உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 கலியனின் வாழ்வும் வழியும் மன்னும் மடலூரார்’ என்பதோர் வாசகமுகம் தென்னுரையில் கேட்.விவ துண்டு.அதனை யாம்தெளியோம் மன்னும் வடநெறியே வேண்டினோம்.5' י? என்ற பெரிய திருமடல் பகுதியால் இதனை அறியலாம். “மட லேறுதல் என்பது ஆசைமிகுதியால் மேற்கொள்ளும் ஒரு செயல். ஆசையை வரம்பிட்டுக் காக்க யாராலும் இயலாது. அரச ரானைக்கும் அது கட்டுப்படுமோ? வேளிபடைத்தால் நிற்குமோ வேட்கை? அளவு கடந்த வேட்கையின் காரணமாக விளையக் கடவதான மடலூருதலை ஆண்கள்தாம் மேற்கொள்ளலாம், பெண்கள் மேற்கொள்ளலாகாது என்று வரம்பு கட்டுவது காதலின் இயல்பை அறியாதவர்களின் செயலாகும் என்பது ஆழ்வாருடைய திருவுள்ளம்” என்று கொண்டால் ஆழ்வார் புரட்சியான போக்குடையவர் என்று கருதலாம். ஞானசம்பந்தர் சந்திப்பு: திருமங்கையாழ்வர் சோழநாட்டுத் திருப்பதிகளை மங்களாசாசனம் செய்து வருகையில் சீகாழியில் இவரது சீடர்கள் வழக்கப்படி நாலுகவிப்பெருமாள்' வந்தார், அருள்மாரி வந்தார், அரட்டமுக்கி வந்தார், அடையார்சீயம் வந்தார், ஆலிநாடர் வந்தார், மங்கைவேந்தர் வந்தார், பாகாலர் வந்தார் முதலான விருதுகளை ஏந்திக்கொண்டும், இந்த விருதுகளை வாயால் முழங்கிக் கொண்டும் ஆழ்வாருக்கு முன்னே செல்வாராயினர். அப்போது அவ்வூரில் இருந்த திருஞான சம்பந்தப் பெருமானின் அடியார்கள் வந்து எங்கள் நாயனார் இருக்குமிடத்தில் நீங்கள் விருது ஒதிச் செல்லலாகாது என்று தடுத்து நிறுத்தினர். ஆழ்வாரும் உங்கள் நாயனாருடன் தர்க்கிப்போம்’ என்று அவ்வூர்த் தாடாளப் பெருமானை எழுந்தருள்வித்துக்கொண்டு சம்பந்தப் பெருமான் இருக்கும் இடம் சென்றார். சம்பந்தப் பெருமான் இவரைக்குறித்து ஒருகவி சொன்னார் என்றும், அதில் இவர் ஒரு குற்றம் சொன்னார் 52. தாலுகவி - ஆசு, மதுரம், சித்திரம், விஸ்தாரகவிகளைப் ன்டி அல்லவர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/40&oldid=775629" இலிருந்து மீள்விக்கப்பட்டது