பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/714

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

649

இந்தியா

களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 52 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாசிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌ காலத்தில்‌ பௌத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கியது. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருந்த ஒரு சக அரசன்‌ மகளை மணந்தான்‌. தன்‌ மகளைச்‌ சடுகுல அரசனுக்கு அளித்‌தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தூபிகளும்‌ பல விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த மூலனும்‌ பௌத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ நாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது. இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிருகுத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌ற ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே கிடைத்‌திருக்கிறது.

கி.பி. மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ பல்‌லவர்கள்‌ தொண்டை நாட்டை ஆளத்தொடங்கினர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ முதலியோரைப்‌ போல வட இந்தியாவிலிருந்து தென்னாட்டில்‌ குடியேறி, அங்‌குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. தொண்டை ஒரு கொடி; பல்லவம்‌ என்றால்‌ தளிர்‌. இதைத்‌ தவிர வேறு சான்‌று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌லவர்‌ தங்களை அசுவத்தாமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌திக்‌கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌றும்‌, அப்பிள்ளையைப்‌ பிறந்தவுடன்‌ அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கிய ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போது நமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டூர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகாவில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது. ௮து பிராகிருத மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ளவற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெற்றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்தவர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைககர்‌ காஞ்சி. இவன்‌ ஆட்சி வடக்கே கிருஷ்ணாநதி வரையும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த புத்தவர்மன்‌; இவனுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ புத்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ அக்‌காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வருகின்‌றன. தக்க ஆதாரங்கள்‌ கிடைக்காமையால்‌ இக்காலத்‌துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயலவில்லை. நான்காம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின் மீது படையெடுத்து வந்தபோது அவனை எதிர்‌த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரசனும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமாரவிஷ்ணுவும்‌ (325-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌ சுமார்‌ கி.பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌துச்‌ செப்பேடுகள்‌ பல கிடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌களைக்‌ குறிப்பதைத்‌ தவிர வேறு முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. கி.பி. 458 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 22 ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌. இக்‌காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவதால்‌ காஞ்சிபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌ காணலாம்‌.

      செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி
                        குமாரவிஷ்ணு I (325-50) 
                                   ︱
                         ஸ்கந்தவர்‌மன்‌ I (350-75)
                                   │
                           வீரவர்மன் (375–400)
                                   │
                        ஸ்கந்தவர்மன்‌ II (400–36)
                                   │
    ┌──────────────────────────────┴────────────────────────────┐
    │                              │                            │
சிம்மவர்மன்‌ I                 யுவ மகாராஜா              குமாரவிஷ்ணு II               
(436-60 லோகவிபாகம்‌)      விஷ்ணுகோபவர்மன் I      
    │                              │                            │
ஸ்கந்தவர்மன் II             சிம்மவர்மன் II                புத்தவர்மன்
 (460-80)                      (480-500)       
    │                              │                            │ 
நந்திவர்மன்             விஷ்ணுகோபவர்மன் II           குமாரவிஷ்ணு III                       

தட்சிணத்தில்‌ சமுத்‌திரகுப்தனை எதிர்த்த அரசர்‌களுள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. இவன்‌ சாலங்காயன கோத்திரத்தவன்‌. இவன்‌ வமிசத்திற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த நாடுகளை வென்று தன்‌ இராச்‌சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இவ்-