பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அச்சம் போதிலும், அந்த அபாயத்தைச் சமாளிக்கும் திறனில் லாமல், உள்ளத்தில் பீதி குடிகொள்ளும்போதுதான் அச்சம் அவனைப் பீடிக்கிறது. குழந்தை வளர வளர, அதனிடம் அச்சத்தினால் உண்டாகும் புற எதிர்விளைவும் (Overt reaction) மாறு தலடைந்துகொண்டே வருகிறது. இளம் வயதில் அவனிடம் ஏற்பட்டு வந்த இனந்தெரியாத பீதி Undifferentiatcd panic) மறைந்து, அதற்குப் பதிலாக போதிய காரணங்களுடன் கூடிய, வரையறைக்குட் பட்ட துலங்கல் (Specific response) அவனிடம் குடி கொள்கிறது. அதேபோன்று, வயது முதிர முதிர், அவனிடம் உண்டாகும் துலங்கலின் தன்மையும் வேறு படுகிறது. தனியொருவர் சமூக இயல்பினராக ஆகும் பொழுது, கடந்தகால அனுபவங்களின் விளைவாக அல்லது எதிர்காலத்தைப் பற்றிய ஐயங்களின் காரண மாக, புதுவிதமான அச்சங்கள் எழுகின்றன. இந்த அச்சங்கள், ஒரு காரியத்தைச் செய்து முடிப்பதில் அடைந்த தோல்வியினால் ஏற்பட்டதாகவோ அல்லது ஒருவரது பரஸ்பர உறவினால் ஏற்படும் விளைவுகளினால் உண்டானதாகவோ இருக்கலாம். இத்தகைய அச்சந் தான், இன்றைய உலகில், உருவப் பொருள்களைக் கண்டு அடையும் அச்சங்களையும் மிஞ்சிப் பல்கிப் பெரு கிப் பரவி இருக்கிறது. அச்சத்துலங்கல் (Fear response) எழுவதற்கான புதிய தூண்டலை, ஆக்கநிலையிருத்தம் என்னும் முறை யின்படி (Process of Conditioning), அடிப்படைத் தூண்டலுடன் இயைபு படுத்திப் பார்க்கும்பொழுது, குழந்தைகளிடம் பெரும்பாலும் தீங்கற்ற பொருள் களின் காரணமாகவே அச்சத்துலங்கல் உண்டாவதாக அறிகிறோம். இந்தப் புதிய தூண்டலுடன் மகிழ்வூட்டும் தூண்டலைச் சேர்ப்பதன் மூலம், அச்சத்தினால் ஏற்பட்ட விளைவுகளைப் போக்குவதற்கும் அதே ஆக்கநிலையிருத்த முறையைப் பயன்படுத்தலாம். இவ்விதமாக, புதிய தூண்டலுக்கான அச்சத்துலங்கலை உண்டாக்குவதற்கு மட்டுமின்றி, எந்தத் தூண்டலினாலும் அச்சத் துலங்கல் அறவே ஏற்படாமல் தடுப்பதற்கான சிறந்த சாதன மாகவும் ஆக்கநிலையிருத்தம் பயன்படுகிறது. ஏதாவது ஒரு பொருளைக் காண்பதால் அல்லது ஏதேனும் ஒரு சூழ்நிலையில் சிக்குவதால் உண்டாகும் அசாதாரண அச்சத்திற்குக் 'கிலிகள்' (Phobias) என்று பெயர். கிலி என்பது ஒருவித நூதனமான அச்சமே யாகும். சில சமயங்களில் இந்தக் கிலி அறிவீனமான தாகத் தோன்றும். எனினும், அது உண்டாவதற்கான உண்மையான காரணத்தை அல்லது அதைச் சமாளிக் கும் வழிவகையைக் கூற யாராலும் முடிவதில்லை. கிலி களில் பலவகைகள் உண்டு. அவற்றில் சில பின் வருமாறு: 1.உயர்விடக் கிலி (Acrophobia) : உயர்ந்த இடங் களில் (எடுத்துக்காட்டு: மலையுச்சி, கோபுரம்) ஏற்படும் ஒருவகை அச்சம். 2. இருட் கிலி (Nyctophobia) : இருட்டில் அல் லது இருளடைந்த இடங்களில் உண்டாவது. 3. அடைவிடக் கிலி (Claustrophobia) : கதவுகள் முடி அடைக்கப்பட்டுக் கிடக்கும் இடங்களில் இருக்கும் பொழுது எழும் ஒருவித அச்சம். 4. கூட்டக் கிலி (Ochlophobia): கூட்டங்களின் மத்தியிலிருக்கும் பொழுது அல்லது கூட்டங்களைக் காணும் பொழுது உண்டாகும் அச்சம். குழந்தைப் பருவத்தில் அச்சம் உண்டாக்கிய பொருள்களைக் காண்பதால் வயது வந்த பின்னரும் சாதாரண மனிதர்களிடம் இந்த அச்சங்கள் தோன்று கின்றன. தண்ணீர், அடைப்பிடங்கள், தீங்குசெய்யாத பிராணிகள், தீது விளைவிக்காப் பொருள்கள் முதலிய 5 அசலாம்பிகை அம்மையார் வற்றைப் பார்ப்பதால் உண்டாகும் அச்சங்களையும் சாதாரணமாகக் காணலாம். இவற்றையெல்லாம் எளிய ஆக்க நிலையிருத்தம் செய்து மெய்ப்பித்து விடலாம். யுடையவர்) தமது அச்சங்களுக்கான அடிப்படைக் கிலி கொண்டவர் (குறிப்பாக நரம்புத்தளர்ச்சி அச்சத்தினால் அவரிடம் ஏற்படும் எதிர்விளைவு பெரும் காரணத்தை அறியாதவராய் இருக்கிறார். ஆகவே, பாலும் மூர்க்கத்தனமாக இருக்கிறது. அச்சமயங்களில் அவர் நிலைகுலைந்து, செயலிழந்து விடுகிறார். அச்சத்திற் கொள்வாரெனின், அவரது அச்சத்தின் கடுமை குன்றி, கான மூலகாரணம் என்ன என்பதை அவர் அறிந்து இறுதியில் அடியோடு மறைந்துவிடவும் கூடும். கிலிகளுக்குச் சில பொதுவான தன்மைகள் உண்டு. ஏதேனும் ஒரு துயர நிகழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம். 1. குழந்தைப் பருவத்தில் கடும் அச்சம் தரக்கூடிய அன்று பீடித்த கிலி முதுமைவரை நீடிக்கக் கூடும். 2. செய்யத்தகாத அல்லது இழிவான ஒரு செயலின் காரணமாக ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினால் கிலி உண்டாகலாம். 3. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் களை அல்லது ஆட்களைக் கண்டவுடன் பயப்படக்கூடிய உண்டான அச்சம், நாளடைவில் சிலவகைப் பொருள் கிலியாக வளர்ந்திருக்கக்கூடும். இவ்விதமாக, உலகிலுள்ள எல்லா உயிரினங்களை யும் பீடித்து நிற்கும் ஒருவகைத் துலங்கலே அச்சம் என்பது தெளிவாகிறது. ஆனால், சிலரிடம் மட்டும் கடந்த காலத்தில் அவர்களுக்கு உண்டான ஒருவகைத் தனி அனுபவத்தின் காரணமாக, அளவுக்கு மீறிய மெய்ப்பாடுகளாக அச்சம் வெளிப்படுகிறது. பீ.சீ.மு. அசலாம்பிகை அம்மையார், பண் டிதை: தென் ஆர்க்காடு மாவட்டம் திண்டிவனம் தாலுக்காவிலுள்ள இரட்டணை நகரில் வாழ்ந்த பெரு மானையர் என்னும் அந்தணரின் இளைய மகளாக இவ் வம்மையார் 1875 ஆம் ஆண்டு தோன்றினார். சிற்றில் விளையாடும் இளமைப்பருவத்திலேயே திருமணம் செய்விக்கப்பெற்று, தமது பெதும்பைப் பருவத்தில் அம்மையார் கணவரை இழந்தார். இல்லற வாழ்க்கை எய்தா நிலையுறவே இவர்தம் கருத்து கலையுலகில் சென்றது. தமது இல்லத்தி லேயே அம்மையார் கல்வி பயிலப் பெற்றோர் ஏற்பாடு செய்தனர். தமிழும் வடமொழியும் நன்கு கற்று வர லானார்; கவிபாடும் வன்மையும் வாய்க்கப் பெற்றார். பிறர்க்கு எடுத்துரைக்கும் பேச்சாற்றலும் கைவரப் பெற்றார்; பத்திரிகைகள் வாயிலாகத் தம் எழுத்துத் திறமையையும் உலகிற்கு வழங்கினார். இங்ஙனம் புலமை நிரம்பிய அம்மையாரைப் 'பண்டிதை' என்று எல்லாரும் அழைக்கத் தலைப்பட்டனர். அசலாம்பிகை அம்மையார் தம் இளமைதொட்டே துறவு உள்ளத்தோடு சமயப் பணியும் கல்விப் பணியும் புரிந்து வந்தனர். சமய சம்பந்தமான கூட்டங்களில் கலந்து தெய் வத்தொண்டு ஆற்றியது போலவே, தேசிய இயக்கத் திலும் பற்றுக்கொண்டு, அரசியல் கூட்டங்களிலும் சொற்பொழிவு ஆற்றினர். 1921, 1924, 1929 ஆம் ஆண்டுகளில் திருவண்ணாமலை முதலிய ஊர்களில் நடைபெற்ற அரசியல், சமய மாநாடுகளில் அம்மையார் ஆற்றிய பணிகளைத் திரு. வி. கலியாணசுந்தர முதலி யார் அவர்கள் தாம் எழுதியுள்ள வாழ்க்கைக் குறிப் பில் சுட்டியுள்ளார்கள். இவர் பல காலம் திருப்பாதிரிப்புலியூரில் வாழ்ந்த னர். இறுதிக் காலத்தில் சில ஆண்டுகள் வடலூரிலும்