பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அசெம்பிளி வாழ்ந்தனர். காந்தி மகான் மறைந்த துவரை ஆற்ற கினைந்து, இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் தாம் பாடிய 'காக்தி புராணத்தில் அடிகளின் பிற்கால வாழ்க்கையைச் சேர்த்து அப் பெருமான் வரலாற்றை முற்றுறச் செய்தார். வயது முதிர்ச்சியாலும் நோயின் தாக்குதலாலும் தளர்ச்சியுற்றிருந்தாலும் அம்மை யாரின் வாக்கில் தமிழ் வளம் என்றும் குன்றியதில்லை. "பண்டிதை அசலாம்பிகை அம்மையார் இக்கால ஒளவையார். அம்மையார் பழம்பெரும் புலவருள் வைத்துக் கணிக்கத் தக்கவர். பண்டிதையாருக்கு காவன்மையும் எழுத்தினிமையும் பாட்டுத்திறனும் ஒருங்கே அமைந்துள்ளன. அவரால் யாக்கப்பட்ட நூல்கள் பல" என்று திரு. வி. கலியாணசுந்தர முதலி யார் தம் வாழ்க்கைக் குறிப்பில் எழுதியுள்ளார். அசலாம்பிகை அம்மையாரால் இயற்றப்பெற்ற கவிதை நூல்களாவன : திருவிடையூர்த் தலபுராணம் (முதற் காண்டம்), திருவாமாத்தூர்ப் புராணம், காந்தி புராணம், திலகர் புராணம், இராமலிங்கசுவாமிகள் வர லாற்றுப் பாடல், குழந்தை சுவாமிகள் பதிகம், ஆத்தி சூடி வெண்பா, அரசியற்றொகுதி முதலியனவாம். இவற்றுள் திருவிடையூர்த் தலபுராணம் 1899-ல் அச் சிடப்பெற்றுள்ளது. இதில் அம்மையார் பாடிய முதற் காண்டத்தோடு இரண்டாம் காண்டமும் உள்ளது. இரண்டாம் காண்டம் விழுப்புரம் காத்தபெருமாள் பிள்ளை குமாரர் குழந்தைவேலுப் பிள்ளையவர்களால் பாடப்பட்டது. ஆனந்தபோதினிப் பத்திரிகையில் 'மாதர் பகுதி' என்பதை அம்மையாரின் சொற்சித்திரங்களே பல ஆண்டுகள் அணிசெய்து வந்தன. எளிய இனிய முறையில் அமைந்த இவர் தம் கவிதைகளைப் போன்றே இவர்தம் உரைநடையும் அழகிய செந்தமிழ் நடையில் எல்லாரும் படித்து இன்புறும் பான்மையில் அமைந்தது. மு.ச. அசெம்பிளி: பார்க்க: சட்டசபை, 4- 375. அசை (யாப்பு):எறும்பின் ஒழுக்குப்போன்று செல்லும் எழுத்துக்களின் இசைத் தொடர்ச்சியை அசைத்துச் செல்லும்போது அசைக்கப்பட்டுப் பிரிந்து வரும் எழுத்தால் ஆகிச் சீர்க்கு (த.க.) உறுப்பாக நிற்பது அசை எனப்படும். செய்யுள் யாத்தற்குரிய 'உறுப்புக்களில் இதுவும் ஒன்று. இவ் அசை நேர் அசை என்றும் நிரை அசை என் றும் இருவகைப்படும். குற்றெழுத்துத் தனியே வரினும், மெய்யெழுத் துடன் சேர்ந்து வரினும், நெட்டெழுத்துத் தனியே வரி னும் மெய்யெழுத்துடன் இணைந்து வரினும் நேர் அசை யாகும். ஆகவே, நேர் அசை நான்கு ஆகும். (உ-ம்); ப - தனிக்குறில் நேர் அசை பல் - தனிக்குறில் மெய்யெழுத்துடன் வந்த நேர் அசை கா -தனிநெடில் நேர் அசை கால் - தனி நெடிலுடன் ஒற்றடுத்து வந்த நேர் அசை நேர் அசையினைத் தனி அசை என்றும் கூறுவ துண்டு. இரண்டு குறில்கள் சேர்ந்து வரினும், இவற்றுடன் மெய் எழுத்து இணைந்து வரினும், குறில் நெடில் எழுத்துக்கள் சேர்ந்து வரினும், ஒற்றெழுத்துடன் சேர்ந்து வரினும் நிரை அசை ஆகும். இதனை இணை அசை என்றும் கூறுவர். இந்நிரை அசையும் நான்கு வகைப்படும். (உ-ம்): பல - இருகுறில் இணைந்த நிரை அசை பலர் - இருகுறில் இணைந்து ஒற்றடுத்து வந்த நிரை அசை பலா - குறிலும் நெடிலும் சேர்ந்து வந்த நிரை அசை கலாம் - குறில், நெடிலுடன் மெய் அடுத்து வந்த நிரை அசை நேர்பு அசை, நிரைபு அசை என்று வேறு இரண்டு அசைகளும் உண்டு. இவை ஈற்றில் குற்றியலுகரத் தையோ முற்றியலுகரத்தையோ கொண்டு முடியும். இவை வெண் பாவின் ஈற்றடியின் ஈற்றுச் சீராக வரும். (உ-ம்): பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. குறிப்பு: குற்றிய லுகரத்துடன் முடிந்த நேர்பு அசை நன்றிக்கண் தங்கியான் தாழ்வு- முற்றியலுகரத்துடன் முடிந்த நேர்பு அசை பகவன் முதற்றே உலகு - குற்றியலுகரத்துடன் முடிந்த நிரைபு அசை ஒழுக்கம் இலான்கண் உயர்வு - சீராகிச் சேர்ந்து நிற்பினும் தனி முற்றியலுகரத்துடன் முடிந்த நிரைபு அசை நின்று பொருள் தரும் அசையைச் சிறப்புடை அசை என்பர்.அணிநிழல் என்பது இரண்டு அசை கள் சேர்ந்த ஒரு சீர். இதனை அசையாகப் பிரிக்கும்போது அணி, நிழல் என்று நிற்கும். இப்படிப் பிரித்து அசையினைக் காண்கையில் அணி என்பதற்கும் நிழல் என்பதற்கும், நன்கு பொருள் விளங்குகிறது. ஆகவே, இவ் வாறு பொருள் நன்கு விளங்கும் நிலையில் பிரிக்கப்பட்ட அசைகள் நிற்பின், இவற்றைச் சிறப்புடை அசை என்பர். நடாத்திய என்னும் சொல்லை அசை கரு திப் பிரித்தபோது, அது நடாத்திய என்று பிரிக்கப்படும். அதுபோது நடாத் என்பதற் கும் திய என்பதற்கும் தெளிபொருள் இல்லை. இவ்வாறு பிரிக்கப்படுவதைச் சிறப் பில் அசை என்பர். செய்யுளின் முதல் சொல்லின் முதல் எழுத்து மெய் யெழுத்தைச் சாராத தனிக் குறிலாக இருப்பின் அஃது ஓர் அசை ஆகாது. விட்டசைப்பின், அதாவது தன்னையே சிறப்பு முறையில் குறிக்கவரின், அப்போது அசையாகும். 'அகர முதல' என்னும் சீர்களில் அ, மு என்னும் எழுத்துகள் நேர் அசை ஆகாமை உணர்க. அக, முத என நின்றே நிரை அசை ஆகும். ர, ல என் பன ஈற்றில் தனிக் குறிலாக இருப்பினும் அசை ஆகும். விட்டிசைத்து வந்த அசைக்கு உதாரணம் 'அ உ அறியா அறிவில் இடைமகனே' என்பது, ஈண்டு அ, உ என்பன தனித்தனிக் குறிலாக நின்று தனிக் குறில் அசையாய் வந்தன. பா.க.மு. அட்டகம் (அஷ்டகம்) என்பது எட்டுக் கொண்ட ஒரு தொகுதி என்று பொருள்படும். எட்டு அத்தியாயங்கள் கொண்ட பாணினி வியாகரணத்தை 'அஷ்டாத்தியாயி' என்றும், திவ்யகவி பிள்ளைப் பெரு மாள் ஐயங்கார் பாடிய எட்டுப் பிரபந்தங்கள் கொண்ட ஒரு தொகுதியை 'அட்டப்பிரபந்தம்' எனவும் வழங்கு தல் காணலாம். பஞ்சகம், சட்கம், தசகம், சோடசம், சத கம் என்றாற்போல எண்ணிக்கைக் காரணமாக அமை யும் பெயரே அட்டகம் என்பது. ரிக்வேதத்தில் எட்டும் யஜூர் வேதத்தில் மூன்றும் ஆக அட்டகம் வழங்கும் பகுதிகள் உள். சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் 'சிவப்பிரகாசம்' முதல் "சங்கற்ப நிராகரணம்' வரையுள்ள எட்டு நூல்களையும் 'சித்தாந்த அட்டகம்' எனக் கூறுவது உண்டு. என் பிரபந்த முறையிலும் 5 பாடல்கள் கொண்ட சிறு நூலைப் பஞ்சகம், பஞ்சு ரத்தினம், ஐம்மணி மாலை என வழங்குதல் போல எட்டுப் பாடல்கள் கொண்ட பிரபந்