உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 கலியன் குரல் அங்குள்ள திருக்கோயில்களில் கோயில் கொண்டிருக்கும் எம் பெருமான்களை வழிபடுவது முக்கியம் என்று கருதினர் பக்தர்கள். பெரும்பாலும் ஆழ்வார்களின் பாசுரங்கள் திருத்தல வருண னையும் அங்குக் கோயில் கொண்டெழுந்தரு 'யிருக்கும் எம் பெருமானையும் கூறுவதாக அமைந்திருப்பதைக் கண்டு மகிழ லாம். ஆகவே, நிலத்தின் இயற்கை எழில்களைக் காட்டும் வரு னனைகளை இலக்கிய இன்பத்தைக் காட்டும் இந்தப் பொழி விலும், இறைவனைக் காட்டும் செய்திகளை இறைய நுபவத்தை விளக்கும் அடுத்த பொழிவிலும் காட்டுவேன். இயற்கை வருண னைக்கு நிலத்தின் கருப்பொருள்களே கைகொடுத்து உதவு கின்றன என்பதைச் சங்க இலக்கியப் பயிற்சியுடையவர்கள் நன்கு அறிவர். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு திருமங்கையாழ்வார் காட்டும் நானில வருணனைகளைக் கண்டு மகிழ்வோம். குறிஞ்சிநிலக் காட்சிகள்: குறிஞ்சி நில வருணனையைப் பற்றிச் சிந்திக்கும்போது இமயமலை, சிங்கவேழ் குன்றம், திரு வேங்கடம், திருமாலிருஞ் சோலைமலை என்ற மலைத் திருப்பதி கள் நம் நினைவிற்கும் வருகின்றன. இத்திருப்பதிகளின் இயற்கை யழகுகளில் திருமங்கையாழ்வாரின் மனம் ஆழங்கால் பட்டதைச் சிந்திக்கின்றோம். இமய மலையில் ஆண் யானையொன்று தன் காதலியாகிய இளம் பெண் யானையை மகிழ்விக்க வேண்டி நெடுக ஓங்கி வளரும் மூங்கில் முளைகளைப் பெயர்த்து எடுத்து மலை முழைஞ்சுகளில் மிகுதியாகவுள்ள தேனிலே தோய்த்து அதன் வாயில் ஊட்டுகின்றது. வரைசெய் மாக்களிறு இளவெதிர் வளர்முளை அளைமிகு தேன்தோய்த்துப் பிரச வாரிதன் இளம்பிடிக்கு அருள்செய்யும் பிரிதிசென் றடைநெஞ்சே' களிறு - ஆண்யானை, வெதிர் - மூங்கில்; பிரசம்-தேன்; பிடி-பெண் யானை) ੋਯੋ5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/75&oldid=775670" இலிருந்து மீள்விக்கப்பட்டது