உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 அருளிச் செயல்கள்-இலக்கிய இன்பம் பழகிப் பழகி உருவழிந்து மெருகேறிப் போன சொற்களும் கவிதையில் ஏறும்போது நம்மையே ஏமாற்றிப் புத்தம் புதியன வாய்த் தோன்றுகின்றன. அச்சொற்கள் பேச்சுவழக்கிலும் உரை நடையிலும் தாம் பெறும் நிலையை விடக் கவிதையில் உயர்ந்த பதவியைப் பெறுகின்றன; உயர்ந்த அதிகாரத்தையும் அடைகின்றன. சொற்களுக்கு இந்த வேகத்தையும் வலுவையும் ஊட்டுவதற்கு யாப்பு முறை கவிஞனுக்கு ஒரளவு துணையாக உள்ளது. சதுரங்கக் காய்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் உல வுங்கால் அவை புதிய ஆற்றலைப் பெறுவன போலவும், துப் பாக்கியினுள் இருக்கும் தோட்டாக்கள் புதிய தொரு வேகத்தைப் பெறுவன போலவும், கவிதையினுள்ள சொற்களும் ஒருவித யாப்பு முறையில் அமைந்து அவ்வவற்றிற்குரிய இடங்களிலிருக் கும்பொழுது புதிய ஆற்றலைப் பெறுகின்றன. இதனால்தான் மேற்புலத் திறனாய்வாளர்கள் கவிதையைச் சிறத்த சொற்களைச் ψ gp6.0 massifiéb” (The best words in the best order) அமைக்கும் கலையென்றும், மானிட உணர்ச்சிகளைச் சரியான வடிவத்துடனும் ஒலிநயத்துடனும் அமைக்கும் வெளியீடே." (The expression of human emotions in perfect form and rhythm) argårgth & gasif. செருமிகு வாள்ளயிற்ற அரவுஒன்று சுற்றி திசைமண்ணும் விண்ணும் உடனே வெருவர வெள்ளைவெள்ளம் முழுதும் குழம்ப, இமையோர்கள் நின்று கடைய பருவரை ஒன்றுநின்று முதுகில் பரந்து சுழலிக் கிடந்து துயிலும் அருவரை அன்னதன்மை அடல்ஆமை ஆண் திருமால் நமக்கு ஒர் அரனே." திருமங்கையாழ்வார் திருமால் அவதாரங்களில் ஈடுபடுங்கால் 52;Tப்ெ திரு 12.4:2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/72&oldid=775667" இலிருந்து மீள்விக்கப்பட்டது