பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கலைக்களஞ்சியம் (இணைப்புத் தொகுதி ஒன்று) அக்காக் குருவி: இந்தியாவிலுள்ள குயில் இனங்களிலெல்லாம் மிகச் சாதாரணமானதும் யூடை னாமிஸ் ஸ்கோலோப்பாசியல் அல்லது யூடைனாமிஸ் ஆனரேட்டா (Eudynamis Scolopaccus Syn: E. hono rata) என்னும் விஞ்ஞானப் பெயருள்ளதுமான குயீ லுக்கு வழங்கும் ஒரு பெயர். இந்தக் குயில் கூவுவது அக்-கா, அக்-கா என்று கூவுவதுபோல இருக்கிறது என்று சொல்வதுண்டு. இதனால் இந்தக் குயிலை அக்காக் குருவி என்றும் சொல்வார்கள். இது காக்கை யின் கூட்டில் தன் முட்டையை இடும் பழக்கமுள்ளது. பார்க்க: குயில், 4-46. ப.மு.சோ.

அக்கினி நட்சத்திரம் (கத்தரி) : ஒவ்வொரு ஆண்டும் சூரியன் பரணி மூன்றாம் பாதத்தில் துவங்கி, கிருத்திகை முழுவதிலும் சஞ்சரிக்கும்போது 'அக்கினி நாள்', 'அக்கினி நட்சத்திரம்' என்று சொல்லுகிறோம். அப்போது வெயில் கடுமையாயிருக்கும். கிருத்திகை நட்சத்திரத்திற்கு அக்கினியே தேவதை; ஆகையாலும் அவ்வமயம் அதிக வெப்பம் ஏற்படுவதாலும் இப் பெயர் பொருந்தும். வே.ரா. அக்ரா (Accra) கானா (இ.த.க.) நாட்டின் தலைநகரம். துறைமுகப்பட்டினம். சமவெப்ப தட்ப நிலையை உடையது. ஒரு குன்றின்மீது அமைந்துள் ளது. அதன் அண்மையில் கடற்கரை பிளவுண்டு சிறு கப்பல்கள் நிற்பதற்கு வசதி அளிக்கிறது. பதினா றம் நூற்றாண்டின் இறுதியில் போர்ச்சுகேசியர் இங்கு வாணிகத்திற்காக ஒரு கோட்டையைக் கட்டிக் கொண்டனர். பதினேழாம் நூற்றாண்டில் ஆங்கிலேய கோட்டையை ரும் டச்சுக்காரரும் தத்தமக்கு ஒரு அமைத்துக் கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து டென்மார்க்கு நாட்டினரும் ஒரு கோட்டையைக் கட்டிக் கொண்டார்கள். இவர்களுடைய குடியேற்ற இடங் களில்தான் அக்ரா வளர்ந்து வந்துள்ளது. டச்சுக் காரரும் டென்மார்க் நாட்டினரும் தங்கள் கோட்டை களைப் பிரிட்டிஷாருக்குக் கொடுத்துவிட்டார்கள். பிரிட் பஸ் டிஷாரின் கோல்டு கோஸ்ட்டு (த.க.) குடியேற்ற நாட் டுக்கு அக்ராவே தலைநகராயிற்று. இங்கு சர்வதேச் விமான நிலையம் அமைக்கப்பெற்றுள்ளது. இந்நகரத் துக்குப் போதிய குடிநீர், மின்னாற்றல் வசதிகள் அளிக் போக்குவரத்து நடைபெறுகின்றது. ஒலி பரப்பு நிலையம் கப்பட்டுள்ளன. மிகவும் விரிவான நகராட்சி ரெயில்பாதை வந்து முடிகின்றது. இங்கிருந்து பல ஒன்று இங்கு இயங்கிவருகின்றது. இங்கு ஒரு பெரிய முதல்தரமான நெடுஞ்சாலைகள் கிளைத்து உள்நாட் டுக்குச் செல்லுகின்றன. முக்கிய ஏற்றுமதி: பொன், தேங்காய், கோக்கோ தயாரிக்க உதவும் விதைகள், கானா (பழைய பெயர் கோல்டு கோஸ்ட்டு) 1960-ல் சுதந்திர நாடான பிறகு அக்ராவே அதன் தலைநகர மாகக் கொள்ளப்பட்டது. மக்.3,88,281(1960). அகமுகம்-புறமுகம் (Introversion - Extroversion) : உடல், உள்ளப் போக்குகளைக் கொண்டுமக்களைப் பலவகையாகப்பிரித்திருக்கின்றனர். உளப்பான்மையை (Temperament) அடிப்படையாகக் கொண்டு மனிதனின் (Personality) ஆளுமையை கார்ல் யுங் (Carl Jung) என்பவர் விளக்கினார். ஆளுமை வகைகளில் மிகச் சிறப்புபெற்ற அகமுகம்-புறமுகம் என்பவற்றை முதன்முதல் விளக்கியவர் யுங் ஆவார். மனச்சக்தி (Psychic power) யின் போக்கு வெளியுலகை நோக்கிச் செல்லுமாயின் புறமுகம் என்றும், நோக்கிச் செல்லுமாயின் அகமுகம் என்றும் விளக்கினார். உள் ஒவ்வொரு மனிதரிடமும் அகமுகம், புறமுகம் இரண்டும் உள. ஆயினும், எது வலிமையாக உள் ளதோ அதைப் பொறுத்தே ஒருவரை அகமுகத்தர், புறமுகத்தர் என அழைக்கலாம் என்று யுங் கூறுகிறார். ஒருவரை முழுமையும் அகமுகத்தர் என்றோ, முழுமை யும் புறமுகத்தர் என்றோ, திட்டவட்டமாகப் பிரிக்க முடியும் என்று அவர் கருதவில்லை. அகமுகத்தாரை யும் புறமுகத்தாரையும் மேலும், புலன் உணர்ச்சி (Sensation), சிந்தனை (Thinking), உணர்ச்சி (Feeling),