உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{}5 அருளிச் செயல்கள்-இலக்கிய இன்பம் யும் மேன்மைக் குணத்தையும் அநுபவிக்கும் பாங்கில் சாழல் விளையாட்டுப் பாசுரம் அமைந்துள்ளனது. இரண்டு பிராட்டி மார் நிலையை அடைகின்றார் ஆழ்வார். ரசிப் பேசுகின்ற ஒருத்தி வாயால் எளிமைக் குணத்தையும் ஏத்திப் பேசுகின்ற மற்றொருத்தி வாயால் மேன்மைக் குணத்தையும் ஒரேகாலத்தில் அநுபவிக்கும் பாங்கில் பாசுரங்கள் அமைகின்றன. அவற்றுள் ஒரு பாசுரம் இது. ஆழ்கடல் சூழ் வையகத்தார் ஏசப் ோய், ஆய்ப்பாடித் தாழ்குழலார் வைத்த தயிர் உண்டான் காண்ஏடி: தாழ்குழார் வைத்த தயிர்உண்ட பொன்வயிறு.இவ் ஏழ்உலகு உண்டும் இடம்டைதல் சாழனே : இதில் ஒருத்தி: 'தோழி! நீ உகந்து கொண்டாடும் பெருமான் யாதொன்றிலும் பற்றுக்கோடு இல்லாதவனாக இருந்தாலன்றோ சிறப்பு? அவனுடைய வரலாறுகளை ஆராய்ந்தால் அவன் நம்மைப் போலவே பிறர் பொருள்களில் விருப்பப்படுகிறவனாகக் காணப்பெறுகின்ாறனே யல்லது ஆசையற்றவனாகக் காணப்பெற வில்லையே, ஆய்ப்பாடியில் கண்ணனாகப் பிறந்து கள்ளவழி யால் தயிர் வெண்ணெய் பால் முதலியவற்றை வாரியுண்டான் எனத் தெரிய வருவதால் இங்ங்ணம் பிறர் பொருள்களில் ஆசை யுள்ளவன் பரமபுருஷனாக இருக்கத் தகுமோ?? என்கின்றாள். மற்றொருத்தி: தோழி! திருவாய்ப்பாடியில் இடைச்சியர் சேமித்து வைத்திருந்த தயிரை அமுது செய்தான் என்பது உண்மையே; நம்மு ைய வயிறுபோலே ஏதேனும் சிலவற்றை உண்டு நிறைந்து விடுகின்ற திருவயிறோ அவனுடையது? 84 GufTFછ 10. 5, 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/64&oldid=775657" இலிருந்து மீள்விக்கப்பட்டது