உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியன் குரல் என்றும், சம்பந்தப்பெருமான் நீர் ஒருகவி சொல்லும்’ என்று ஆழ்வாரைக் கேட்டார் என்றும், ஆழ்வாரும் "ஒருகுறளாய் இருநிலம் (பெரி. திரு. 3,4) என்னும் திருமொழியை அருளிச் செய்தார் என்றும், அதில் திருக்கடைக்காப்புப் பாசுரத்தில் தம் விருதுகளெல்லாம் தோன்றும்படி, செங்கமலத்து அயன் அனைய மறையோர் காழிச் சீராம விண்ணகர்என் செங்கண் மாலை அங்கமலத் தடவயல்சூழ் ஆலி நாடன் அருள்மாரி அரட்டுஅமுக்கி அடையார் சீயம் கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கை வேந்தன் கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார் தடங்கடல்சூழ் உலகுக்குத் தலைவர் தாமே." என்றும் பாடினார் என்றும், சம்பந்தரும் இதைக் கேட்டு மறு மொழி சொல்ல இயலாமல் உமக்கு இவ்விருதுகளெல்லாம் பொருந்தும் என்று கூறிச் சென்றார் என்றும், அப்படிப் போகும் போது தமது வேலாயுதத்தை இவருக்குக் காணிக்கையாகக் கொடுத்துச் சென்றார் என்றும் குரு ரம்பரையில் ஒரு வரலாறு க3, பெரி. திரு. 3.4:10, ஆலிநாடன் -ஆலிநாட்டுத்தலைவர் அருள் காகி.பக்தர்கட்கு அருளைப் பொழியும் மேகம்: அரட்டு அமுக்கிஇங்கு செய்பவர்களைத் தலை எடுக்க வொட்டாமல் அமுங்கச் செய்பவர்: அடையார் சீயம் - பகைவர்கட்குச் சிங்கம் போன்றவர். மங்கை வேந்தன் . திருமங்கை நாட்டுக்கு மன்னர்; பரகாலன் - எதிரிகட்குக் கூற்றுவன் போன்றவர்: கொற்றம் Gఎు - வெற்றி பொருத்திய வேற்படை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/41&oldid=775630" இலிருந்து மீள்விக்கப்பட்டது