உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{}3 அருளிச் செயல்கள்-இலக்கிய இன்பம் நந்தன் பெறப்பெற்ற நம்பி! நான் உகந்துண்ணும் அமுதே! எந்தை பெருமானே! உண்ணாய்;.என் அம்மம் சேமம் உண்ணாயே..' 'அம்மம்' என்பது கண்ணபிரானுடைய குழந்தைப் பருவத் திற்குத் தகுதியாக யசோதை சொல்வதொரு வார்த்தையாகும். “புவ்வா’ என்றும், பாப்பம்’ என்றும் குழந்தைகட்குச் சொல்லும் சொற்கள் போலே இதுவும் ஒரு சொல். - நான் உகந்து உண்ணும் அமுதே தேவர்கள் உண்னும் உப்புச் சாறு போலன்று யசோதைப் பிராட்டி உண்ணும் அமுதம் அமுதினும் ஆற்ற லினிய அமுத மன்றோ இது? இப்படிப்பட்ட அமுதுக்கும் அமுதுாட்டப் பாரித்து அழைக்கின்றாள். சப்பாணி கொட்டல்: இதுவும் ஒரு வித இலக்கிய உத்தியாக அமைந்து விடுகின்றது இந்த ஆழ்வார் பாசுரங்களில் குழந் தைகளின் விளையாடல்களில் சப்பாணி கொட்டுதல்' என்பது ஒரு விளையாட்டு; அதாவது ஒரு கையோடு மற்றொரு கையைச் சேர்த்துக் கொட்டுதல். இந்த விளையாட்டை அக்காலத்தில் யசோதைப் பிராட்டி பிரார்த்தித்து அது பவித்ததைப் பிற்காலத்தில் பெரியாழ்வார், - மாணிக்கக்கிண்கிணி ஆர்ப்ப, மருங்கின்மேல் ஆணிப்பொன் னாற்செய்த ஆய்பொன் உடைமணி பேணி பவளவாய் முத்திலங்க, பண்டு காணி கொண்ட கைகளால் சப்பாணி கருங்குழல் குட்டனே சப்பாணி : என்று தொடங்கும் பாசுரத்தைக் கொண்ட திருமொழியில் அநுபவித்தார். அது போலவே இந்த ஆழ்வாரும் அதே விளை யாட்டை யசோதைப் பிராட்டிநிலையில் இருந்து கொண்டு அது விக்கின்றார். பாசுரமும் யசோதைப் பிராட்டியின் பேச்சாக 8. பெரி. திரு. 10, 4: 1 '. பெரியாழ். திரு. 1. :ே 1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/62&oldid=775655" இலிருந்து மீள்விக்கப்பட்டது