உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ í அருளிச் செயல்கள்-இலக்கிய இன்பம் வருகின்றது (8). இதனால் வெற்றிலைத் தோட்டங்கள், பாக்குச் சோலைகள், நீர்வாய்ப்புள்ள கழனிகள் இவற்றிற்குக் குறைவில்லை (9). சிறுபுலியூர் " சலசயனப் பெருமாள் திருக்கோயில் கொண்டுள்ள சூழ்நிலை இது: வெள்ளம்முது பரவைத்திரை விரிய கரைஎங்கும் தெள்ளும்மணி திகழும் சிறு புலியூர். கி "கடல் வெள்ளம் அலையெறிந்து நவமணிகளைக் கொண்டு வந்து கொழிக்கும் நீர்க் கரைகளையுடையது சிறுபுலியூர்' என்கின்றார் ஆழ்வார். . அறையும்புனல் ஒருபால்; வயல் ஒருபால்;பொழில் ஒருபால்; சிறைவண்டுஇனம் அறையும்.சிறு புலியூர்.கி 44. இத்திருத்தலம் மாயூரம் - காரைக்குடிகிள்ை இருப்பூர்திவழி யில் கொல்லுமாங்குடி நிலையத்திற்குக் கிழக்கே ஒருகல்தொலை விலுள்ளது. எம்பெருமான் புலிக்கால் முனிவருக்கு (வியாக்கிரக பாதர்) பாலசயனமாய்ச்சேவைசாதித்த தலம். சலம் - மாயை. உறங்குவான்போல் யோகு செய்வதற்குக் கொண்ட சயன மாதலால் சல சயனம்’ (மாயப் படுக்கை) எனப்பட்டது. மாமல்ல புரத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் தலசயனன்? (தரையில் படுத்திருப்பவன்) என்பதையும் நினைவு கூரலாம். 45 பெரிதிரு 7, 9: 1 46. பெரி. திரு. 7, 9; 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/88&oldid=775686" இலிருந்து மீள்விக்கப்பட்டது