உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலியன் குரல், நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். திருவேங் கடவன் பல்கலைக் கழகத்தில் ஒய்வு பெற்று ஏழாண்டுகள் கழிந்த பிறகு மூன்று திங்கள் விருந்துப் பேராசிரியராகப் (Visiting Professor) Jourăşă 3&#sort,.6955 Giurgog இந்த அழைப்பு வந்தது. 'பக்தனே, சிதம்பரம் சென்று கோவித்தராசனைச் சேவித்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வைணவ இலக்கியம் - தத்துவம் பற்றி மூன்று பொழிவுகள் திகழ்த்தி வா’ என்று ஏழுமலையப்பனே என்னைப் பணித்ததாகக் கருதி இங்கு வந்துள்ளேன். கலியன் குரல்’ என்ற தலைப்பில் என் பேச்சுகளை அமைத்துக்கொண்டு (1) கலியன் அகழ்வும் வழியும் (2) அருளிச்செயல்களில் இலக்கிய இன்பம், (3) அருளிச் செயல்களில் தத்துவக் கருத்துகள் - என்ற மூன்று தலைப்பில் உரைநிகழ்த்தத் திட்டமிட்டுள்ளேன். அவற்றுள் முதல்பொழிவு இன்று நடைபெறுகின்றது. தலைப்பைத் தேர்ந்தெடுத்த காரணங்கள்: இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தமைக்குக் காரணங்கள் உள்ளன. முதலாவது இந்தப் பல்கலைக் கழகம் (அண்ணாமலைப் பல்கலைக் கழகம்) திருமங்கையார் பிறந்த திருக்குறையலூரும் வாழ்ந்து, ஆட்சி புரிந்து, ஆழ்வாரான நிலப்பகுதிக்கு அருகி லுள்ளமை. இரண்டாவது: இவர் ஆண்ட நிலப் பகுதியிலேயே திருநாங்கூர்த்திருப்பதிகள் பதினொன்றும், திருமங்கையாழ் வார் மிகவும் ஈடுபாடுகொண்ட திருவாலி - திருநகரி என்ற திருப்பதியும் உள்ளமை. மூன்றாவது: வயலாலி மணவாளன் ஆழ்வாரை ஆட்கொண்டமை. நான்காவது: குமுதவல்லி நாச்சியார் வளர்ந்த இடமான கிருவெள்ளக்குளம் என்ற திவ்வியதேசமும் (திரு நாங்கூர்த்திருப்பதிகளுள் ஒன்று) அருகில் உள்ளமை. இப்பகுதித் திருத்தலங்களை மங்களாசாசனம் செய்த பதினான்கு திருமொழிகள் உள்ளன. ஐந்தாவது: சைவமும் வைணவமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/9&oldid=775688" இலிருந்து மீள்விக்கப்பட்டது