பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அணுசக்தியும் மருத்துவமும் பாக நோய்களின் தன்மைகளைக் கண்டுபிடிப்பதிலும், புற்றுநோய்ச் சிகிச்சையிலும் அணுசக்தியின் பயன் குறிப்பிடத்தக்கது. அணுசக்தி மருத்துவம் உதவி : அ. ஐ.நா. செய்தி இலாக்கா, சென்னை. கதிரியக்கம் கொண்ட 'ஐசோடோப்புகள்' (த.க.) மூலமாகவே மருத்துவத்துறையில் அணுசக்தி அதிகமாகப் பயன்படுகிறது. சர். வில்லியம் குரூக்ஸ் Sir William Crookes) என்ற ஆங்கிலேய ரசாயன நிபுணர் 1866 செப்டெம்பர் 2-ல் ஐசோடோப்புகளைக் கண்டுபிடித்தார். ஒளியினால் போட்டோ பிளேட்டில் எப்படி மாறு பாடு காட்டப்படுகிறதோ, அம்மாதிரி ஒளி இல்லாம லேயே இருட்டு அறையிலும் போட்டோ காகிதங் களுடன் ஐசோடோப்புகளை வைத்தால் அவற்றில் மாறுபாடு உண்டாக்கக்கூடிய சக்தி உண்டு. இதை யொட்டி, இவற்றை உடலின் வெவ்வேறு பாகங்களி ருந்து எடுக்கும் தசைகளுக்குள் உட்செலுத்தி, போட்டோ மூலமாகத் தசைகளில் ஏற்படும் மாறுதல் களைக் கண்டுபிடிக்க இயலும். இந்த அணுசக்தியைப் பிற உலோகங்களுக்கு ஏற்றி, அவ்வுலோகங்களைப் பின் உள்ளுக்குக் கொடுக்கலாம். வாய் வழியாகவோ அல்லது நேராகவே ஊசியின் மூலமாகவோ இரத்தத் தில் சேரும்படி செய்யலாம். இப்படிப் பல உலோ கங்களைச் செய்யலாம். எனினும் சில உலோகங்களே இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கியமாக ஐயோடின்-131, பாஸ்பரஸ்-32, தங்கம்- 198, சோடியம்-24 இவற்றுடன் இன்னும் சில உலோ கங்களுக்கும் அணுசக்தியை ஊட்டிப் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றுக்கு ஊட்டப்பட்ட அணுசக்திக்கு ஒரு நிருணயிக்கப்பட்ட ஆயுள் உண்டு. உதாரணமாக, பாஸ்பரஸ்-32க்கு 8 நாட்கள் உயிர். அதன் பிறகு அதனுடைய அணுசக்தி குறைந்து, அது மற்ற பாஸ்பர 11 அணுசக்தியும் மருத்துவமும் சைப்போல் ஆகிவிடும். அதில் அணுசக்தி இருக்கும் வரையில், எக்ஸ்-கதிர் அல்லது ரேடியத்தால் என் னென்ன மாறுபாடுகளை உடலில் ஏற்படுத்த முடியுமோ, அவற்றையெல்லாம் இப்பொருளைக் கொண்டே செய்ய முடியும். ஆனால், இந்தக் குறித்த காலம் சென்றபின், அதாவது அதனுடைய ஆயுள் கழிந்தபின், அதற்கு எந்தவிதமான சக்தியும் இல் லாமல் போய்விடுகிறது. இயற்கையிலேயே இச்சக்தி ரேடியத்திற்கு உண்டு. இவ்வுலோகங்களுக்கு இந்தச் சக்தி ரேடியத்தைக் கொண்டு ஊட்டப்படுகிறது. இந்தியாவில் அணுசக்தியூட்டப்பட்ட உலோகங்கள் இன்னும் ஆக்கப்படவில்லை. இவற்றை இப்பொழுது அயல்நாடுகளிலிருந்தே, சிறப்பாக இங்கிலாந்தில் லண்டன் அருகில் உள்ள பெர்க்லியிலிருந்தே இந் தியா வரவழைத்துக்கொள்கிறது. ரேடியோ பாஸ்பர சிற்கு 8 நாட்கள் உயிர் இருப்பதனாலும், லண்டனி லிருந்து சென்னை வந்து சேர இடையே 2 நாட்கள் கழிந்துவிடுவதாலும், இது இந்தியாவிலுள்ள ஒரு நோயாளிக்குக் கொடுக்கப்பட வேண்டுமானால், மீதி உள்ள 6 நாட்களுக்கே பயன்படுகின்றது. அணுசக்தி வாய்ந்த இந்த உலோகங்களை உடலில் செலுத்துவதனால் நோயைக் கண்டுபிடிக்க இயலும். நோயாளியினுடைய இரத்தத்தில் ஒரு சிறிது அளவு எடுத்து, அதில் இவ்வணுசக்தி வாய்ந்த உலோகத் தைக் கலந்து, மறுபடியும் அந்த அளவு இரத்தத்தையே உடலில் செலுத்தியதும், சிறிது நேரத்திற்கெல்லாம் அது உடல் முழுவதும் பரவிவிடுகிறது. எவ்வளவு அணுசக்தி உள்ளே செலுத்தப்பட்டது என்பதை முதலில் குறித்துக் கொள்ளுதல்வேண்டும். சிறிது நேரம் கழித்து, அவ்வணுசக்தி அந்நோயாளியின் ஒரு குறிப்பிட்ட அளவு இரத்தத்தில் எவ்வளவு காணப் படுகின்றது என்று நிருணயித்தோமானால், அதி லிருந்தே அந்த நோயாளிக்கு எவ்வளவு இரத்தம் இருக்கிறது என்றும் சொல்லிவிட முடியும். மற்றும், இந்த அணுசக்தியூட்டப்பட்ட இரத்தச் சிவப் பணுக்கள் உயிரோடு இருக்கும்வரையில், இவ்வணு சக்தியும் சுற்றிக்கொண்டே வரும். இதிலிருந்து நீண்ட ஆயுளுள்ள அணுசக்தியை ஏற்றி இருப்போமே யானால், இரத்தச் சிவப்பணுவின் ஆயுள் என்ன வென்று நிருணயிக்கலாம். மற்றும், இந்த அணுசக்தி வாய்ந்த பொருள்கள் எங்கெங்கே புற்றுப்புண் காணப்படுகின்றதோ, அங்கெல்லாம் அதிகமாகத் காணப்படாத தங்குகின்றன. சருமத்தின் மேலே உட்புண் இருக்குமென்று ஐயுற்றால், இந்த அணு சக்தியை இரத்தத்துடன் கலந்து உள்ளே செலுத்தி, கைகர் முல்லர் கவுன்டர்' என்ற எந்திரத்தினால் எந்த இடத்தில் அதிகமாக அணுசக்தி காணப்படுகின்றது என்று கண்டு, அந்த இடத்தில் நோய் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம். இது நோய் இருப் பதைக் காட்டுமே ஒழிய, அந்த நோயின் காரணம் நிச்சயமாகப் புற்றுப்புண்தான் என்றும், கிருமிகளால் இரத்த ஓட்டம் அதிகமாக ஏற்படுவதால் அல்ல என் றும் திட்டமாகக் காட்டாது. பெரும்பாலும் மருத்துவ முறைப்படி நோயாளியைப் பரிசோதனை செய்வதால், புற்றுப்புண்ணினால் அல்லது கிருமிகளினால் நோய் ஏற் பட்டது என்று சொல்லிவிட முடியாது. ஆனால் ஓர் அவயவத்தில் தடிப்புக் காணப்படும்போது, அது கட்டி தானா என்று நிச்சயிப்பதற்கு இந்த அணுசக்தி மிகவும் உதவுகிறது. மனித உடலில் வெவ்வேறு பாகங்களில் வெவ் வேறு உலோகங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. உதாரணமாக, தைராய்டு சுரப்பி கழுத்தில் இருக் கிறது. அதிலே அயோடின் அதிகமாக இருக்கிறது. இந்தத் தைராய்டு சுரப்பியில் நோய் ஏற்படும் காலத்