உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 அருளிச் செயல்கள்-இலக்கிய இம்பம் என்று காட்டுவார். வாகை நெற்றுக்கள் காற்று வீசுவதால் ஒலிக்கின்றன. மூங்கில் உராய்வதால் உண்டான செந்தி விண் முழுவதையும் சிவக்கச் செய்கின்றது’ என்கின்றார். சில சமயம் சுழல்காற்று சிவந்த நெருப்பை வாரிக் கொண்டு விண்முழுதும் ஒடிப் பரவுகின்றது (5); மூங்கில்கள் நெருப்பில் வேகின்றபோது ஒலி உண்டாகின்றது; அந்த நெருப்பில் கற்களும் வேகின்றன (7); மேலும் அந்தம லைச் சூழ்நிலையில் நெல்லி மரங்கள் கல் விடைகளில் முளைத்து வளர்ந்து அவற்றினிடையே வேரோடு வதால் அந்தவேர்கள் பருத்துப் பாறைகளையும் பிளந்து தள்ளு கின்றன. (9), இந்தச் சூழ்நிலையை நான் மலையின் மீது மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தபோது கண்டு வியந்தேன் (1969). இங்ங்னம் அச்சத்தை விளைவிக்கும் அடவியில் யானை, குதிரை, சிங்கம், புவி முதலிய கொடிய விலங்குகள் இங்குமங்கும் ஓடியலைந்து ஒய்ந்து நிற்கின்றன. (3); மூங்கில் புதர்களினின் ஆறும் புலிகள் பெருவழியில் வந்து சேர்ந்து யானைகள் நடமாடின அடையாளங்களைக் கூர்ந்து ஆராய்கின்றன (2); அவை உலாவின இடங்களைத் தேடித் திரிகின்றன. மற்றும் இங்கு நண்பகலில் பகலவன் காலும் வெப்பம் தாங்கமாட்டாது நாய்க ளும் கழுகுகளும் அவ்விடத்தில் நடக்கும்பொழுது கால் தடு மாறித் திண்டாடுகின்றன (4); எம்பெருமானின் சந்நிதான மகி மையினால் அவ்விடத்து மிருகங்களும் பகவத் பக்தியில் திளைக் கின்றன. சிங்கங்கள் களிறுகளைக் கொன்று அவற்றின் கோடு களைப் பிடுங்கிக் கொண்டு வந்து எம்பெருமான் திருவடிகளில் வைத்து பகவதாரான ம் நடத்துகின்றன (1). இந்தச் சூழ்நிலையில் மக்களின் நடமாட்டத்தையும் பற்றிப் பேசுகின்றார் ஆழ்வார். - மலைத்தசெல் சாத்தெறிந்த பூசல் வன்துடி வாய்கடுப்ப சிலைக்கை வேடர் தெழிப்பறாத 39. பெரி.திரு. 1. 7: 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/80&oldid=775676" இலிருந்து மீள்விக்கப்பட்டது