உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

钴 அருளுச் செயல்கள்-இலக்கிய இன்பம் மல்லரை அட்டு மாள கஞ்சனை மலைந்து சென்று பல்லரசு அவிழ்ந்து வீழப் பாரதப் போர்மு டித்தாய்" இது பிறிதொருவகை. பகலும் இரவும் தானேயாய் பாரும் விண்ணும் தானேயாய் நிகரில் சுடராய் இருளாகி நின்றார் நின்ற ஊர்போலும்' இது மற்றொரு வகை. வானோர் அளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம் வலியுருவின் மீனாய் வந்து வியந்துய்யக் கொண்டதண் தாமரைக் கண்ணன்.” என்பது நான்காவது வகை. இங்ங்னம் அறுசீர் விருத்தத்தை மட்டிலும் எடுத்துக் கொண்டால் பல வகைகளைக் கான முடிகின்றது. இங்ஙனம் பல. இயற்கை வருணனை: எங்கெங்கெல்லாம் அழகு உள்ளதோ அங்கங்கெல்லாம் இறைவனும் இருப்பதாகக் கொள்வது தமிழரது கொள்கை. இக்கொள்கையே முருகன்’ என்ற தமிழ்க்கடவுளின் தத்துவம் என்பதைத் திரு. வி. க. போன்ற இறையன்பு கொண்ட பெரியார்கள் விளக்கிப்போயுள்ளனர். இக்கொள்கையையொட் டியே பக்தர்களும் இயற்கையில் தோய்ந்து இறைவனை அநுப விக்கின்றனர். காட்டிலும், நாட்டிலும், மண்ணிலும், விண்ணிலும் எல்லா இடங்களிலும் காணும் இயற்கையழகுகளில், எம்பெரு மானின் அழகுக் கூறுகளில் மனத்தைப் பறிகொடுக்கின்றனர், இத்தகைய மன நிலையைக் கொண்ட ஆழ்வார்களும் இயற்கை அழகினைத் தமது உள்ளத்து அழகுடன் குழைத்துத் தம் மனம் விரும்பும் கடவுள் வடிவத்தின் தெய்விக அழகாகக் காண்கின் றனர். இத்தகைய இயற்கை அழகுகள் வாய்ந்த தலங்கள் தாம் திவ்விய தலங்கள்’ என்றும், திருப்பதிகள் என்றும் மதித்து 28, பெரி. திரு, 4.6:6 25 டிெ, 7; 5:58 0ே டிெ, 8; 8;1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/74&oldid=775669" இலிருந்து மீள்விக்கப்பட்டது