உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கலியனின் வாழ்வும் வழியும் கேயர்களே, வணக்கம். பல்கலைக்கழகம், சொற்பொழிவுகள் நிகழ்த்துமாறும், எனக்கு வாய்ப்பான நாட்களைத் தெரிவிக்கு மாறும் கேட்டது. செயல் துடிப்பும் அதனை ஆற்றும் திறனும் மிக்க புதிய தமிழ்ப்பேராசிரியர்துறைத்தலைவர் டாக்டர் ஆறு, அழகப்பனின் அன்புதான் இதற்குக் காரணம் என்பதை ஊகித்து அறிந்து கொண்டேன். வள்ளல் அண்ணாமலைச் செட்டியார் அவர்களால் சுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன்பு தோற்றுவிக்கப் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ்வளர்ச்சிக்காகத் தோற்றுவிக்கப் பெற்ற பல்கலைக்கழகம் என்ற எண்ணத்தை மக்களிடம் நிலைநாட்டியது. இயற்றமிழையும், இசைத்தமிழையும் அன்றுமுதல் இன்று வரை இருகண்களெனப் போற்றி வளர்த்து வருவதை இந்திய மண்ணில் பிறந்த மக்கள் அனைவருமே நன்கு அறிவர். புதிதாக நியமனம் பெற்ற டாக்டர் ஆறு, அழகப்பன் நாடறிந்த நாடக ஆசிரியர், நாடக இயக்குநர் என்பதை நாம் அறிவோம். இவர்காலத்தில் நாடகத் தமிழும் பல்கலைக்கழக வளாகத்தில் வேர்விட்டு வளரும் என்பதை நாம் உறுதியுடன் எதிர்பார்ப்போமாக. பதினைந்து ஆண்டுகளாக உறங்கிக் கிடந்த பல்கலைக் கழகச் சிறப்புச் சொற்பொழிவுகள் என்ற திட்டத்தைத் திருப்பள்ளி எழுச்சியால் எழச்செய்து செயற்படுத்திய புதிய தமிழ்ப் பேராசிரியருக்குத் தமிழ் கூறு நல்லுலகம் மிகவும் கடமைப்பட்டி ருக்கின்றது. கரும்பு தின்னக் கூலிகொடுக்கும் இப்பல்கலைக் கழகத்தாருக்கும், தமிழ்த்துறையினருக்கும் என் உளங்கனிந்த 1. குறள் - 399 (பரிமே. உரை) சிவப்பிரகாசர், வெங்கைபுலாகண்ணி - 60, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/8&oldid=775675" இலிருந்து மீள்விக்கப்பட்டது