உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

భీశ్రీ கலியன் குரல் அருளிச் செய்த திருப்பாசுரங்களுள் ஒன்று இது; கூர்மாவதாரத் தில் ஈடுபடும் நிலை இது. எழுசீர் விருத்தயாப்பில் அமைந்து சந்த தயம் கொழிக்கும் இத்திருப்பாசுரம் நம்மைப் பக்தியின் கொடு முடிக்கு இட்டுச் செல்வதை நாம் அநுபவித்து மகிழலாம். முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற அளப்பு:அரிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண் காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு சிவளர்த்ததனால் பயன்பெற்றேன்; வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கி னாளே 26 இது தாய்ப் பாசுரம், ஆழ்வார் தாய் நிலையிலிருந்து வேற்று வாயாலே தன் மகள் நிலையைப் பேசுகின்றாள். சாதாரணச் சொற்கள்தாம்; அவை எண்சீர் விருத்தத்தில் அமைந்து நம்மைப் பக்தியதுபவத்தில் ஆழ்த்துவதை அநுபவித்து மகிழலாம். கற்பனைப்பற்றிக் கூறும்போது விருத்தமெனும், ஒண்பா விற்கு உயர்கம்பன், என்று மொழிவர். விருத்தயாப்பின் பல்வேறு வகையின் மர்மங்களையும் இதயத் துடிப்புகளையும் நன்றாக இனிது உணர்ந்து கம்பன் அவற்றை நன்கு அடக்கி ஆண்டுள்ளான் என்று கூறுவர் திறனாய்வாளர். 'நாலுகவிப் பெருமாள்” என்ற விருது பெற்ற கலியனும் விருத்தயாப்பின் உயர்நிலையை நன்கு கண்டறிந்து கையாண்டுள்ளார். கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்துபோய் சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து: இஃது ஒருவகை 26. திருதெடுந் 143 27. பெரிதிரு 5 : :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/73&oldid=775668" இலிருந்து மீள்விக்கப்பட்டது