உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியனின் குரல் |குன்றாகுறையாத; மது-தேன்; படப்பை-தோட்டம்; பொன்னி.காவிரி; மணி-இரத்தினம்; கழனி-வயல், கனகம் பொன்; துவக்கும்-தொடும்; மந்திரம்-வேதம்; அமளி-படுக்கை; வினை சம்சாரத் துன்பங்கள்; மாற்று - போக்கியருள்க) என்ற அடிகளில் ஆர்த்தராய்ச் சரணம் புகுவதைக் கண்டு மகிழலாம். ஆராவமுதன் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் அமைப் இலும் இதன் பின்புறமுள்ள திருக்குளத்தின் அமைப்பிலும் தம்முனம் ஈடுபடும்போது நாம் புராணகாலத்திற்கு இழுத்துச் செல்லப் பெறுகின்றோம். திருமங்கையாழ்வார் மிகவும் ஈடுபாடு கொண்ட ஆராவமுதன் நம்மையும் ஈர்க்கின்றான். பிருகு முனிவர் ஒரு சமயம் வைகுந்தம் வருகின்றார் பரந்தாமனைச் சேவிப் பதற்கு பரந்தான்ை ஏதோ காரணத்தினால் முனிவரைக் கவனி யாது பாராமுகமாக இருக்கின்றான். இதனால் சினங்கொண்ட முனிவர் பரந்த மனின் திருமார்பில் எட்டி உதைக்கின்றார். பரத்தாமனோ சிறிதும் மனம் கவலாது முனிவரின் திருவடி கனைத் தொட்டு அவரைச் சேவிக்கின்றான். பரத்தாமனின் இச்செயல் பெரிய பிராட்டியாருக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. சினங்கொள்ளுகின்றார். 'அகலகில்லேன் இறையும்?' என்று அவன் திருமார்பில் உறைபவள் அல்லவா? நேராக உதைவாங்கியவர் வாளா இருப்பாரா? இதனால் எப்பெரு மானிடம் பிணங்கிக் கொண்டு வைகுந்தத்தைவிட்டு இப்பூவுல கிற்கு வருகின்றார்; வந்தவர் கொல்லபுரம் என்ற இடத்தில் தங்கி விடுகின்றார். பெரியபிராட்டியாரைத்தேடிக் கொண்டு பூவுல கிற்கு வருகின்றான் பரமபதநாதன். வந்தவன் பதுமாவதியைத் திருமணம்புரிந்து கொண்டு திருப்பதியில் சீநிவாசனாகத் தங்கிவிடு 瓣證。 裔巧 6. Hö; 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/53&oldid=775644" இலிருந்து மீள்விக்கப்பட்டது