பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவயவச் சீரியல்

230

அவயவச் சீரியல்

பாகம் இல்லாமல் போகலாம். ஐந்தாவது இடுப்பு முள் எலும்பின் வில்லும் கட்டையும் (Arch and body of the fifth lumbar vertebra) சேராமலிருந்து உடல் முன்னுக்கு வளைந்து போகலாம் (Spondilolisthesis). விலா எலும்பு ஒன்று கழுத்தில் மிகுதியாக இருக்கலாம். விலா எலும்புகள் ஒன்றோடொன்று சேர்ந்துமிருக்கலாம்.

உடம்பின் மேல்பாகத்தில் சொத்தைக்கை, எலும்பு எண்ணிக்கைக் குறைவு, நீளக் குறைவு, விரல்கள் எண்ணிக்கையில் கூடுதல் அல்லது குறைவு, விரல்கள் சேர்ந்தும் மூட்டுக்கள் அசைவு இல்லாமலும் இருத்தல் ஆகியவை காணப்படலாம்.

உடம்பின் கீழ்ப்பாகத்தில் இடுப்பு மூட்டு விலக்கு, முழங்கால் மூட்டு விலக்கு, பாதத்தில் வளைவுண்டாகி உள்ளங்கால் உட்புறமாக வளைதல், எலும்புகள் நீளக் குறைவு, பகுதிக் குறைவு, விரல்கள் எண்ணிக்கை மிகுதி, சேர்ந்திருத்தல் முதலியன உண்டாகலாம்.

பிறவிக் குறைகள் : குருத்தெலும்பு பிறவியிலேயே குறைந்து போகலாம் (Achondroplasia), அல்லது எலும்புக் கூடு கருவில் வளராது இருந்துவிடலாம். இக் குறைகள் சில வேளைகளில் பிறந்தவுடனும், சில வேளைகளில் சில காலங்கழித்தும் வெளித் தோன்றலாம். இக்குறைகள் உள்ள குழந்தைகள் குட்டையாயும் நீளமான மேல் உறுப்புக்கள் உடையனவாயுமிருக்கும். இக்குறைபாடு முதல் இரண்டு ஆண்டுகளில் வெளித்தோன்றும்.

குருத்தெலும்பு நன்றாக வளராமல் நொய்மையான எலும்பாக இருந்துவிடும். அத்தகைய எலும்பு எளிதில் உடையும் தன்மை யுடையது.

பிரசவக் குறைகள் : பிரசவ வேளையில் தலை வெளிவரும்போது, கழுத்து நெருங்கிக் கழுத்து மூலம் வரும் நரம்புகள் சிறிது கிழிந்து போகலாம் (Erbs Palsy). மேல் நரம்புகள் கிழிந்தால், தோள் நெஞ்சின் பக்கம் தொங்கும். உள்ளங்கை பின்புறம் திரும்பியிருக்கும். தன் கையால் தன் தோளைத் தொட முடியாது. கீழ் நரம்புகள் கிழிந்தால், கைத்தசைகள் வேலை செய்யா. விரல்களை விரிக்க முடியாது. கட்டை விரல் ஆள்காட்டி விரலுடன் சேராமல் இருக்கும். பிறந்தவுடனே சிகிச்சை செய்தால் நன்கு குணப்படும்; சில ஆண்டுகள் ஆன பிறகும் குணப்படுத்தலாம்.

பிட்டம் உதயமாகித் தலை பின்னால் வரும்போதும், அல்லது தலை உதயமாகி வரும்போது வழி குறுகியிருக்கும்போதும் மூளை நரம்புகள் ஊனமடையும். அதனால் கை கால்கள் கட்டைபோல் விறைப்பாக இருக்கும். இக் குழந்தை சுறுசுறுப்பில்லாமலும் புத்திக் குறைவாகவு மிருக்கும். இவர்களைச் சுமுகமாக வளர்த்தால் ஏறக் குறையப் பயன்படுவர்.

குழந்தை பிறந்து ஒரு வாரமாவதற்குள் கழுத்திலுள்ள ஸ்டெர்னோ மாஸ்டாயிடு (Sterno Mastoid) என்னும் இரண்டு தசைகளுள் ஒன்று மட்டும் வேலை செய்வதால் அப்பக்கத்துக் கழுத்துக் குறுகி, முகம் அடுத்த பக்கம் மேற்பக்கமாகத் திரும்பிப் பின் மண்டை எலும்பின் (Occipital) அருகிலிருக்கும். அப்பக்கத்திலே கழுத்து நோவும் கடினமான வீக்கமும் உண்டாகும். பிறவியிலேயே தசை குறுகியிருப்பதாலும், பிரசவத்தில் கழுத்து நெருங்கி இரத்தக்குழாயில் ஊனம் உண்டாவதாலும் இவ்வாறு ஏற்படலாம் (Torticollis). இப்படி ஏற்படும்போது குழந்தையின் தலையைத் தூக்கி நிமிர்த்திக் கழுத்தை மறுபக்கம் சாய்த்து மெதுவாக நாளடைவில் தசையை நீட்டவேண்டும். ஓர் ஆண்டு ஆனபிறகு சிகிச்சை செய்வதானால் தசையை நீட்டிச் சிறு ஆப்பரேஷன் செய்து குணப்படுத்தலாம். சிகிச்சை செய்யாதிருந்துவிட்டால் தசைகளின் மேலுறையும் கழுத்தின் சவ்வும் சுருங்கிக் கழுத்திலிருக்கும் முதுகெலும்புகளிலும் கோணல் ஏற்படும்.

இடுப்புப்பூட்டு விலக்கு (Congenital dislocation of hip) : இது சாதாரணமாகப் பிறவியிலேயே ஏற்படுகிறது. பிறந்து இரண்டு மூன்று மாதமானபிறகு பிறவியிலேயே இருபுறமும் பூட்டு விலகி யிருத்தல்

பிறவியிலேயே இருபுறமும் பூட்டு விலகியிருத்தல்

தொடைகளுக்கிடையேயுள்ள இடம் மிகுந்தும், குழந்தை காலைத் தூக்கி விளையாடாமலும் இருந்தால் வைத்தியரிடம் காட்டவேண்டும். சிசுவாயிருந்தால் இரண்டு வருடம் சிகிச்சை செய்து குணப்படுத்தலாம். வயது ஆறு ஏழு ஆகிவிட்டாலும், இடுப்புப் பூட்டை உள்ளே தள்ளிவைக்க முடியாமற் போனாலும் ஆப்பரேஷன் செய்து குணப்படுத்தவேண்டும்.

கோணல் பாதம் (Talipes) : சில வேளைகளில் கருவில் ஆறாவது வாரத்தில் சில மாறுதல்கள் ஏற்படுகின்றன.

பிறவியில் வளைந்த பாதம்

அதனால் குழந்தை பிறந்தபின் உள்ளங்காலை ஊன்ற முடியாமல் போகிறது. குதிக்கால் தூக்கியிருக்கும். பிறந்து ஒரு வாரமாவதற்குள் சிகிச்சை தொடங்கவேண்டும். நோவு இல்லாமலிருக்கும் பொருட்டு மயக்க மருந்து கொடுப்பதுண்டு. மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இது இன்றியமையாதது. சிகிச்சை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரங்கட்கு ஒரு முறை வீதம் 4-6 மாதங்கள் செய்யவேண்டும். காலை நன்றாகத் திருத்திய பிறகு பிறவியில் வளைந்த பாதம் தக்க சோடுகள் செய்து அதை இரவும்பகலும் அணியச் செய்யவேண்டும். இவ்வாறு இரண்டு மூன்று ஆண்டுகள் செய்தால் குண-