உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியன் குரல் "(இராமன் ஆட்சி புரிந்த காலத்தில் உலகமே இராம மயமாக ஆய்விட்டது. i என்ஜாப்போலே இப்போது இலங்கையும் இராம நாம மயமாக ஆய்விடுகின்றது. நாக்குத் தடிப் பேறும்படி இராம நாமங்களையே சொல்லிக்கத்தாடுகின்றோம்". என்கின்றார்கள். அம்மம் உண்ண அழைத்தல்: இதையும் ஒர் இலக்கிய உத்தியாகக் கொண்டார் இந்த ஆழ்வார். பெரியாழ்வார்தாம் இத்தகைய உத்திகளைக் கையாண்டு பிற்காலப் பிள்ளைத் தமிழ் இலக்கியத்திற்கு வித்திட்டார். ஆயினும் இது பிள்ளைத் தமிழ் இலக்கிய உறுப்பாகச் சேர்த்துக் கொள்ளிப்பெறவில்லை. கண்ணபிரான் விளையாட்டில் விருப்பத்தாலே முலையுண் பதையும் மறந்து திரிகின்றான், யசோதைப் பிராட்டி அப் பிரானை விளித்து முலையுண்ணாமையை அவனுக்கு அறிவித்துத் தன்னிடம் முலையுண்ண வருமாறு நிர்பந்தித்த படியை ஆழ்வார் தாமும் அநுபவிக்க விரும்பித் தம்மை அவ்ய சோதைப் பிராட்டியாகப் பாவித்துக்கொண்டு அவனை அம்மம் உண்ணுமாறு வேண்டுவதாக நடைபெறுகின்றது. இத்திருமொழி. பெரியாழ்வார் கிருமொழியில்,8° - அரவு அணையாய்! ஆயர் ஏறே! அம்மம் உண்ணத் துயிலெழாயே என்று தொடங்கும் திருமொழியோடு ஒக்கும் இத்திருமொழி. உச்சிப்போதில் முலையுண்ண அழைத்தது. அத்திருமொழி; அந்தியம் போகில் முலையுண்ண அழைக்கின்றது இத்திருமொழி. சந்தமலர்க் குழல்தாழ தான் உகந்து ஓடி தனியே வந்துஎன் முலைத்தடம்தன்னை வாங்கிநின் வாயில் மடுத்து, چه مجمع همه مساس 19. பெ. திரு. 10. 4. 9. பெரியாழ். திரு. 2, 2 இங்கு அம்மம் தர மறுத்தற்கும் ஒரு திருமொழி உண்டு (3.1).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/61&oldid=775654" இலிருந்து மீள்விக்கப்பட்டது