பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகராதிக் கலை உள்ளுணர்வு (Intuition) ஆகியவற்றின் அடிப்படை வில் நான்கு பிரிவுகளாகக் கருதினார். ஐவன் பாவ்லாவ் Ivan Pavlov) என்பவர் ஆளுமை வகைகளுக்கு மனிதர்களின் மத்திய நரம்பு, மண்டல அமைப்பை அடிப்படைக் காரணமாகக் கருதினார். நாய்களைக் கொண்டு நடத்திய ஆக்க நிலை விருத்தப் (Conditioning) பரிசோதனைகளால் முதன் முதல் இக்கருத்தை நிரூபித்தவர் இவரே ஆவர். பரிசோதனைகளுக்குட்பட்ட நாய்களை, அவற்றின் போக்கை ஒட்டி, கிளர்ச்சி பெறும் வகை(Excitory type தடைபடும் வகை (Inhibitory type) என இருவகைப் படுத்தினார். இந்தப் பிரிவு மனிதர்களுக்கும் பொருந்தும் எனவும் அறிந்தார். மனிதர்களையும் பரிசோதனைகளின் மூலம் ஆராய்ந்து, பாவ்லாவின் கருத்துக்கள் உண்மையெனக் கண்டறிந்தவர் ஐசன்க் (HJEysenck,} ஆவர். கிளர்ச்சி வகையினரை அகமுகத்தினரென்றும், தடை வகையினரைப் புறமுகத்தினரென்றும் ஐசன்க் குறிப் பிட்டார். இவ்விரு வகையினரின் இயல்புகள் வேறு பட்டிருந்தன. அகமுகத்தார் வாழ்க்கையில் மனநிறைவு பெறார்; பிறர் நட்பு நாடார்; பிறர் தோழமை விரும்பார்; விருந் தில் கலக்க விரும்பார்; பிறர் குற்றம் காண்பார்; பிறரை ஐயுறுவார்; தனிமையை நாடுவார்; பகற்கன வில் ஈடுபடுவர்; தத்துவ ஆர்வம் கொள்வர்; பணி வாக இருப்பர்; வெட்கம் மிகையாக உள்ளவர்; எளிதில் உணர்ச்சிவசப்படுவர்; எதையும் திட்டமிட்டுக்கொண் டிருப்பர்; நம்பிக்கைக்குரியவர். புறமுகத்தார் வெளியுலகை மிக மதிப்பவர்; சமூக ஆமோதிப்பை நாடுவார்; உரையாட விரும்புவார்; நண்பர்களை விரைவில் தேடிக்கொள்வார்; எல்லாரு டனும் எளிதில் கலந்துகொள்வார்; பிறரை நம்புவார், தற்புகழ் பாடுவார். தம்குற்றம் காணார்; தலைவனாக இருக்க முன்வருவார்; தனிமையை விரும்பார்; எதையும் ஆழ்ந்து சிந்தியாமல் மேலுக்கு மேலாக நடந்துகொள்வார். கடந்த சில ஆண்டுகளில் இவ்விரு வகையினரைப் பற்றிய ஆராய்ச்சிகள் பல நடத்தப்பட்டன. கற்றல், புலன் காட்சி (Perception); ஆக்க நிலையிருத்தம், கவன நிலை மாற்றம், சலிப்பூட்டும் உணர்ச்சிகள் (Feclings of monotony), கண்காணிப்புப் பணிகள் (Vigilance tasks) முதலியவற்றில் இவ்விரு வகையினருக்கிடையே வேறு பாடுகள் காணப்பட்டன. மேலும், இவ்விரு வகை யினர் உளநோய்க்குட்ட நேரிட்டால், அகமுகத்தார் 'டைஸ்தைமியா' (Dysthymia) எனும் உளக்கோளாற் றுக்கும், புறமுகத்தார் 'ஹிஸ்ட்டிரியா (Hysterical psychopathic) எனும் உளக்கோளாற்றுக்கும் உள்ளா கலாம் எனவும் கூறப்படுகிறது. அகமுகம், புறமுகத்தை அளக்க விஞ்ஞான முறைப்படி உருவாக்கப்பட்ட சோதனைகள் பல உள. இவை பல வழிகளில் பயன்படுகின்றன. செ.இரா.ப. நூல்கள்: H.J. Eysenck, Structure of Haman Personality; Frieda Fordham, An Introduction of Jung's Psychology; G.G. Jung, Psychological Types; 1, P, Pavlov. Selected Works. அகராதிக் கலை (Lexicography) : ஒரு மொழியிலுள்ள சொற்களை அகரவரிசையில் நிறுத்தி அவற்றுக்குப் பொருள் கூறும் நூல் அகராதி எனப் படும். இத்தகைய அகராதிகளை அமைக்கும் வேலைப் பாடும், அகராதி வகைகளின் அமைப்புக்களைப் பற்றிய ஆராய்வும் அகராதிக்கலை எனப்படும். சொற்களின் தோற்றம், அவற்றின் வகைகள், அவை தரும் பொருள்கள், அவற்றை யாளும் முறைகள் அகராதிக் கலை முதலியன பற்றிக் கூறும் அமைப்பு பொதுவாகச் சொல்லிலக்கணம் (Etymology) எனப்படும். இத்தகைய சொல்லிலக்கணத்தை, கி. மு. 1000 ஆண்டுக்கு முற் பட்டதாகக் கருதப்படும் தமிழிலக்கண நூலாகிய தொல்காப்பியத்தின் சொல்லதிகாரம்' என்னும் பகுதி யில் காண்லாம். தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் 'உரியியல்' என ஒரு பிரிவு உள்ளது. அதில் 120 உரிச் சொற் கள் பொருள் விளக்கப்பட்டுள்ளன. இதுவே ஒரு வகைச் சிறிய அகராதி போன்றது. ஆனால் தொல் காப்பிய உரியியலில் சொற்களுக்குப் பொருள் கூறி யிருப்பதல்லாமல், "வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா", "பொருட்குப் பொருள் தெரியின் அது வரம்பின்றே"-என்றெல்லாம் சொற்களுக்குப் பொருள் கூறும் முறைகளைப் பற்றியும் விவரித்திருப்பதால், தொல்காப்பிய உரியியல் அமைப்பை அகராதி' என் பதைவிட 'அகராதிக்கலை' என்று கூறுவதே சாலப் பொருந்தும். தொல்காப்பியத்திலுள்ள இடையியல், மரபியல் ஆகிய பிரிவுகளிலும் இந்தக் கலை ஒரு சிறிது இடம் பெற்றுள்ளது. எனவே, தமிழில் அகராதிக் கலை கி.மு. 1000 ஆண்டுக்கு முன்பே தொல்காப்பியக் காலத்திலேயே தோன்றியிருந்தது எனலாம். தொல்காப்பியக் காலத்தை கி.மு.1000ஆண்டுக்கு முன்னதாகக் கொள்ளாமல், கி. மு. 500 என்பதாகக் கூறுவாருமுளர். அப்படியே வைத்துக்கொண்டாலும், தொல்காப்பியர் உரியியலின் இறுதியில், 'சொற் களுக்குப் பொருள் கொள்ளும் முறை பற்றிப் பழம் புலவர்கள் இன்னின்னவாறு கூறியுள்ளார்கள் என்னும் கருத்தில் "என்மனார் புலவர்" என மொழிந்துள்ளார். இதைக்கொண்டு நோக்குங்கால், தொல்காப்பியருக்கு முன்பே பல புலவர்கள் சொற்களுக்குப் பொருள் கூறும் துறையில் கருத்துச் செலுத்தியிருந்தார்கள் என்பது புலனாகும். எனவே, எப்படி நோக்கினும் தமிழ் அகராதிக்கலை இற்றைக்கு மூவாயிரம் ஆண்டு கட்கு முற்பட்ட பழமையும் பெருமையும் உடைய தென்பது தெளிவு. தமிழ் போலவே உலக மொழிகள் பலவற்றிலும் மிகப் பழங்காலத்தேயே அகராதிகள் தோன்றின. அசிரியாவில் கி.மு. 669 - 626ஆம் ஆண்டுக் காலத்தில் வாழ்ந்த ஆசூர்பானிபல் (Ashurbanipal) என்னும் மன்னனது ஆட்சியில் சொற்பொருள் விளக்கும் அசிரிய மொழி யகராதி களிமண் பலகைகளில் அமைக்கப்பட் டிருந்தது. வடமொழியிலும் கி.மு. 5ஆம் நூற்றாண் டில் அகராதி அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. கி.மு.150-ல் 10,000 சொற்களுக்குப் பொருள் விளக் கும் அகராதி ஒன்று சீன மொழியில் தொகுக்கப்பெற் றிருந்ததாம். ஐரோப்பாவிலும் கிரேக்கம், லத்தீன் முதலிய பழம்பெரு மொழிகளில் பழங்காலத்திலேயே அகராதிகள் தோன்றியிருந்தன. தமிழ் மொழியைப் பற்றிய வரையில், சொல்லி லக்கணத்தின் ஓர் உறுப்பாக இருந்த அகராதித் துறை, நாளடைவில் அதிலிருந்து பிரிந்து ஒரு தனிக் கலையாகவே வளரத் தொடங்கியது. தொல்காப்பியம் போன்ற இலக்கண நூற்களின் உரியியல்களில் சொற்பொருள் விளக்கஞ் செய்யப் பெற்றிருந்ததைக் கண்ட புலவர்கள் சிலர், இந்த வேலையை இலக்கண நூற்களோடு இணைத்து இடர்ப் படாமல், தனித்தனி நூல் வடிவில் செய்யத் தொடங் கினர். மற்றும், பண்புகளைப் பற்றிய உரிச்சொற் சொற்கள், திசைச் சொற்கள் முதலியவற்றிற்கும் களோடு நின்றுவிடாமல், பெயர்ச்சொற்கள், வினைச் பொருள் கூறத் தொடங்கினர். ஒரு சொல்லுக்கு உரிய பொருள்கள் இன்னின்னவை என்று கூறிய தன்றி, ஒரு பொருளைக் குறிக்கும் பெயர்கள் இன்னின்"