உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4? கலியனின் வாழ்வும் வழியும் கின்றான். இந்நிகழ்ச்சியை நாரதர்மூலம் செவியுறுகின்றார் இலக்குமிதேவி; இதனால் அவருக்கு எப்பெருமான்மீது மேலும் சினம் மிகுகின்றது; அவனைத் தண்டிக்க வேண்டும் என்று திருப்பதிக்கு விரைகின்றார். இதனால் அச்சங் கொண்ட சீநி வாசன் நாரதரின் யோசனைப்படி குடந்தை வந்து அங்கு ஒரு பிலத்தினுள் நுழைந்து கொள்கின்றார். சீநிவாசனைத் தேடிக்கொண்டு குடந்தை வருகின்றார் இலக்குமிப் பிராட்டி சீநிவாசன் அவள் இலக்குக்கு அகப்படவில்லை. நீர்வளமும் நிலவளமும் உள்ள குடந்தையின் இயற்கைச் சூழல் பிராட்டியின் மனத்தைக் கவர்கின்றது; இத்திருத்தலத்தில் எம்பெருமானுடன் இணைந்து வாழ நினைக்கின்றார். திருக் கோயிலருகிலுள்ள திருக்குளத்தின் பொற்றாமரையில் பால கோமளவல்லியாக அவத்ாரம் செய்கின்றார். இறைவனை நோக்கித் தன்னைத் திரும்பப் பெறுமாறு தவம் கிடக்கின்றார். இந்தக் காலத்தில் பிருகு முனிவரும் ஹேமமுனிவராகப் பிறக்கின்றார். தம்முடைய தவறுதலுக்குப் பரிகாரம் தேடு கின்றார். தந்தை நிலையிலிருந்து கொண்டு பால கோமல் வல்லியைப் பராமரிக்கின்றார். அவரைச் சேர்த்துக் கொள்ளவும் இறைவனை வேண்டுகின்றார். எம்பெருமானும் இருவர் வேண்டு கோளுக்கும் இரங்கி திருவரங்கத்திலுள்ள பிரணவ விமானத் தினின்றும் வைதிக விமானத்தைப் பிரித்துக் கொண்டு, ஓர் இரதத்தில் குடந்தைக்கு ஒரு மகாசங்கராந்தியன்று எழுந்தருளு கின்றார். பாலகோமலவல்லியைத் திருமணம் புரிந்து கொண்டு இருவர் மனங்களையும் நிறைவு செய்து விடுகின்றார். தானும் திருகுடந்தையில் ஹேமமுனிவரின் தவத்தை மெச்சும் வகையில் சார்ங்கம் ஏந்திச் சார்ங்கபாணி என்ற திருநாமத்துடன் தங்கி விடுகின்றார். அரங்கநாதனைப்போலவே இவரும் கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். திருக்கோயிலின் பின் புறத்திலுள்ள பொற்றாமரைத் திருக்குளத்தின் கரையில்ஹேமமுனி 90. இதனை நினைவு படுத்தும் முறையில் இத்திருக்கோயிலில் பாதான நிேலாச சந்நிதி அமைந்துள்ளது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/54&oldid=775645" இலிருந்து மீள்விக்கப்பட்டது