பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகராதிக் கலை னவை என்றும் எழுதத் தொடங்கினர்.இருசுடர், முக்குணம் போன்ற தொகைப்பெயர்களுக்கும் விளக் கம் தந்தனர். எல்லாம் செய்யுளாகவே இயற்றப் பெற்றன. இம்முறையில் தமிழில் பல நூற்கள் எழுந்தன. அவற்றுள் மறைந்தவை போக எஞ்சியிருப்பவை சிலவே. இருப்பனவற்றுள் காலத்தால் முற்பட்டவை சேந்தன் திவாகரம்', 'பிங்கலம்' என்னும் நூற்கள். இவை கி.பி. எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டன என்று சொல்லப்படுகின்றது. இவற்றிற்கு அடுத்தபடி யாகக் கிடைத்திருக்கும் நூற்களுள் 'சூடாமணி' முற் பட்டது. இது பதினாறாம் நூற்றாண்டில் இயற்றப் பட்டதெனக் கருதப்படுகிறது. திவாகரம், பிங்கலம் முதலிய நூற்கள் 'உரிச் சொல்' அல்லது 'உரிச்சொல் பனுவல்' என்னும் பொதுப் பெயரால் அழைக்கப்பட்டன. 13ஆம் நூற்றாண்டினரான பவணந்தி முனிவர் தமது நன்னூ லில், "பிங்கல முதலா நல்லோர் உரிச்சொலின் நயந் தனர் கொளலே" என்று கூறியிருப்பதனாலும், 16 அல்லது 17ஆம் நூற்றாண்டின தாகக் கருதப்படும் 'கயாதரம்' என்னும் அகராதித்துறை நூலில், "உரிச் சொல் பனுவல் விரித்துரைத்தான்" என்று கூறப் பட்டிருப்பதனாலும் இதனை யறியலாம். இலக்கண நூற்களின் உரியியல்களில் சொற்பொருள் விளக்கம் செய்யுப்பெற்றிருந்த முறையை அடிப்படையாகக் கொண்டு இந்நூற்கள் எழுந்தனவாதலால் இவை 'உரிச்சொல்' என அழைக்கப்பட்டன. ஆனால் சூடாமணி என்னும் நூல் 'நிகண்டு' என் னும் பெயரால் அழைக்கப்பட்டது. சூடாமணிக்குப் பின் செய்யுள் வடிவில் எழுந்த அகராதித்துறை நூற் கள் அனைத்தினுக்கும் நிகண்டு என்னும் பொதுப் பெயரே வழங்கப்பட்டது. இப்பழக்கத்தால், சூடா மணிக்கு முன் தோன்றிய நூற்களும் நாளடைவில் நிகண்டு என்றே அழைக்கப்படலாயின. நிகண்டு என்றால் தொகுதி அல்லது கூட்டம், நீளம் என்று பொருளாம். சொற்கள் தொகுதியாக நீளமான வரிசையாகக் கொடுக்கப்பட்டிருப்பதால், அகராதித்துறை நூற்களுக்கு நிகண்டு என்ற பெயர் அளிக்கப்பட்டது. உலக மொழிகள் பலவற்றிலும் சொற்பொருள் விளக்கும் அகராதித்துறை நூற்கள் பல தோன்றின வேனும், பதினாறாம் நூற்றாண்டு வரையிலும் எந்த மொழியிலும் சொற்கள் அகர வரிசையில் நிறுத்திப் பொருள் கூறப்படவில்லை. இக்காரணத்தால் குறிப் பிட்ட ஒரு சொல்லை உடனே கண்டுபிடிக்கமுடியாமல், முதலிலிருந்து இறுதிவரை சொற்களைப் படித்துப் பார்த்துத் தேடி இடர்ப்பட வேண்டி யிருந்தது. இதனால் திவாகரம், பிங்கலம் போன்ற நூல்கள் ஆதியில் அகர வரிசையில் அமைக்கப்படாமல் இருந்தும், பின்வந்த வர்கள் அவற்றின் சொற்களைத் தாமாக அகரமுதலாக வரிசைப்படுத்தினர். இந்த வசதியைக் கருத்திற் கொண்டு, 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சூடாமணி நிகண்டை இயற்றிய மண்டல புருடர், சொற்களைக் 'சுகர எதுகை' முதல் 'னகர எதுகை' ஈறாக வரிசைப்படுத்திப் பொருள் கூறியுள் ளார். எதுகை என்றால் நகம், அகம், முகம் என்பன போல இரண்டாவது எழுத்துக்கள் ஒத்திருப்பது. இவ்வெதுகை முறையில் சொற்கள் அடிகள்தோறும் முதற்சீரின் முதலெழுத்துக்கள் அகர வரிசையில் நிறுத்தப்படாமல், இரண்டாவது எழுத்துக்கள் அகர வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும். இதுவே ஒரு பெரிய அகராதிக் கலையுணர்வுதான். மண்டல புருடருக்குப் பின்னர் அகராதிக் கலையில் மேலும் ஒரு வளர்ச்சி காணப்பட்டது. கி.பி.1594-ல் 3 அகராதிக் கலை சிதம்பர இரேவண சித்தர் என்னும் தமிழ்ப் புலவர் ஒருவர், சொற்களை முதலெழுத்து வாரியாக அகரவரி சையில் அடுக்கி 'அகராதி நிகண்டு' என்ற பெயரில் தமிழில் ஓர் அகராதி நூல் இயற்றினார். உலகத்திலேயே சொற்களின் முதலெழுத்துக்களை அகரவரிசையில் அடுக்கி அமைக்கப்பட்ட முதல் அக ராதி நூல் 'அகராதி நிகண்டு'தான். அடுத்து இரண் பாவதாக கி.பி. 1612ஆம் ஆண்டில் இத்தாலி மொழி யில் அகர வரிசையில் அமைந்த ஓர் அகராதி தோன்றி யது. பின்னர் நாளடைவில் உலகமொழிகள் பலவற் றிலும் இத்தகைய அகராதிகள் தோன்றலாயின. 'அ' முதலாகச் சொற்களை வரிசைப்படுத்திப் என்ற பெயரை முதன் முதல் அறிமுகப்படுத்தியவர் பொருள் கூறும் நூல் என்னும் பொருளில் அகராதி 'அகராதி நிகண்டு' எழுதிய சிதம்பர இரேவண சித் தரேயாவார். அகராதித்துறை நூற்கட்கு வேற்று மொழிகளில் பல பொருளில் பல பெயர்கள் வழங்கப் படினும், தமிழில் உரிச்சொல், நிகண்டு என்னும் பெயர்கள் மறைந்தொழிய, அகராதி என்னும் பொருத்தமான பெயர் நிலைத்துவிட்டது. இது போலவே ஆங்கில மொழியிலும் பல பெயர்கள் தோன்றி மறைந்த பின்னர், சர் தாமஸ் எலியட் {$ir Thomas Elyot) தொகுத்த அகராதியின் 'டிக்ஷ னரி (Dictionary)' என்ற பெயர் நிலைத்துவிட்டது. அவை: 1. இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளி லும் பதினேழாம் நூற்றாண்டுவரை அருஞ்சொற்கட்குப் பொருள் விளக்கும் பணி மட்டில் அகராதித் துறையில் நடந்துவந்தது. பின்னரே பல்துறைக் கலையகராதிகள் தோன்றின. தமிழைப் பற்றியவரையில் அகராதிக் மூன்று முன்னேற்றங்கள் தோன்றின. கலை வளர்ச்சியில் பதினேழாம் நூற்றாண்டிலிருந்து சொற்களை அகர வரிசையில் அடுக்கிப் பொருள் கூறி யது : 2. சொற்பொருள் விளக்கம், நிகண்டுகளில் பெறாமல், இக்கால அகராதிகளில் உள்ளபடிச் சொற் உள்ளதைப்போல செய்யுள் வடிவில் அளிக்கப் படுத்திப் பொருள் கூறியது: 3. களைத் தனித்தனியாக ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப் அரிய சொற்க களுக்குப் பொருள் கூறுவதுடன் வேறு பல துறைகளி லும் கலையகராதிகள் தோன்றினமை. இந்த மறுமலர்ச்சியில் ஐரோப்பாவிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்த பெஷி (Beschi), போப் (G. U. Pope) முதலிய கிறித்தவப் பாதிரிமார்கள் ஏற்ற பங்கு மிகப் செய்யுள் வடிவில் பெரியது. அகராதி நூற்கள் இருந்த நிலையை மாற்றி, அகரவரிசையில் தொகுத்துத் தமிழகராதிகள் செய்தவர்கள் அவர்கள் தாம். அரிய எளிய சொற்களையும், கிளைமொழிச் சொற்களுடன் (Dialects) சொற்களையும் சேர்த்து அகராதியை விரிவு படுத்தினார்கள். வீரமாமுனிவர் என அழைக்கப்படும் பெஷியவர்கள் தொகுத்த 'சதுர் அகராதி' என்ற நூல் இங்கே குறிப்பிடத் தக்கது. பெரும்பாலும் இதனைப் பின் தொடர்ந்தே தமிழகராதிகள் பல பின்னர் தோன்றின. 'தமிழுக்குத் தமிழ்' என ஒரு மொழியகராதியே யன்றி, தமிழ் - போர்ச்சுகேசிய அகராதி, தமிழ்-லத்தீன் அகராதி, லத்தீன் - தமிழ் அகராதி, தமிழ் - பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு-தமிழ் அகராதி, போர்ச்சுகேசிய - லத்தீன் - தமிழ் அகராதி, லத்தீன்-பிரெஞ்சு - தமிழ் அகராதி முதலிய இருமொழி, மும்மொழி யகராதி களும் அவர்கள் படைத்தனர். இவற்றை முன் மாதிரி யாகக் கொண்டு, சமஸ்கிருதம், கிரந்தம்,தெலுங்கு இந்தி, மராத்தி, மலாய், ரஷ்யன் முதலிய மொழி களோடு தமிழ் இணைந்த அகராதிகள் பிற்காலத்தில் தோன்றின்.