உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 அருளிச் செயல்கள்-இலக்கிய இன்பம் கடவாரில்லை’’ என்று பொருள் பணிக்க, அதனை நம்பிள்ளை கேட்டு, ஆடு என்று வெற்றிக்கும் வாசகமாதலால் இந்த இராக்கதர் சாதியில் வெற்றி சொல்வாசில்லை; அதாவது, தோற்றோம் தோற்றோம்’ என்று தோல்வியைச் சொல்ல வல்லார் உளரே யொழிய வென்றோம்’ என்று வெற்றியைச் சொல்லிக் கொள்ள வல்லார் இல்லை என்று பொருள் கூறலா காதோ?’ என்ன, நஞ்சீயரும் இதைக்கேட்டு அருளி இதுவே பொருந்தும் பொருள்; இப்படியே சொல்லிக் கொள்ள அமையும்: என்று நியமித்தருளினாராம். குழமணிதுாரம்: "தடம்பொங்கத்தம் பொங்கோ’ என்ற திரு மொழியைப் போலவே இத்திருமொழியும் இலங்கை யரக்கர்களின் பாசுரமாகச் செல்லுகின்றது. தோற்றவர்கள் தங்கள் தோல்விக்கு ஈடாக ஆடுவதொரு கூத்துக்குக் குழமணிதுாரம்’ என்று பெயர். அக்கூத்தையாடுகின்ற அரக்கர்களின் நிலைமையிலேயே நின்று ஆழ்வார் இராமபிரானின் வெற்றியைப் பேசி அநுபவிக்கின்றார் ஆழ்வார். ஏத்து கின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம்; சோத்தம் நம்பி சுக்கிரீவா! உம்மைத் தொழுகின்றோம் வார்த்தை பேசீர் எம்மை உங்கள் வானரம் சொல்லாமே; கூத்தர்போல ஆடு கின்றோம் குழமணி துராமே." '{சேத்தம் - தாழ்ச்சி தோற்றச் சொல்லும் ஒரு சப்த விசேஷம்; ஸ்தோத்திரம்' என்னும் வடசொல் சோத்தம்’ எனத் திரிந்து கிடக்கின்றது என்பாரும் உளர்} 78. பெரி திரு. 10, 3: 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/60&oldid=775653" இலிருந்து மீள்விக்கப்பட்டது