உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலியன் குரல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 அருளிச் செயல்கள்-இலக்கிய இன்பம் கண்டு வணங்கும் கண்ணபுரத்து எம்பெருமான் வண்டு நறுந் துழாய்வந்து ஊதாய் கோல் தும்பி" (விண்ட~மலர்ந்த, ஊதி-ஒலிசெய்து; அண்டம்-உலகம்; நறுமணம் மிக்க ! தும்பி’ என்பது வண்டுகளில் ஒருவகை; கருவண்டு என்றும் கூறுவர். மரக் கொம்புகளில் மதுவுக்காகத் திரியும் இயல்பு பற்றிக் கோல் தும்பி’ (கோல்-கிளை) என்று விளித்துப் பேசு கின்றாள் ஆழ்வார்நாயகி. திறந்து கிடந்த வாசல் எல்லாம் திரியுமாப்போலே விண்டமல்ர்கள்தோறும் நீ ஊதித் திரிவத னால் என்ன பேறு பெறப் போகின்றாய்? அற்பமாயும் நிலை யற்றதுமாயும் உள்ள மதுவையுடைய இம்மலர்களிலே ஊதித் திரிவதை விட்டு, திருக்கண்ணபுரத்தில் சந்நிதிபண்ணிக் கொண் டிருக்கும் எம்பெருமானுடைய திருத்துழாய் மாலையிலே உன் சுற்றத்தாருடன் தங்கியிருந்து அங்குள்ள பரிமளத்தை இங்குக் கொணர்ந்து ஊதுவாயாகில் மிகுதியும் நிலையானதுமான மதுவைப் பருகலாம்? என்கின்றாள் பரகாலநாயகி. வண்ணம் திரிவும் மனம்குழைவும் மானம் இலாமையும் வாய்வெளுப்பும் உண்ண லுறாமையும் உள் மெலியும் ஒதநீர் வண்ணன் என்பானொருவன் தண்ணந் துழாய் என்னும் மாலைகொண்டு சூட்டத் தணியும். ' (வண்ணம்-மேனிநிறம்; திரிவு-மாறுபாடு; சூழைவு-தளர்ச்சி, உள்மெலிவு - அறிவு சுருக்கம்) 5. பெரி. திரு 9.15 54. நாச். திரு. 12:7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலியன்_குரல்.pdf/92&oldid=775691" இலிருந்து மீள்விக்கப்பட்டது