பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அண்டிறீக் பாதிரியார்

10

அணுசக்தியும் மருத்துவமும்

அவைகளுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் முரண் ஏற்பட்டால், அடிப்படை உரிமைகள்தாம் வெல்லும். எனினும் அடிப்படை உரிமைகளின் நிபந்தனைகளை நியாயமானவையோ அல்லவோ என்று தீர்மானிக்க இக்கொள்கைகள் பயன்படுகின்றன.

போரினாலோ அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப் பினாலோ அல்லது உள்நாட்டுக் கலகங்களாலோ நாட் டில் அவசர நிலை (Emergency) ஏற்பட்டுள்ளது என்று ராஷ்டிரபதியால் பிரகடனம் செய்யப்பட்டு, அப்பிர கடனம் அமலிலிருக்கும் காலத்தில், இந்திய அரசிய லமைப்புச் சட்டம் 19 ஆம் பிரிவில் கண்ட சுதந்திரங் கள் மறைவடையும். அப்பொழுது அச்சுதந்திரங் களுக்கு மாறாகச் சட்டங்களைச் செய்யலாம். அக்காலத் தில் அடிப்படை உரிமைகளைக் காப்பாற்ற நீதிமன்றங் களுக்குள்ள கட்டளை அதிகாரத்தையும் ராஷ்டிரபதி நீக்கிவிடலாம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் என்று கூறப்பட்டிருக்கும் உரிமைகளே யன்றி, வேறு முக்கிய உரிமைகளும் உள. தேர்தல் களில் வயது வந்தவர்கள் எல்லாருக்கும் உள்ள வாக் குரிமை, 265 ஆம் பிரிவுப்படி சட்ட சம்மதமில்லாமல் யாதொரு வரியும் விதிக்கப்படக்கூடாது என்ற மக் களின் உரிமை, பார்லிமென்ட், மாநிலச் சட்டசபை கள் உறுப்பினர்களுக்குள்ள பார்லிமென்ட் சிறப்புரி மைகள் (Parliamentary Privileges) இவைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆர். வீ. கி.

அண்டிறீக் பாதிரியார் (Henrique Henriques 1520-1600): முத்துக்குளித்துறைப் பரவ மக்கள் செய்த பொருளுதவியாலும், சேசு சபை துணைச் சகோதரர் கொன்சால்வசு என்பவரின் உழைப் பாலும் இந்தியாவிலேயே முதன் முதல் தமிழ் மொழிக்கு 1577 ஆம் ஆண்டிலேயே அச்சு எழுத்துக் களை உண்டாக்கிப் பல நூல்களை அச்சிட்டுத்

[காமபஞஞ்படுதசேகு பாதிரிய யாாதமிழிே பிதி தடுதழுதீன தமபி GUY வணக்கம். 10]

"தம்பிரான் வணக்கம் " என்ற நூலின் அச்சில் ஒரு பகுதி

'தமிழச்சுத் தந்தை' என்ற பெயர் பெற்றவர் இவரே. போர்ச்சுகல் நாட்டில் கொயிம்பிராப் பல்கலைக்கழகத் தில் கல்வி பயின்று, சேசு சபைக் குருவாகி, 1546ஆம் ஆண்டில் கோவா நகர் சேர்ந்தார். தமிழ் நாட்டில் வாழும் கடற்கரை மக்களைக் கண்காணிக்கும்படி புனித சவரியார் இவரை அனுப்ப, இவரும் 6-2-1600-ல் சாகும்வரைத் தமிழ் மக்களுக்கே தொண்டு புரிந்தார். ஐரோப்பியருள் முதன் முதலாகத் தமிழை முறையே கற்று மேல்நாட்டு முறைப்படி தமிழுக்கு இலக்கணம் எழுதித் தமிழைப் பிறருக்குக் கற்பித்தார். அகராதி ஒன்றும் எழுதியதாகத் தெரிகிறது. தந்தை என்று பொருள்படும் Padre (பாதிரி) என்ற போர்ச்சுகேசியச் சொல் - ஆர் என்ற சிறப்பு விகுதியோடு 'பாதிரி யார்' என்று இவர் நூலில் முதன் முதலாக வருகிறது. இவர் எழுதிய இலக்கணம், அகராதி, கொம்போசி யாையரு (Confessionario) என்ற நூல்கள் இதுவரை கிடைக்கவில்லை. அச்சான இவர்தம் நூல்களுள் நமக் குக் கிடைத்திருக்கின்றவை மூன்று: 1. தம்பிரான் வணக்கம்: 16 பக்கங்கள். கொல் லத்தில் 20-10-1578-ல் அச்சாகியது. இதன் ஒரே பிரதி அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உள்ளது. 3. பிளாஸ் 2. கிரீசித்தியானி வணக்கம்: 132 பக்கங்கள். கொச்சியில் 14-11-1579-ல் அச்சாகியது. இதன் ஒரே பிரதி பாரிசு நகரில் அரசியலார் நூலகத்தில் உள்ளது. என்ற அடியார் வரலாறு நூலின் தலைப்பு, முகவுரை, சாங்க்டோரும் (Flos Sanctorum) பொருள் அட்டவணை கிடைக்கவில்லை. 20·5 × 14 × 3.5 செ. மீ. அளவும், 669 பக்கமும் கொண்ட மீதி நூலின்

[Efta lara fe fez,eGoa:no Inode Ix xvi. ரார்தரு வலிலியவன or மருத்திவு ம Lara Tamul:fitaeCoulã:anodclxxvIL டாக்கிஎழுதது. கொல்லத்தீதுண ஏ+ 4ஆ*ேஉஎடூமச்ேேன.1(-)1. தஞ்த்துது.]

[[கோவாவிலும் கொல்லத்திலும் உண்டாக்கிய அச்சு எழுத்துக்கள்]]


ஒரே பிரதி வாட்டிக்கன் (Vatican) நூலகத்தில் உள்ளது. முந்திய இரண்டு நூல்களையும் 1963-ல் தூத்துக்குடித் தமிழ் இலக்கியக் கழகம் மீண்டும் அச்சிட்டது. மூன்றாவது நூல் அச்சாக இருக்கிறது. தமிழில் முதன் முதல் அச்சான நூல்கள் இவை தாம். 1577-ல் சகோதரர் கொன்சால்வசுவும், 1578-ல் சுவாமி பாரிய (Faria) அடிகளாரும் முறையே கோவா விலும் கொல்லத்திலும் உண்டாக்கின எழுத்துக்கள் 'தம்பிரான் வணக்கத்தின்' இறுதிப் பக்கத்தில் வரு கின்றன. அவற்றின் படத்தைப் பார்க்கலாம்.

குமரிமுனை, கோவா, கொச்சி, கொல்லம், கடியபட்டினம், புன்னைக்காயல், தூத்துக்குடி, மன்னார், பெரியதாழை, பட்டணம், இடங்களிலிருந்து தமிழ்நாடு பற்றி ஏறத்தாழ 70 வேம்பார் முதலிய மடல்கள் எழுதியிருக்கிறார். இவை வரலாற்றுக்கு Indica' என்ற' இன்றியமையாதவை. இவற்றில் பல 'Documenta அன்பும், பண்பும் மிக்க அண்டிறீக் பாதிரியார் கடற் வரிசையில் அச்சாகியிருக்கின்றன. கரையில் உழைத்த சேசு சபைக் குருக்களுக்கு 25 ஆண்டுகளாகத் தலைமை தாங்கினார். இவர் ஒரு சிறந்த தமிழ்த் தொண்டர்.ச. இரா.

இக்காலத்தில் பல்வேறு துறைகளிலும் பலவிதங்களில் • அணுசக்தியும் மருத்துவமும்: பயன்பட்டு வரும் யிலும் மிகவும் உதவியாக இருக்கிறது. சிறப் அணுசக்தி மருத்துவத்துறை