்ஆனைக் கொம்பொசித்து ஓர்ஆனைக் கோள் விடுத்த சீரானை செங்கண் நெடியானை தேன்துழாய்த் தாரானைத் தாமரைபோல் கண்ணானை எண்ணருஞ்சேர் பேர்ஆயிரமும் பிதற்றிப் பெருந்தெருவே ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன்.நான் வார்.ஆர்பூம் பெண்ணை மடல்." 45. தொல்: பொருள் அகத்திணை - 38 (இளம்) 46. குறள் - 1137 47. சிறிதியரு மடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/38&oldid=775625" இலிருந்து மீள்விக்கப்பட்டது