பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அட்டவணைப்படுத்தி தத்தை 'அட்டகம்' என வழங்குவர். ஆதிசங்கரர் சுப்பிரமணியாஷ்டகம், சிவாஷ்டகம் முதலிய தோத்தி ரங்களைப் பாடியிருக்கிறார். பதினோராந் திருமுறையில் நக்கீரதேவ நாயனார் மேகத்தைக் குறித்து எட்டு வெண்பாக்களால் பாடிய பிரபந்தம் 'கார் எட்டு எனப் பெயர் பெற்றுள்ளது. இங்கே 'எட்டு' என்பது 'அட்டகம்' என வழங்கும் பிரபந்தத்திற்குரிய தமிழ்ப் பெயர். பஞ்சரத்தினம் என்பதனை 'ஜம்மணி மாலை' என்னும் வழக்குப் போன்றது. பிற்காலப் புலவர்கள் 'அட்டகம்' என்னும் பெயரில் தோத்திர நூல்கள் பாடி யுள்ளனர். எடுத்துக்காட்டாக 1868-ல் அச்சான பெரியண்ணா என்னும் வேங்கடதாசர் பாடிய 'அரங்க அஷ்டகம்', 1873-ல் அச்சான பாளையம் சர்க்கரைச் செட்டியார் பாடிய 'திருப்போரூர் அட்டகம்', இராம லிங்க சுவாமிகள் பாடிய 'அருட்பெருஞ்சோதி அட்ட கம்', 1889-ல் அச்சான வி.குமரகுருபர ஐயர் பாடிய 'உடையார்குடி. ஸ்ரீ மழுப்பொறுத்த விநாயகர் அஷ்ட கம்' முதலியவற்றைக் கூறலாம். இவற்றால் எவ் வகைப் பொருளையும் எவ்வகைப் பாவாலும் எட்டு பாடல் கொண்டதாகப் பாடும் சிறுநூலே 'அட்டகம்' என்பது போதரும். மு.ச. அட்டவணைப்படுத்தி : பார்க்க: செயலகக் கருவிகள். அடக்கக் கணக்கு (Cost Accounts) என்பது ஓர் உற்பத்திப் பொருளுக்கு ஆன மொத்தச் செலவைத் தெரிவிப்பது. உற்பத்திப் பொருளின் அடக்கம் அந்தந்த உற்பத்தி நிலையங்களின் தன்மை யையும் அதனால் செலவழிக்கப்பட்ட எல்லாவிதமான செலவினங்களையும் பொறுத்திருக்கிறது. உற்பத்தி யாகிற எல்லாப் பொருள்களும் ஒரேவகையான அடக் கக்கணக்கில் வருவதில்லை. சில தொழில் நிலையங் களின் பொருள்கள் அதிகச் செலவில் உற்பத்தியாவ தாலும் சில தொழில் நிறுவனங்கள் குறைந்த செல வில் உற்பத்தி செய்வதாலும் இலாபம் சிலவற்றிற்கு அதிகமாகவும் சிலவற்றிற்குக் குறைவாகவும் கிடைக் கிறது. இவ்வாறு பொருளின் அடக்கக்கணக்கு வேறு படுவதற்கு அவைகளின் தொழில்நுட்பத்திறனே காரணம் என்று கொள்ளலாம். எந்தத் தொழில் நிறுவனம் மிகக் குறைந்த செலவில் உற்பத்தி செய் கிறதோ, அது நாளடைவில் அதிக இலாபம் பெற்று அதன் தொழிலாளிகளுக்கு எல்லாவித சலுகை களுடன் அதிக ஊதியமும் கொடுக்க முடிகிறது. சில தொழிற்சாலைகள் மூலப்பொருள்களை அதிக விலை கொடுத்து வாங்குவதால் பொருளின் அடக்கவிலை அதிகமாகிறது. ஆகையால் முதலாளிகள் மூலப் பொருள்களைக் குறைந்த விலைக்குக் கிடைக்கும்போது வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். அவ்வாறு வாங்கா விட்டால் மூலப் பொருளின் விலை அதிகரிக்கும் பொழுது சந்தை நிலவரம்போல் அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும். பொருளின் அடக்க விலை அதற்காகக் கொடுக்கப்படும் கூலியைப் பொறுத்தும் இருக்கிறது. வேலையாட்களுக்குக் கூலி அதிகமானால் அடக்க விலையும் அதிகமாகும். முதலாளிகள் சாதாரண மாகக் கூலியை அதிகமாகக் கொடுக்கச் சம்மதிக்கமாட் டார்கள். எந்த அளவு மற்ற நிறுவனங்கள் கொடுக் கின்றனவோ அதே அளவுதான் கொடுப்பார்கள். கூலி யாட்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தால் கூலியையோ சம்பளத்தையோ உயர்த்திக் கொடுக்காமல், பஞ்சப் படியை அதிகமாகக் கொடுப்பார்கள். பஞ்சப்படியை எளிதில் கூட்டவும் குறைக்கவும் முடியும். ஆனால் கூலியைக் குறைத்து அளிப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஒரு பொருளின் அடக்கம் என்ன என்று தெரிந்துகொள்ள நாம் எவ்வளவு தொகை அந்தப் அடி பொருள் உற்பத்திக்காகச் செலவு செய்திருக்கிறோம் என்று அந்த அடக்கக்கணக்கு மூலம் அறியலாம். மேலும் எவ்வளவு தொகை அந்தப் பொருளுக்காகக் கூலியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் குறிக்க வேண்டும். இந்த இரண்டு இலக்கங்களும் அதனுடைய முதல் அடக்கம் (Prime Cost) என்ன என்பதைக் குறிக்கும். அடக்கக் கணக்குகளை நல்ல முறையில் கையாளும் நோக்கம் என்னவென்றால், பொருள் உற்பத்திக்குச் செய்யப்படும் செலவுகள் அந்தந்தப் பொருள்களின் உற்பத்திக்காகத்தான் செய்யப்பட்டுள்ளது என்று அறிந்துகொள்வதற்காகவும், மூலப்பொருளுக்காகச் செலவு செய்யப்பட்ட தொகை, அதற்குள்ள கூலி, மற்றவகையில் உள்ள செலவுகள் எல்லாம் அந்தந்தப் பொருளுக்காகவே செலவு செய்யப்பட்டுள்ளன என்று திட்டவட்டமாகத் தெரிந்துகொள்வதற்குமாகும். அடக் கக்கணக்கை அறிய அந்த நிலையத்தின் தொழிலைப் பல பகுதிகளாக்கி, அந்தந்தப் பகுதியால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் செவ்வனே செய்யப்பட்டுள் ளனவா என்று மேற்பார்வையாளரை நியமித்து அதற் காக ஏற்பட்டுள்ள செலவுகள் அனைத்தையும் அடக்கக் கணக்கில் பதிவு செய்யவேண்டும். நாம் பதிவுசெய்யும் அடக்கக் கணக்கு தொழிலதிபர்களுக்கு எந்தச் செல் வைக் குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம் என்று தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கவேண்டும். அடக் கக்கணக்குப் புத்தகங்கள், பேரேடுகள் முதலியவை களுக்குச் செலவு செய்யப்படும் தொகை மிகவும் அதிக இருக்கக்கூடாது. தொழில் நிலையத்திற்காக ஏற்படும் மொத்தச் செலவுத் தொகையைப் பகிர்ந்து அந்தந்தப் பொருள் உற்பத்திக்குரிய செலவை மட்டும் சேர்த்து, பொருள் அடக்கவிலை என்ன என்று நிரு ணயிக்கவேண்டும். அவ்வாறு செய்தால் ஒரு பொருள் உற்பத்தியின் மொத்த அடக்க விலை எவ்வளவு என்றும், உற்பத்தி நிலையத்தைக் கண்காணிக்க என்ன செலவாகியிருக்கிறது என்றும் அறிந்து கொள்வது எளிதாகும். மாக மூலப்பொருள் என்ன விலைக்கு வாங்கப்பட்டதோ அதே விலைதான் கணக்கிடும்போது எடுத்துக் கொள்ள வேண்டும். மூலப்பொருள்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படலாம். அப்பொழுது மூலப் பொருளின் பட்டியல் விலையுடன் இறக்குமதி வரி, கப்பல் கட்டணம், மற்றப் போக்குவரத்துச் செலவுகள் எல்லாவற்றையும் சேர்த்து அனைத்தையும் மூலப் பொருளின் அடக்க விலையாகக் கொள்ளவேண்டும். அலுவலகத்தின் செலவு அந்த அலுவலகத்தின் தன்மையைப் பொறுத்திருக்கிறது. இதில் அலுவலகத் தின் மேலாளர் சம்பளம், மேற்பார்வையாளர் சம்பளம், அலுவலகத்தில் உள்ள குறிப்பு, பேரேடு, மற்றப் புத்த கங்கள் அச்சிட்ட செலவுகள், அலுவலக வாடகை, வரி, தபால் தந்திச் செலவுகள், தொலைபேசியின் செலவு கள், தளவாடச் சாமான்களின் தேய்வு முதலிய செல் வினங்களைக் குறிப்பிடலாம். அதே உற்பத்தி நிலையம் நேரடியாக அதன் உற்பத்திப் பொருள்களை விற்குமே யானால் அதற்கு ஆகவேண்டிய செலவுகளையும் மற்றச் செலவினங்களோடு சேர்த்து அதன் அடக்க விலை யையும் இலாபத்தையும் நிருணயிக்கலாம். பூ.வ. அடி (யாப்பு): இரண்டு முதலிய சீர்களைக் கொண்டு முடிவது அடி எனப்படும்; அல்லது ஒன்று முதலிய பந்தங்களை (தளைகளை) அடுத்து முடிவது அடி என்று கூறினும் அமையும். செய்யுள் இயற்ற வேண்டப்படும் உறுப்புகளில் இதுவும் ஒன்று. இவ்வடி குறள் அடி, சிந்தடி, அளவடி, நெடில் அடி, கழிநெடிலடி என ஐந்து வகைப்படும்.