பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அம்மோனியா அம்மோனியாவில் கரைந்து சிக்கலான கூட்டுக்களைக் (Complex Compounds) கொடுக்கின்றன. அம்மோனி யாவின் இந்தச் சிறப்பியல்பு பகுப்பு ரசாயனத்தில் பயன்படுகின்றது. அம்மோனியா உப்புக்கள்: அம்மோனிய உப்புக் களில் அம்மோனியம் (NH,) என்ற தொகுதி கார உலோகங்களைப்போல் இயங்குகிறது. இதனால் அம்மோனிய உப்புக்கள் தம் பண்புகளில் கார உலோ கங்களின் உப்புக்களை ஒத்திருக்கின்றன. தியைத் தனியே பிரித்தறிய இயலவில்லை; ஆயினும் இத்தொகு அடர் அம்மோனியம் குளோரைடுக் கரைசலைப் பாத ரசத்தை எதிர்மின்முனையாகக்கொண்டு 0° வெப்ப நிலையில் மின்பகுத்தால் அம்மோனியம்-ரசக்கலவை (Ammonium amalgam) கிடைக்கிறது. இது சோடியம் ரசக்கலவையை ஒத்த பண்புகள் கொண்டது. அம் மோனிய உப்புக்களைச் சூடேற்றினால் பதங்கமாகும் அல்லது சிதைவுறும். ஹாலைடுகள்: அம்மோனியம் குளோரைடு நவச்சாரம் (த. க.) எனப்படும். அம்மோனியாவுடன் புரோமினை வினைப்படுத்தி அம்மோனியம் புரோமை டைப் பெறலாம். நிறமற்ற படிகமான இது எளிதில் நீரிற் கரையும். ஹாலொஜன் அமிலங்களை அம்மோனி யாக் கரைசலைக் கொண்டு நடுநிலையாக்கி அம்மோனிய ஹாலைடுகளைப் பெறலாம். இவை நீரில் எளிதில் கரைவன. 18 அம்மோனியம் கார்பனேட்டு (NH,), CO, : அம் மோனியா, கார்பன்டையாக்சைடு, நீராவி இம் மூன் றையும் ஒரு ஈய அறையினுட் செலுத்தி இதை வாணிக முறையில் தயாரிக்கின்றனர். வெண்மையான படிகங்களான இதைக் காற்றில் வைத்தால் அம்மோ னியம் பைக்கார்பனேட்டாக (NH, HCO3) மாறிவிடு கிறது. இது ரொட்டி முதலியன சுடும் தொழிலில் “பேக்கிங் பவுடர்” (Baking powder) என்னும் பெயரில் பயன்படுகின்றது. அம் மோனியம் கார்பனேட்டு முகரும் உப்பு (Smelling salt) என்னும் பெயரில் மருத்துவத்தில் பயன்படு கின்றது. நைட்ரேட்டு: நைட் ரிக அமிலத்தை அம்மோ னியாவினால் நடுநிலை யாக்கி இதனைப் பெற லாம். இது பலவகை யான படிக வடிவங்களில் கிடைக்கிறது. இதைச் சூடாக்கினால் சிதைந்து நைட்ரச ஆக்சைடைக் கொடுக்கின்றது. அம் மோனியம் நைட்ரேட்டும் அலுமினியமும் கலந்த கலவை வெடிமருந்தாகப் பயன்படுகின்றது. அதிக மான நைட்ரேட்டைச் சிறிது நீரில் கரைத்தால் வெப்பநிலை மிகவும் தாழ் வதால் இது உறை கல வையாகவும் (Freezing mixture) பயன்படுகின் றது. சல்பைடுகள்: அம்மோனியாக் அமர்நாத் னியா மிகையாக இருந்தால் அம்மோனியம் சல்பைடும் ((NH,), S], ஹைடிரஜன் சல்பைடு மிகையாக இருந் தால் அம்மோனியம் ஹைடிரஜன் சல்பைடும் (NH, HS) தோன்றும். இவை நிறமற்ற கரைசல்கள். அம்மோனியம் சல்பைடுக் கரைசலில் பொடித்த கந்தகம் கரைந்து மஞ்சள் நிறமான அம்மோனியம் பாலிசல்பைடைக் ((NH,)Sx) கொடுக்கின்றது. இது பகுப்பு ரசாயனத்தில் ஒரு முக்கியமான வினைப் பொருள் ஆகும். சல்பேட்டுகள் : நிலக்கரி வாயுவைத் தயாரிக் கும் தொழிற்சாலைகளில் கிடைக்கும் அம்மோனி யாத் திரவத்திலிருந்து இதைத் துணைப்பொருளாகப் பெறலாம். அம்மோனியாக் கரைசலைக் கந்தகாமிலத் துடன் வினைப்படுத்தியும் தயாரிக்கலாம். இது நீரிற் கரையும் வெண்மையான படிகம். பொடித்த அம்மோ னியம் சல்பேட்டை 100 டிகிரிக்கும் குறைவாகச் சூடேற்றினாலே அம்மோனியா வெளியேறத் தொடங் கும். 300-இல் இது அம்மோனியம் ஹைடிரஜன் சல்பேட்டாக (NH, HSD ) மாறிவிடும். இது ஒரு வெண்மையான திண்மம். அம்மோனியம் சல்பேட்டு செயற்கை உரமாகவும், உலர்மின்கலங்களிலும், தீப் பற்றா ஆடைகளைத் தயாரிக்கவும் பயன்படுகின்றது. அம்மோனியம் பாஸ்பேட்டுக்களுள் முக்கியமா னது டை அம்மோனியம் ஹைடிரஜன் பாஸ்பேட்டு [(NH,) HPO ] என்ற வெண்மையான திண்மம். அம் மோனியம் ஹைடிராக்சைடைப் பாஸ்பாரிக அமிலத் துடன் அளவாகக் கலந்து இதைப் பெறலாம். இது மருத்துவத்திலும், உரமாகவும், தீயெதிர்ப்புப் பொரு. ளாகவும் பயன்படுகின்றது. பண்பறி பகுப்பு ரசாயனத்தில் (Qualitative. analysis), அம்மோனியா அல்லது அதன் உப்பு மிகச் சிறிய அளவிலிருந்தாலும் அதனைக் கண்டறிய நெஸ்லர் வினைப்பொருள் (Nessler's reagent) பயன்படுகின்றது. அமர்நாத் குகை கரைசலுடன் ஹைடிரஜன் சல்பைடு வினைப்படும்பொழுது அம்மோ மெர்க்குரிக குளோரைடு டன் சிறி தளவு பொட்டா சியம் அயோடைடுக் கரைசலைச் சேர்த்தால் மெர்க்குரிக அயோடைடு சிவந்த வீழ்படிவாகத் தோன்றும். இது அதி கப்படியான பொட்டாசி யம் அயோடைடில் கரைந்து நிறமற்ற பொட் டாசியம் மெர்க்குரயோ டைடு (K, Hg 1) என் னும் கூட்டுப்பொருளின் கரைசலைக் கொடுக்கின் றது. இதனுடன் பொட் டாசியம் ஹைடிராக்சை டைச் சேர்த்துக் காரமாக் கினால் நெஸ்லர் கரைச லாகும். இது சிறிதளவு அம்மோனியா அல்லது அதன் கூட்டுக்கள் இருந் தாலும்மஞ்சள் நிறத்தை யோ, தவிட்டு நிறமான (Brown) வீழ்படிவையோ கொடுக்கும். தென் அமர்நாத்: இது காச்மீரத்தின் பகுதியில், ஸ்ரீநகரிலிருந்து சுமார் 90 மைல் தொலை வில் இருக்கின்றது. இதன் உயரம் 17,321 அடி.