பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
15
 

வது தொலைதூரத்தில் உள்ள பொருள்கள் சிறியதாக, ஆனால், தெள்ளத் தெளிவாகத் தெரிவதையும் அவர் கண்டார்.

ஆனால், இரண்டு கண்ணாடி வில்லைகளும் சேர்ந்து செய்யும் வியப்பு மிகுந்த விந்தைகளை, முதன் முதலில் மேற்கூறிய டச்சுக்காரரே எதிர்பாராமல் தற்செயலாகத் தமது சோதனைக்கு உட்படுத்திப் பார்த்து மகிழ்ந்தார்.

இந்த டச்சுக்காரர் செய்த ஆச்சரியமான கண்டுபிடிப்பு டிஸ்கனி நகரிலே வாழ்ந்த விஞ்ஞானியான கலீலியோவுக்கு ஒரு வியப்பாக இருந்தது. அவர் அந்த டச்சுக்காரரிடம் வந்து அவர் செய்து வைத்திருந்த அந்த மூக்குக்கண்ணாடியின் விவரங்களைக் கேட்டறிந்தார்.

வான்வெளியைப் பற்றி ஏற்கனவே ஆராய்ச்சி செய்து வந்த கலீலியோவுக்கு, இந்த மூக்குக் கண்ணாடியின் வியப்பைக் கண்டுணர்ந்த டச்சுக்காரரின் முயற்சி ஒரு முன்னுதாரணமாக இருந்தது.

அந்த முயற்சியின் வெற்றியைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட கலீலியோ, அதற்கு மேலும் அவர் வான் வெளியிலே சஞ்சரிக்கும் நட்சத்திரங்களை நேரிலே காண்பதில் தனது ஆராய்ச்சியைப் பயன்படுத்தி அவர் பெரிய வெற்றியைக் கண்டார். அதனால், தன்னால் கண்டு பிடிக்கப்பட்ட பெரிய லியப்பான செயலைக் கண்டு எண்ணி யெண்ணி அவர் மகிழ்ச்சிப் பெற்றார்.

அந்த விந்தை மிகு விஞ்ஞான வானியல் ஆய்விலே வெற்றி கண்டவரின் முழுப்பெயரி என்ன தெரியுமா? கலீலியோ அலீலி என்பது தான்.

சிறுவனாக இருந்த அவர், வாலியரானதும் தனது பெயரிலே உள்ள கலீலியோ என்ற முதல் சோல் மட்டுமே