உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 அருளிச் செயல்கள்-இலக்கிய இன்பம் என்ற திருப்பிரிதிபற்றிய பாசுரத்தில் இக் காட்சியைக் காணலாம். இதனைச் சிந்திக்கும்போது திருமலையில் பூதத்தாழ் வார் காட்டிய காட்சி நினைவிற்கு வருகின்றது. பெருகு மதவேழும் மாப்பிடிக்கு முன்னின்று இருங்கண் இளமூங்கில் வாங்கி, அருகிருந்த தேன்கலந்து நீட்டும் திருவேங்கடம் , (வேழம்-யானை; பிடி-பெண்யானை; கண்-கணு, தேன்-தேன் கூடு) என்பது பூதத்தார் காட்டும் காட்சி. மதம் பிடித்து மனம் போனபடி திரியும் யானைபொன்று தன் பேடையைக் காண் கின்றது. அதனை மீறி அப்பால் செல்ல மாட்டாமல் அதற்கு இனிய உணவு கொடுத்துத் திருப்தி செய்ய விரும்புகின்றது. உடனே அருகிருந்த மூங்கிற்குருத் தொன்றைப் பிடுங்கி மலைக் குகையிலுள்ள ஒரு பெருந் தேன் கூட்டில செருகிக் குலோப் ஜாமுன்’ போல், அதன் வாயில் ஊட்டுகின்றது. இந்தப் பாசுரம் திருமங்கையாழ்வாரின் பாசுரத்திற்கு அடியெடுத்துக் கொடுத் திருக்கலாம் என்று கருத இடம் உண்டு, இந்த இரண்டு பாசுரங்களின் நினைவினால் கம்பநாடன் சித்திர கூட மலையில் ஒர் அற்புதக்காட்சியினைப் படைத்துக் காட்டுகின்றான். உருகு காதலின் தழைகொண்டு மழலைவண்டு ஒச்சி முருகு நாறுசெந் தேனினை முழை நின்றும் வாங்கி பெருகு சூழ்இளம் பிடிக்கு ஒரு பிறைமருப் பியானை பருக வாயினில் கையில் நின்று , அளிப்பன பாராய். (முருகு-மணம்; நாறு-வீசுகின்ற முழை-கல் இடுக்கு பெருகு சூல்-முதிர்ந்த கருப்பம் ; மருப்பு - தந்தம்) : *झटक्लग्नक क्लछन्क्लाळ# 33; கம்பது கயோத் சித்திர. 193

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/76&oldid=775671" இலிருந்து மீள்விக்கப்பட்டது