பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/532

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆஸ்திரியா

484

ஆஸ்திரியா

தட்பவெப்பநிலை ஏறத்தாழச் சுவிட்ஸர்லாந்திலுள்ளதைப்போலவே இருக்கிறது. கோடைக்காலத்தில்மிகுந்த வெயிலும், குளிர் காலத்தில் அதிகக் குளிரும் மிகுதியான மழையும் உண்டு. முக்கியமான ஆறு டான்யூப். தலை நகரான வியன்னா, டான்யூப் கரையில் அமைந்துள்ளது.

டான்யூப் ஆறு
உதவி : ஆஸ்திரிய தூதுவர் மையம், புது டெல்லி.

வியன்னாவில் ஆண்டுதோறும் 68 செ. மீ. மழை பெய்கிறது. ஜனவரியில் 29° பா.வும், ஜூலையில் 67.3° பா.வும் வெப்பநிலை. இங்குச் சிற்சில சமயங்களில் 69° பா. வரை வெப்பநிலை உயர்கிறது.

ஆஸ்திரியாவில் இரும்புத்தாது மண்ணும் சிறிதளவு நிலக்கரியும் கிடைக்கின்றன. செம்பு, நாகம், மாக்னசைட்டு, உயர்தரமான பென்சில் கரி முதலியவை இங்குக் கிடைக்கும் மற்றத் தாதுப்பொருள்கள். நீர்வீழ்ச்சிகளின் உதவியைக்கொண்டு மின்சாரசக்தி உற்பத்தியாக்கப்படுகிறது. இந்நாட்டுக் காடுகளிலுள்ள மரங்களின் கூழ் காகிதம் செய்யப் பயன்படுகிறது. வேலைக்கான மரங்கள் இங்கு மிகுதியாக அகப்படுகின்றன.

ஆஸ்திரியா கைத்தொழிலில் முன்னேறிய நாடாயினும் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர்

வியன்னா நகர்
உதவி : ஆஸ்திரிய தூதுவர் நிலையம், புதுடெல்லி.

வேளாண்மை செய்பவர். கோதுமை, ரை, பார்லி, ஓட்ஸ், பீட்கிழங்கு, உருளைக்கிழங்கு முதலியவை முக்கிய விளைபொருள்கள். ஆடுமாடுகள், குதிரைகள், பன்றிகள் முதலியவை வளர்க்கப்படுகின்றன. ஜவுளியும், இரும்பு, எஃகு பொருள்களும், மோட்டார் கார்களும் இந்நாட்டு முக்கிய உற்பத்திப் பொருள்கள்.

இந்நாட்டிலுள்ள அழகுவாய்ந்த மலைவளங் காண வரும் பிரயாணிகளுக்கு வசதிகள் செய்து கொடுப்பதனால் மிகுந்த வருவாயுண்டு.

ரெயில்வே முழுவதும் அரசாங்கத்தாராலேயே நடத்தப்பெறுகிறது. சில பாகங்களில் ரெயில் மின்சாரத்தால் ஓடுகிறது ; நிலக்கரி மிகுதியாகக் கிடைக்காததே இதற்கு முக்கியக் காரணமாகும். டெலிபோன், தந்தி, ரேடியோ வசதிகளால் இந்நாடு மற்ற நாடுகளோடு இணைக்கப்பட்டுள்ளது. வியன்னா, கிராஸ், இன்ஸ்புருக் என்னும் மூன்று நகரங்களிலும் பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. இந்நாட்டிலுள்ள பெரும்பாலோர் ரோமன் கத்தோலிக்கர்கள் (88-27%). 1951-ல் இந் நாடு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சோவியத் ரஷ்யா ஆகிய நான்கு வல்லரசுகளின் ஆதிக்கத்துள் இருப்பதால் இதற்கெனத் தனிப்படை இல்லை.

முக்கியமான நகரங்கள் (மக்: 1951-ல்) வியன்னா: 17,60.784; கிராஸ் : 2.26.271; லின்ட்ஸ்: 1,85,177; சால்ஸ்பர்க்: 1.00.096; இன்ஸ்புருக்: 94,599.

வரலாறு: டான்யூப் நதியின் மத்திய தீரத்தில் இருந்த ஜெர்மானியர்களை எதிர்த்துச் சார்லமேனும், ஹங்கேரியர்களை எதிர்த்து II-ம் ஆட்டோவும் செய்த போர்களின் பயனாக ஜெர்மனிக்குத் தென்கிழக்கே ஆஸ்ட்மார்க் என்னும் ராணுவக் குடியேற்றம் தோன்றிற்று. இதுவே பிற்காலத்திய ஆஸ்திரிய நாடு.

1273-ல் ஹாப்ஸ்பர்க் வமிசத்தை நிறுவிய ருடால்பு என்பவன் ரோமானியர்களுடைய மன்னனாகத் தேர்ந் தெடுக்கப்பட்டான். அவன் பொஹீமியர்களுடைய ஆதிக்கத்திலிருந்து ஆஸ்திரியாவை விடுவித்தான். 1278-ல் ருடால்பு ஆஸ்திரிய நாட்டை ஆளத்தொடங் கியதிலிருந்து 1437-ல் V-ம் ஆல்பர்ட் புனித ரோமானியப் பேரரசனானவரையில், ஹாப்ஸ்பர்க் வமிசம் பல அரசியல் ஏற்பாடுகளால் மத்திய ஐரோப்பாவில் பெரிய ஆதிக்கத்தை நிறுவிவந்தது. அப்பொழுதிலிருந்து 1918 வரையில் எவ்வளவோ இடையூறுகளையும் தாண்டி ஹாப்ஸ்பர்க்குகள் தங்கள் சாம்ராச்சிய அதிகாரத்தைக் காப்பாற்றிக்கொண்டே வந்தனர்.

1453-ல் கான்ஸ்டான்டிநோபிளை வென்ற துருக்கர்கள் ஹங்கேரியின் பெரும்பகுதியை ஆக்ரமித்துக் கொண்டனர். ஆஸ்திரியா, முஸ்லிம்களை எதிர்த்துக் கிறிஸ்தவ மதத்தைக் காப்பாற்றும் வேலையில் ஈடுபட்டது. 1526-ல் மோஹாக் போரில் துருக்கர்கள் பெற்ற வெற்றி ஹங்கேரியர்களுடைய பலத்தை நன்றாக ஒடுக்கிவிட்டது. அப்போது ஹங்கேரியில் எஞ்சிய பகுதியையும் பொஹீமியாவையும் ஹாப்ஸ்பர்க்குகள் தங்கள் ஆதிக்கத்திற்கு உட்படுத்திக்கொண்டனர்.

16ஆம் நூற்றாண்டில் பிராட்டெஸ்டென்டுக் கொள்கை பரவியபோது ஆஸ்திரியாவும், பவேரியாவும், ரைன்லாந்தும் ரோமன் கத்தோலிக்கச் சமயத் திற்குத் துரோகம் செய்யவில்லை. இந்நிலையில் V-ம் சார்லஸ் (1519-1555) பேரரசனது ஆட்சி குறிப்பிடத் தக்கது. ஆவனது ஆட்சி மிகப் பரந்திருந்ததால் அவன் தற்காப்புக் கொள்கையையே மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஆயினும் அவன் தனது இராச்சியத்தின் பலவேறு பகுதிகளையும் ஒருவாறாகப் பிணைத்து வைத்திருந்தான்.

1618-48 வரை நடந்த முப்பதாண்டு யுத்தத்தில் ஹாப்ஸ்பர்க்குகள் அடைந்த லாபத்தைவிட நஷ்டமே அதிகம். 1648-ல் உண்டான வெஸ்ட்பேலியா உடன்படிக்கைப்படி அவர்களுடைய ஆதிக்கம் ஆஸ்திரியா, பொஹீமியா, ஹங்கேரி ஆகிய இடங்களில் நன்கு நிறுவப்பட்டதாயினும், ஜெர்மனியும் பேரரசின் மற்றப்-