பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அமெரிக்க ஐக்கிய நாடுகள் அதனால் இவ்வகைத் தொழில்கள் பாதிக்கப்படும். அமிதலாப வரி உயர்ந்த விகிதத்தில் விதிக்கப்படுவ தால் மற்ற உயர்ந்த விகித வரிகளைப்போல அதையும் செலுத்தாமல் வெவ்வேறு வழிகளில் பலர் தப்ப முயல்வார்கள். அதனால் அதிலிருந்து வசூலாகும் அர சாங்க வருமானம் குறைவதுடன், நேர்மையானவர்கள் பாதிக்கப்படுவார்கள் ; ஏமாற்றுவோர் நலனடைவார் கள். இக்காரணங்களினால் அமித லாப வரி பல நாடு களில் யுத்த காலத்தில் விதிக்கப்பட்டாலும் யுத்தமே வில்லாத சமாதான காலத்துக்கேற்ற வரியாக அது கரு தப்படுவதில்லை. மு.ஆ.சா. அமெரிக்க ஐக்கிய நாடுகள் உலகி லேயே மிகப் பெரிய நாடுகளில் ஒன்று. வட அமெரிக் காவில் மித்தட்பவெப்ப மண்டலத்தில் அமைந்திருக் கிறது. பல இராச்சியங்கள் இணைந்த கூட்டாட்சி நடைபெறுகிறது. 1959 வரை இக்கூட்டாட்சியில் 48 இராச்சியங் கள் உறுப்பாக இருந்தன. 1959-ல் அலாஸ்கா (த.க.), ஹவையீ (த.க.) ஆகிய இரண்டும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இராச்சியங்களாக இணைந்தன. அதுவரையிலும் அலாஸ்காவும், ஹவையீயும் அமெரிக் காவின் பகுதிகளாக இருந்து வந்தபோதிலும் அவை முழு உரிமைகொண்ட இராச்சியங்களாக இருக்க வில்லை. 1959 ஜனவரி ஓல் அலாஸ்காவும் அதே ஆண்டு ஆகஸ்டு 21-ல் ஹவையீயும் அமெரிக்கக் கூட் டாட்சியின் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு அமெ ரிக்க ஐக்கிய நாடுகளின் 49 ஆவது, 50 ஆவது இராச் சியங்களாக ஆயின. இவ்விரு புது இராச்சியங்களும் இணைந்த பிறகு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பரப்பு: ச. 36,15,000 ச. மைல். மக் : 19,13,34,000 (1964). பார்க்க: அமெரிக்க ஐக்கிய நாடுகள் 1 - 111. அயல்நாட்டுக் கடன் (External Debt : ஒரு அரசாங்கம், அதற்குக் கிடைக்கும் வருமானத் தைவிட, அதிகமான பொருளைச் செலவிட விரும் பின், அதன் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும். இதனை எவ்வகையாலும் தவிர்க்க வேண்டும் என்பது பழைய நிதிக் கொள்கை. எனினும் நவீன அரசாங்கங்களின் நிதிக் கொள்கைப்படி துண்டு விழுதல் ஒரு சாதாரணப் பிரச்சினையாக மாறிவிட் டது. துண்டு எத்தன்மையது, எவ்வளவானது, எக் காரணங்களால் விளைந்தது போன்றவற்றின் அடிப் படையில்தான் அதைச் சரிக்கட்ட வழிவகைகளை வகுக்க இயலும். உள்நாட்டுக் கடன்தொகை, மத்திய (Central Bank) செலாவணிப் படைப்பு (Credit creation) அல்லது மாநில அரசாங்கங்களிட மிருந்து வாங்கிய கடன் முதலிய வகைகளால், துண்டி னைச் சரிப்படுத்தல் இயலும். பாங்கின் 20 ஆனால் இவ்வகைப்பட்ட உள்நாட்டுக் கடன் களால் எல்லாவகைத் துண்டினையும் சரிபடுத்த முடி யாது. அரசாங்கம் தொழில் வளர்ச்சியைக் கருதி மிகுந்த செலவை ஏற்றுக் கொண்டால் உள்நாட்டுப் பணம் அயல்நாட்டுப் பண்டங்களை வாங்குவதற்குப் பயனற்றதாகக்கூடும். இந்தியாவில் 1950 ஆம் ஆண் டிற்குப் பின் இத்தகைய நிலைகள் அடிக்கடி ஏற்பட் டன. அயல்நாடுகளுக்கு அனுப்பப்படக் கூடிய இந் திய விவசாயப் பொருள்களுக்கு அயல்நாடுகளில் போதிய சந்தைகள் இல்லை. அப்படி இருந்தாலும் அவைகளில் வாணிகமாற்று விகிதம் இந்தியாவுக்கு இலாபகரமாக இல்லை. இதன் விளைவாக மூலதனப் பொருள்களை இந்தியா வாங்கும்போதெல்லாம் அயல் நாட்டுக் கடன் கூடுதலாயிற்று. இக்கடனைக் கழிக்கச் சில மாற்று வகைகளைப் பின்பற்றலாம். ஒன்று, கடன் எந்தெந்த நாடுகளிலிருந்து பெறப்பட்டனவோ, அங் 'அயகும்சம் தந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத்தக்க பண்டங் களை ஆக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்தல். இரண்டாவது, வேறொரு நாட்டில் எவ்வெவ்வகை களில் வாணிகமாற்று சாதகமாக இருக்கின்றதென்று அறிந்து அவ்வவ்வகைகளில் உற்பத்தியைப் பெருக்கு தல், மூன்றாவது, அயல்நாட்டுக் கடன் வாங்கும் பொழுதே பண்டமாற்றுக் கணக்குப்படி (Barter) கட னைத் திருப்பும் முறைகளை வகுத்துக் கொள்ளுதல். இவற்றுள் மூன்றாம் வகைப்படி இந்தியா நான்காவது ஐந்தாண்டு திட்டத்திற்காக (1966–71) ரஷ்யா முத லான கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து கடனைப் பெற்றது. உள்நாட்டு அரசாங்கக் கடன், உற்பத்திப் பொருள்களையும், வருமானத்தையும் ஒரே சமுதாயத் தைச் சார்ந்த ஒரு சாராரிடமிருந்து மற்றொரு சாரா ருக்குப் பங்கீடு செய்யும் சாதனமாகும். அயல்நாட்டுக் கடன் ஒரு சமுதாயத்திலிருந்து மற்றொரு சமுதாயத் திற்கு நிரந்தரமாக உற்பத்திப் பொருள்களைக் கடத்துவதாகின்றது. மேலும் அயல்நாட்டுக் கடனுக் காகச் செலுத்தப்படும் வட்டிக்கு எதிர்மாறாக உள் நாட்டுக் கடனுக்கு அளிக்கப்படும் வட்டித் தொகை தேசீய வருமான வளர்ச்சிக்கு ஊனம் செய்வதில்லை. உள்நாட்டுக் கடன் மூலம் சரிக்கட்டும் நிதிக் கொள் கைக்கு வலுவளிக்கும் வகையில் ஒரு சாராரின் செலவு செய்யும் அல்லது வருவாய் பெறும் தொகையை மாற்றி அமைக்கக்கூடும். இத்தன்மை வெளிநாட்டுக் னுக்கு இல்லை. எவ்வளவு உள்நாட்டுக் கடன்தொகை கிடைக்கும் என்பதை வட்டி விகிதப்படி கணக்கிட முடியும். இத்தகைய கணக்கு வெளிநாட்டுக் கடனுக் கும் பொதுவாகப் பொருந்தும். எனினும் அயல் நாட்டுக் கடன்களுக்கு அளிக்கப்படும் வட்டித் தொகையும் முதலும் அந்நியச் செலாவணி அல்லது வேண்டுமாதலின் தங்க நாணய மாற்றுப் பிரமாணத்தின்படி செலுத்த வட்டிப் பணக்கணக்கீடு சில இடைஞ்சல்களுக்குள்ளாகின்றது. எ .ச.சு. நூல்கள்: A. R. Prest, Public Finance; R.A. Musgrave and P. S. Shoup, Readings in Economics of Taxation. கட இத அயனாம்சம் (Precession of Equinoxes): பூமியின் உருவத்தை ஒரு ஆரஞ்சுப்பழத்தின் உரு வத்துக்கு ஒப்பிடுவது வழக்கம், அதாவது, பூமி உருண்டையாக இருப்பினும், துருவங்களில் சிறிது தட்டையாகவும், பூமத்திய ரேகைப் பகுதிகளில் சிறிது உப்பலாகவும் காணப்படுகின்றது. னால் சூரியன், சந்திரன் இவற்றினுடைய ஈர்ப்பு பூமியின்மேல் இடத்துக்கிடம்' மாறுபடுகின்றது. இம்மாறுபாட்டின் காரணத்தால் பூமியின் அச் சுக்கு ஒருவிதமான சிறு அசைவு ஏற்படுகின்றது. ஆண்டுதோறும் பூமியினது அச்சு கிழக்கு நோக்கிச் சாய்கின்றது. பூமி ஆண்டுதோறும் ஒரு சிறிதளவு மார்ச்சு 20ஆம் தேதியன்றும், செப்டம்பர் 23ஆம் தேதியன்றும் வான மத்தியரேகையைக் கடந்து செல்லுகின்றது. மார்ச்சு 20 ஆம் தேதி கடந்து செல் லும் நிகழ்ச்சிக்கு வசந்த சம இரவு (Vernal Equinox) என்று பெயர். இவ் வசந்த சம இரவு முன் ஒரு காலத் தில் மேஷராசியின் தொடக்கத்தில் (முதற்புள்ளியில்) நிகழ்ந்தது. பிறகு பூமியின் அச்சின் சிறு அசைவினால் அது ஆண்டுக்கு 50" (20 நிமிடம் 20 விநாடிகள்) வீதம் பின்னடைந்து கொண்டேபோகின்றது. பூமி மேஷராசி யின் முதற்புள்ளியிலிருந்து புறப்பட்டுச் சூரியனை ஒரு முறை சுற்றி மீண்டும் அவ்விடத்திற்கே வருவதற்கு 865-242264 நாட்கள் ஆகின்றன. ஆனால், பூமி ஒரு குறிப்பிட்ட விண்மீனைக் குறியாகக்கொண்டு, சூரியனை