பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அம்மோனியா மான குறி மூலம் அமைத்திருக்கின்றனர். கையால் குறிக்கும் அபிநயம் ஒரு பொருளையும், உணர்ச்சியால் ஏற்பட்ட நிலையையுந்தான் காட்டக்கூடும். உதாரண மாக 'மலர்', 'பழம்' முதலியவற்றையும் 'வா', 'போ' என்ற செயல்களையும், துயருற்றிருந்தால் கன்னத்தில் கையை வைத்துக்கொள்ளுதல் (பதாகம்), கோபமா யிருந்தால் ஸூசீ ஹஸ்தத்தால் அதட்டுதல், ஆணையிடு தல் முதலியவற்றைக் காட்டலாம். ஆனால் உணர்ச்சி களை முகத்தாலும், முக்கியமாகக் கண்களால் மட்டுமே காட்ட முடியும். ரசங்களும் பாவங்களும் கண்பார்வை மூலம் காட்டப்படவேண்டும். கண்ணில் உணர்ச்சி காணப்படாமல், கையால் காட்டப்படும் குறிகளில் மட்டுமிருந்தால் உயிரற்ற அபிநயமாகத் தோன்றும். பரதர் எழுதிய பரத சாஸ்திரமும், சமஸ்கிருதத் தில் உள்ள நூற்றுக்கணக்கான வேறு நூல்களும் இந்த அபிநயக்கலையை விளக்குகின்றன. நடுக்காலத் தில் எழுந்த நூல்களில் சாரங்கதேவரின் சங்கீத ரத்னாகரத்தின் 7ஆம் அத்தியாயம் முக்கியமான பகுதி. பிற்காலத்தில் இந்தியாவின் பல பிராந்தியங்களில் வெவ்வேறு நூல்கள் கையாளப்பட்டன. தென்னாட் -டில் நந்திகேசுவரரின் 'அபிநயதர்ப்பணம்' தமிழ், தெலுங்கு மொழிபெயர்ப்புடன் நட்டுவனாரால் கையாளப்பட்டது. கேரளத்தில் கதகளி அபிநயத் திற்காக 'ஹஸ்தலக்ஷண தீபிகை' என்ற நூல் தொகுக் கப்பட்டது. வங்காளம், ஆஸாம் (அஸ்ஸாம்), நேப் பாளம் முதலிய இடங்களில் சுபங்கரரின் 'ஹஸ்த முத்தாவளி' என்ற நூல் வழங்கி வந்தது. கதை தமிழில் சிலப்பதிகாரத்திலும், அதற்கு அடி யார்க்குநல்லார் எழுதிய உரையிலும் நடனக் கலை யைப் பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன. தழுவாது, பாட்டில் அமைந்த கருத்துகளையும் உணர்ச்சிகளையும் கைகளைக் காட்டி உணர்த்தும் கூத்தை 'அவிநயக் கூத்து' என்று இதில் குறிக்கப் பட்டுள்ளது. இன்று தமிழ் நாட்டில் சிறப்பாக ஆடப் படும் 'பரத நாட்டியம்' என்று வழங்கும் நடனத்தை 'அவிநயக்கூத்து' எனலாம். தமிழிலே மிகப் பழங் காலத்தில் நடனக்கலை பற்றிக் கூத்த நூல் முதலான பல நூல்கள் இருந்ததாக உரையாசிரியர்களின் மேற் கோள்களிலிருந்து தெரிய வருகின்றது. ஆனால் அவை மறைந்துவிட்டனவோ, ஏட்டுச்சுவடிகளாக எங் காவது கவனிப்பாரற்றுக் கிடக்கின்றனவோ தெரிய வில்லை. வே.ரா. அம்மோனியா (Ammonia) : நைட்ரஜனின் ஹைடிரைடுகளுள் மிகவும் முக்கியமான வாயு. இதன் குறியீடு NH. விலங்குகளின் கழிவுப் பொருள்களைப் பாக்ட்டீரியா சிதைத்து இவ்வாயுவை உண்டாக்கு கின்றது. தயாரிப்பு: விலங்குகளின் குளம்பு, உரோமம், தோல், பறவைகளின் இறகு முதலிய பொருள்களைச் சிதைத்து வாலைவடி முறையில் அம்மோனியா வாயு வையும் அதன் கூட்டுக்களையும் பெறலாம். நிலக் கரியை வாலைவடிக்கும்போது கிடைக்கும் அம்மோனி யாக் கரைசலில் பல அம்மோனியக் கூட்டுகள் உள் ளன. ஆகையால், இந்தக் கரைசலை ஒரு காரத்துடன் கலந்து காய்ச்சினால் அம்மோனியா வெளிப்படும். வாணிக முறையில், இத்திரவத்தைச் சுண்ணாம்புடன் கலந்து காய்ச்சி அம்மோனியாவைத் தயாரிப்பது வழக்கம். அண்மைக்காலம்வரை இம்முறை ஒன்றே பயன்பட்டு வந்தது. ஆனால் இக்காலத்தில் அம்மோனியா மிக அதிக மாக உரப்பொருள்கள் உற்பத்தி செய்யப் பயன்படு வதால் இதைக் காற்றிலுள்ள நைட்ரஜனிலிருந்து தீயாரிக்கும் முறைகள் வழக்கத்திற்கு வந்துள்ளன. 0-8 அம்மோனியர் நைட்ரஜனையும் ஹைடிரஜனையும் நேரடியாகக் கூட்டி அம்மோனியாவைத் தயாரிக்கலாம். இதற்கு ஹாபர் முறை (Haber's process) என்ற பெயர் வழங்கு கின்றது. இதில் நைட்ரஜனும் ஹைடிரஜனும் 1:3 என்ற விகிதத்தில், 200-1000 வாயுமண்டல அழுத்தத் தில், 400-600 வெப்பநிலையில் வினைப்படுமாறு செய்யப்படுகின்றன. இவ்வினைக்கு ஓர் ஊக்கியும் (Catalyst) தேவைப்படுகின்றது. ஹாபர் முறையில், 1% பொட்டாசியம் ஆக்சைடும், 1% அலுமினியம் ஆக் சைடும் கலந்த சுத்தமான இரும்புத்தூளை ஊக்கி யாகப் பயன்படுத்துகிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து "சயனமைடு முறை' என்ற மற்றொரு முறை யும் வழக்கத்திலிருந்து வருகின்றது. சுட்ட சுண் ணாம்பிலிருந்து கால்சியம் கார்பைடைத் (Ca C2) தயாரித்து அதனைத் தூளாக்கி, மின்உலையில் 1100° வரை சூடாக்கி, அதன்மீது காற்றிலிருந்து பிரித்தெடுத்த நைட்ரஜனைச் செலுத்தினால் கால்சியம் சயனமைடு (Ca CN2) என்ற கூட்டுப்பொருள் கிடைக்கும். இது நீராவியுடன் வினைப்பட்டு அம்மோ னியாவைக் கொடுக்கின்றது. பண்புகள்: அம்மோனியா நிறமற்ற, காரமான, குளிர்வித்தோ, அழுத்தத்தை அதிகப்படுத்தியோ நெடியுள்ள வாயு. காற்றைவிட லேசானது. இதனைக் கொதிநிலை - 33.42°. மறைவெப்பம் கிராமுக்கு 327 எளிதாகத் திரவமாக்கலாம். திரவ அம்மோனியாவின் காலரிகள். ஆவியாகும்பொழுது இவ்வளவு அதிக மான வெப்பத்தை உட்கொள்ளுவதனால் இது குளி ரூட்டும் எந்திரங்களில் பயன்படுத்தப்படுகின்றது. அம்மோனியா நீரில் மிக அதிகமாகக் கரையும் தன்மை வாய்ந்தது. 1° - வெப்ப நிலையில், 1 கன அங்குல நீரில், 1,148 கன அங்குல அம்மோனியா கரையும். இக் கரைசல், எடையில் 46% அம்மோனியாவைக் கொண் டிருக்கும். அம்மோனியா காற்றில் எரியாவிடினும், ஆக்சிஜ னில் மஞ்சளாக எரிந்து நைட்ரஜனையும் நீராவியையும் தோற்றுவிக்கிறது. மக்னீசியம் இதில் எரிந்து நைட் ரைடாக மாறுகின்றது. சோடியமும் பொட்டாசியமும் இதனுடன் வினைப்பட்டு அமைடுகளைத் தருகின்றன. இந்த அமைடுகள் நீருடன் வினைப்பட்டு அம்மோனியா வைக் கொடுக்கின்றன. சாதாரணச் சூட்டில் அம்மோனியா சிதைவதில்லை. ஆயினும் அதிகமான வெப்பநிலையில் ஹைடிர்ஜனும் நைட்ரஜனுமாக ஓரளவு பிரிந்துவிடுகின்றது. அநேக உலோக ஆக்சைடுகளைச் சூடேற்றி அவற்றின்மீது அம்மோனியாவைச் செலுத்தினால், அவை குறைக்கப் பட்டு (Reduced) உலோகமாக மாறுகின்றன. இவ் வினைகளில் அம்மோனியா குறைப்பானாகப் பயன்படு கின்றது. அம்மோனியாக் கரைசல் கார இயல்புள்ளது. அதனால் அம்மோனியாவும் அதன் கரைசல்களும் அமி லங்களுடன் வினைப்பட்டு. உப்பையும் நீரையும் கொடுக்கின்றன. அலுமினியம், குரோமியம், மாங்க னீஸ், இரும்பு, பிஸ்மத்து, வெள்ளீயம் (வலுவென் 4} ஆகிய உலோகங்களின் கூட்டுக்களுடைய கரைசல் களுடன் அம்மோனியாக் கிரைசல் வினைப்பட்டு, அந்தந்த உலோகத்தின் ஹைடிராக்சைடைப் படிவிக் கும். இந்த வீழ்படிவுகள், அதிகப்படி அம்மோனியாக் கரைசலைச் சேர்த்தாலும் கரையா. ஆனால் செம்பு, வெள்ளி, நாகம், கோபால்ட்டு, நிக்கல் ஆகியவற்றின் உப்புக்கரைசல்கள் சிறிது அம்மோனியாக் கரைசல் சேர்த்தவுடன் ஹைடிராக்சைடை வீழ்படிவாகத் இந்த வீழ்படிவுகள் அதிகப்படி தோற்றுவிக்கும்.