உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கலியன் குரல் கொண்ட வனப்புடையது (3): எங்கும் தடாகங்கள் நிறைந் திருப்பது (5); சந்தன மரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்தது (8); தடாகங்கள்தோறும் உரம் பெற்ற மலர்க்கமலம் உலகளந்த சேவடிபோல் உயர்ந்து காட்டும்.’’ சோலைகளில் வண்டுகள் களித்து இசைபாடும்; அங்கிருக்கும் கழனிகளில் கயல் மீன்கள் நிறைந்து கிடக்கும்; இம்மீன்கள் துள்ளிப் பாய்ந்து தடாகங்களி லும் ஏனைய நீர்நிலைகளிலும் தாமரை மொட்டுகளின்மீது விழ, அவை மகிழ்ச்சி அடையும் (9); தாரா என்ற பறவைக் கூட்டங் கள் வயல்களில் காணப்பெறும் (4). சிங்கவேழ் குன்றத்தின் சூழ்நிலை ஆழ்வார் பார்த்த அன்று இருந்ததைப்போல் இன்றும் உள்ளது. அடர்ந்த காடுகள் நெருங்கி இருப்பது இத்திருமலை. அச்சந் தரும் ஒரு சூழ்நிலை யைக் காட்டுகின்றார் ஆழ்வார். ஒய்ந்தமாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால் தேய்ந்த வேயும் அல்லது இல்லாச் சிங்கவேழ் குன்றமே. 7 Fஓய்ந்த- களைத் துப் போன; மா-விலங்குகள்; அழல்நெருப்பு; வேய்-மூங்கில் 1 * அலைந்து திரிந்து களைத்துப் போன மிருகங்களை இங்குக் காணலாம்; மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்ந்து நெருப்புப் பற்றி எரிந்து குறைகொள்ளியாக இருக்குமாற்றைச் சிறப்பாக இங்குக் காணலாம். இன்னும் ஆழ்வார், காய்த்தவாகை நெற்றொலிப்பக் கல்லதர்வேய்ங் கழைபோய் தேய்த்த தீயால் விண்சிவக்கும் சிங்கவே.ழ் குன்றமே. : (கல்.அதர்-கல்வழி; வேய்ங்கழை-குழல் மூங்கில்) கே. பெரியாழ். திரு. 1.5:5, 38. பெரி. திரு. 1, 7, 37. கடி 1, 7:3 38. இ. 1. 7. :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/79&oldid=775674" இலிருந்து மீள்விக்கப்பட்டது