பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அடிப்படை உரிமைகள்

அடிப்படை உரிமைகள்


(2) கூடும் உரிமை, பிரயாண உரிமை, குடியேறும் உரிமை : குடிமக்கள் ஆயுதம் தாங் காமல் அமைதியாகக் கூட்டம் கூடலாம். தங்களுக் குள் குழாங்களையும் சங்கங்களையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்தியாவின் எல்லைக்குள் எந்த இடத்திற்கும் பயணம் செய்யலாம். எங்கும் வசிக் கலாம், குடியேறலாம். ஆனால் ஒவ்வொரு உரிமைக் கும் விலக்குகள் உள. அந்தந்த உரிமைக்குத் தக்க வாறு, பொது அமைதிக்காகவோ அல்லது பொது நன்மைக்காகவோ அல்லது மக்களின் நன்னெறியை முன்னிட்டோ, அல்லது தபசில் இனத்தாரின் பாது காப்புக்காகவோ நியாயமான கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் சட்டத்தில் ஏற்படுத்தலாம்.

(3) தொழிலுரிமை, சொத்துரிமை: இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கண்ட நிபந்தனைகளுக் குட்பட்டு, இந்தியக்குடிகள் எந்தத் தொழிலையும் செய்யலாம்; எந்த வாணிகத்திலும் ஈடுபடலாம். அவர்கள் சொத்துகள் சம்பாதிக்கலாம்; அவைகளை அனுபவிக்கலாம்; வழங்கலாம்.

(4) உடல் உரிமை : சட்டத்தால் விதிக் கப்பட்ட முறையாலன்றி, எந்த மனிதனுடைய உயிரையும் வாங்க முடியாது; எவனையும் சிறைப் படுத்த முடியாது. சிறைப்படுத்தப்பட்டவனுக்கு, அவனைச் சிறைப்படுத்தின காரணத்தைக் கூடிய விரைவில் தெரியப்படுத்தவேண்டும். தற்காப்புக்காக அவன் ஒரு வழக்கறிஞரை வைத்துக்கொள்ளலாம். சிறைப்படுத்தப்பட்ட பிறகு 24 மணிக்குள் அவனை ஒரு மாஜிஸ்திரேட்டு முன்பாகக் கொண்டுசெல்ல வேண்டும். யாதொரு செயலும் அது செய்யப்பட்ட காலத்தில் சட்டப்படி குற்றமாயிருந்தால் குற்ற மாகுமே யல்லாமல், பிறகு குற்றமென்று சட்டம் செய் யப்பட்டால், குற்றமாகாது. குற்றத்துக்குத் தண்டனை யும் அக்குற்றம் செய்யப்பட்டபோது எவ்வளவு இருந் ததோ அதற்குமேல், பிறகு செய்யப்பட்ட சட்டத்தால், ஒருவனுக்கு அதிகமாய்க் கொடுக்கக் கூடாது. ஒரே குற்றத்துக்கு ஒரு மனிதனை ஒருதடவைக்குமேல் விசாரித்துத் தண்டிக்கக்கூடாது. குற்றம் சாட்டப் பட்ட எந்த மனிதனும், அவன் குற்றம் மெய்ப்பிக்கப் படும் வரையில் குற்றமற்றவன் என்று மதிக்கப்பட வேண்டுமாதலால், அவனே அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டு சாட்சியம் சொல்ல அவனை வற் புறுத்தக் கூடாது. மனிதர்களைக் கட்டாயப்படுத்தி அவர்களிடம் அடிமைகளைப்போல் வேலை வாங்கக் கூடாது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தீங்கு நேரக்கூடிய வேலைகளில் அமர்த்தக்கூடாது.

தடுப்புக்காவல் (Preventive Detention) : உடல் உரிமைகள் இத்தன்மையனவாய் இந்தியாவில் இருந்தபோதிலும், இந்திய அரசியல் சட்டப் படி, நாட்டின் பாதுகாப்புக்காகவோ, அயல்நாட்டு உறவுக்காகவோ, உள்நாட்டு அமைதிக்காகவோ எதிர் காலக் குற்றத்தைத் தடுக்க முன்காப்பாக மனிதர் களை விசாரணையின்றிச் சிறைப்படுத்தச் சட்டம் செய்ய லாம். இதற்குத் தடுப்புக் காவல் என்று பெயர். அதி காரத்தைச் சீர்ப்படுத்தும் முறையில், அரசியல் அமைப் புச் சட்டத்தில் பல நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் 22வது பிரிவில் விரிவாக விதிக்கப்பட்டுள்ளன. மத உரிமை : நாட்டில் பொது அமைதி, மரியாதை, ஒழுக்கம், நேர்மை, சுகாதாரம் இவைகளுக் குக் குந்தகமில்லாமல், மனிதர் தங்கள் தங்கள் மனச் சாட்சிக்குத் தகுந்தபடி எந்த மதத்தையும் நம்பலாம்; அனுசரிக்கலாம்; பரப்பலாம். தங்களுக்கு விருப்பு மான மத நிறுவனங்களையும் தர்மங்களையும் ஏற்படுத்த லாம், நடத்தலாம். எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தின் செலவிற்காகவும் அரசாங்கம் எந்த வரியையும் எவரிடத்திலும் கட்டாயமாக வசூலிக்கக் கூடாது. மத நிறுவனங்களின் சொத்துக்களைப் பரிபாலிப்ப திலும், பொதுவாக அவற்றின் பொருளாதார விஷயத் திலும் அரசியல் காரியங்களிலும் மாத்திரம் அரசாங்கம் தலையிடலாம். 4. கல்வி, பண்பாட்டுரிமை : இந்தியாவில் வசிக்கும் மக்களுக்குத் தங்கள் தங்கள் மொழி, வரி வடிவம் (Script), பண்பாடு இவைகளைக் காப்பாற்றிக் கொள்ள உரிமையுண்டு. அரசாங்கப் பள்ளிகளி லாவது அல்லது அரசாங்கத்திடம் பொருளுதவி பெறும் பள்ளிகளிலாவது மதம், இனம், சாதி, மொழி காரணமாக ஒருவருக்கும் இடம் மறுக்கப்படக் கூடாது. அரசாங்கப் பணத்தாலேயே நடத்தப்படும் எந்தப் பள்ளியிலும் மதம் பற்றிய பாடங்களைக் கற்பிக்கக் கூடாது. மற்றப் பள்ளிகளிலும், மதம் பற்றிய பாடங்களைக் கற்க மாணவர்களைக் கட்டாயப் படுத் தக்கூடாது.சிறுபான்மையினர் தங்கள் விருப்பப்படி கல்வி நிலையங்களை ஏற்படுத்தி நடத்திக் கொள்ளலாம். 5. சொத்துரிமை: இந்தியக் குடிகளுக்கு சொத்து சம்பாதிக்கவும் அனுபவிக்கவும் வழங்கவும் உரிமையுண்டென்று முன்பே கண்டோம். ஆனால் குடி களுடைய சொத்தைப் பொதுக் காரியங்களுக்காகக் கட்டாயமாகக் கைப்பற்ற அரசாங்கத்துக்கும் அடிப் படை அதிகாரமுண்டு. இவ்வதிகாரத்துக்கு ஆங்கிலச் சட்டத்தில் சொத்தெடுப்பு அதிகாரம்' (Eminent Domain) என்று பெயர். இந்தியாவிலும் அவ்வதிகாரம் உண்டு. ஆனால் அது பின்வரும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது: 1. சட்ட ஆதரவின்றி எவருடைய சொத் தையும் அரசாங்கம் கைப்பற்றக்கூடாது. 2. அப்படிக் கைப்பற்றுவதும் பொதுநலக் காரியங்களுக்காகத்தான் செய்யவேண்டும். 3. கைப்பற்றிய சொத்துக்கு, சொத் துக்காரனுக்கு ஈடு செய்யவேண்டும். 4. அந்த ஈடும் சட்டத்தில் நிருணயிக்கப்படவேண்டும்; அல்லது அதை நிருணயிக்கும் முறையாவது சட்டத்தில் விதிக்கப்பட் டிருக்க வேண்டும். 6. உரிமைகளைப் பாதுகாக்கும் உரிமை : உரிமைகளை ஏட்டில் எழுதி வைத்தபோதிலும், அவை களை நடைமுறையில் பாதுகாக்க வழி செய்யாவிட்டால் அவை கொஞ்சமும் பயன்படா. இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க, உச்ச நீதிமன்றத்தி்ற்குக் 'கட்டளை' (Wxit} அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவ்விதக் கட் டளைக்கு மனுச் செய்யும் உரிமையே ஓர் அடிப் படை உரிமையாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதே மாதிரிக் கட்டளைகளைப் பிறப்பிக்க உயர் நீதிமன்றங் களுக்கும் அதிகாரமுண்டு. இந்திய அடிப்படை உரிமைகளில் சில இந்தியக் குடிகளுக்கே உரியன. மற்றவை மனிதர் யாவர்க்கும் உரியன். உதாரணமாகப் பொது நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் நுழையும் உரிமை (பிரிவு 15), அரசாங்க வேலைகளைப் பெறுவதில் சமத்துவ உரிமை (பிரிவு 16), மற்றும் 19 ஆம் பிரிவிற் கண்ட பல சுதந் திரங்கள் இந்தியக் குடிமக்களுக்குரியன. உரிமை, மதவுரிமை, கட்டாயக் கைப்பற்றுதலுக்குப் பாதுகாப்பான சொத்துரிமைகள் இவை மனிதர் யாவர்க்கும் பொதுவானவை. உடல் அடிப்படை உரிமைகள் என்று விவரிக்கப்பட் டிருக்கும் உரிமைகளேயன்றி, இந்திய அரசியலமைப் புச் சட்டத்தில், அரசாங்கத்தார் கடமையாகக் கையாள வேண்டிய பல அடிப்படைக்கொள்கைகளும் (Directive principles) கூறப்பட்டுள்ளன. ஆனால் அக்கொள்கை கள் நீதிமன்றங்களில் நிறைவேற்றக் கூடியவையல்லஇ-2