பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயனாம்சம் ஒருமுறை சுற்றி மீண்டும் அதே விண்மீனைச் சந்திப்ப தற்கு 365-256386 நாட்கள் செல்லுகின்றன. அதாவது முதலில் கொடுக்கப்பட்ட சூரிய ஆண்டைவிட இரண் டாவதாகக் கொடுக்கப்பட்ட நட்சத்திர ஆண்டு 20 நிமிடங்கள், 20 விநாடிகள் அதிகமாக உள்ளது ; இப் பின்னடைவுக்கு அயனாம்சம் என்று பெயர். பூமியினது அச்சின் வடதுருவத்தை நீட்டினால் அது வானமண்டலத்தை ஊடுருவிச் செல்லுவதைப் போலக் காணப்படுகின்றது. இந்த ஊடுருவல் நிகழும் இடத்தை வானமண்டல வட துருவம் (Celestial North Pole) என்கிறோம். வட துருவத்துக்கு மிக அண்மை யில் (1 டிகிரி தொலைவில்) ஒரு விண்மீன் காணப்படு கின்ற றது. அதுதான் துருவ நட்சத்திரம். அது எப்போ தும் சலனமின்றி ஒரே நிலையில் காணப்படுகின்றது. அயனாம்சம் 1. பம்பரத்தின் சுழற்சி வேகம் குறையும்போது அதன் உச்சி சில தடவை வட்டமாகச் சுற்றுகின்றது. 2.அயனாம்சத்தால் பூமியின் அச்சின் வட துருவ மும் வட்டமாக நகர்ந்து செல்லுகின்றது. இத்துருவம் ஒருமுறை வட்டமிட 25,870 ஆண்டுகள் செல்லும். ஏனைய நட்சத்திரங்கள் எல்லாம் அதைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. வானமண்டலத் தின் வட துருவத்துக்கும், துருவ நட்சத்திரத்துக்கும் இடையிட்ட தூரம் பல ஆண்டுகளாகவே கணிக்கப் பட்டு வந்துள்ளது. இத்தூரம் காலப்போக்கில் மாறிக்கொண்டே போவதாகக் கணிப்பின்மூலம் புலப் பட்டது. வான மண்டல துருவமே வட்டமாக நகர்ந்து செல்லுவதாகக் கண்டறியப்பட்டது. ஆனால் உண் மையில் அப்படி நகர்ந்து சென்றது வானமண்டல துருவம் அல்ல, பூமியின் வட துருவந்தான். வசந்த சம இரவின் பின்னிட்ட நகர்ச்சிக்கும், துருவத்தின் வட்ட வடிவ நகர்ச்சிக்கும் காரணம் பூமி யின் அச்சுக்கு நேரிடும் சிறிய அசைவுதான். மெது வாகச் சுழலும் ஒரு பம்பரத்திலும் இச்சிறிய அசை வைக் காணலாம். ஒரு பம்பரம் வெகு வேகமாகச் சுழலும்போது அதனுடைய உச்சி நிலைத்து நிற்பதைப் போலக் காணப்படுகின்றது. பம்பரத்தினது சுழற்சி யின் வேகம் குறையும்போது, அதன் உச்சி சில முறைகள் வட்டமாகச் சுற்றுகின்றது. அதைப்போலவே பூமி அச்சின் வட துருவமும் வட்டமாக நகர்ந்து செல் கின்றது. இத்துருவம் இவ்வாறு ஒருமுறை வட்டமிட 25,870 ஆண்டுகள் செல்லுகின்றன. அயனாம்சத்தின் காரணத்தால் வானமண்டலத்தில் சில விசித்திர விளைவுகளைக் காண்கின்றோம். இப் போது நாம் கண்ணுற்றுவரும் துருவ நட்சத்திரம் 21 அரங்கநாத கவிராயர் காலப்போக்கில் தன் நிலையை இழந்து நெடுந்தூரம் அகன்றுவிடும். இன்னும் 11,500 ஆண்டுகளுக்குப் பின் பூமியின் அச்சின் வடமுனை அபிஜித் (வீகா-Vega என்ற ஒளிமிக்க, அழகிய, நீலவண்ண நட்சத்திரத் தைக் காட்டி நிற்கும். எகிப்தியர் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு பிரமிடுகளை எழுப்பிய காலத்தில் அவர்களுக்கு டிரேக்கோ என்னும் நட்சத்திரக் கூட்டத்திலுள்ள தூபா என்ற விண்மீன்தான் துருவ நட்சத்திரமாகக் காட்சியளித்து வந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேஷத்தின் முதற் புள்ளியில் நிகழ்ந்து வந்த வசந்தத்தின் சம இரவு இப்போது மீன ராசியில் நிகழ்கின்றது. இன் னும் பல்லாயிரம் ஆண்டுகட்குப் பிறகு அது மீனத் தையுங் கடந்து கும்பராசியில் நிகழும். அணுக்கள், மூலக்கூறுகள் இவற்றின் இயக்கங் களிலும் இந்த அயனாம்சம் முக்கிய பங்கு பெறுகின் றது. பார்க்க: வானவியல்-முன்னிகழ்ச்சியும், தள் ளாட்டமும். 9-265. அரங்கநாத கவிராயர், அட்டாவதா னம் : தொண்டை மண்டலத்து வேளாள மரபினர்; சேக்கிழார் பெருமானுடைய குலத்து வந்தவர். சேக்கி ழார் குலத்தில் வந்த சொக்கநாதரின் பேரன் முறையி னர் இவர். 'அட்டாவதானம்' என வழங்கும் இவருக் குரிய சிறப்புப் பெயர் இவர்தம் ஆற்றலை விளக்க வல்லது. இவர்தம் பிறப்பிடம் எது என்பது திட்ட மாகத் துணிந்து சொல்லக்கூடவில்லை. இவர் பாடிய பாரத காவியத்தின் பாயிரப் பகுதியால் தெரியவரும் செய்திகளைக் கொண்டே சில நிகழ்ச்சிகளை நாம் அறிய முடிகிறது. இவர் நெல்லைநாட்டில் கோட்டூர் என்னும் ஊரின் அதிபதியாக அந்நாளில் விளங்கிய திருமலைவேள் என்பாரை அடுத்திருந்தார். இவ்வரசர் வைணவ சமயத்தினர். திருமலைவேள் அரங்கநாதரை நோக்கி "நமது இருவர் பெயரும் உலகிடை விளங்கப் பாரதத் தின் பிற்பகுதியைப் பாடித்தரல் வேண்டும்" என்று வேண்டினர். அந்நாளில் வில்லிபுத்தூரர் பாரதம் சிறப்பாகப் போற்றிக் கற்கப்பட்டு வந்தது; அதில் முதல் பத்துப் பருவம் வரையில் பாடிப் பின் பருவங் களை அவர் பாடவில்லை. அவர் பாடாது விடுத்த பிற் பகுதியைத் திருமலைவேளின் தூண்டுதலால் அரங்க நாதர் செய்தனர். இவர் இயற்றிய பாரதம் சௌப்திக பருவத்தின் 'சிகாமணிச் சருக்கம்' முதல் பதினெட் டாம் பருவமாகிய சொர்க்காரோகண பருவம் முடிய வுளது. தமக்கு முந்திய பாரத நூல்களுள் வில்லி புத்தூரர் பாரதத்தையும், மடுவைநகர்த் திம்மபூபன் வேண்டுதலால் அம்பலத்தாடுமையர் செய்த ஆதி பருவத்தையும் குறிப்பிட்டுள்ளார். அரங்கநாத கவி ராயர் செய்த பாரதம் 45 சருக்கங்களும் 2,477 செய்யுட் களும் கொண்டதாகும். அந்நாளில், துறைசை நகர் என்னும் துறையூர்ச் சமஸ்தானத்தில் வெங்கடாசல ரெட்டியாரின் புதல்வர் விசயவரதேந்திரர் அரசு செலுத்தி வந்தனர். அங்கே சென்னூரில் வாழ்ந்தவரும் திருமலையரசருக்கு நண்பரு மான பூபால ரெட்டியாரின் வேண்டுகோட்படி துறை யூரில் தமது பாரதத்தை அரங்கநாதர் அரங்கேற்றினர் என்று தெரியவருகிறது. திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிகரும் அவையின் தலைவராக வீற்றிருந்து கேட்டு மகிழ்ந்தனர். இந்த அரங்கேற்றம் நிகழ்ந்த காலம் கி. பி. 1753 என்பது 'ஏறிய சகாத்த மாயிரத்தறுநூற்றெழுபதினைந்தின்மேல்' எனத் தொடங்கும் பாயிரச் செய்யுளால் (23) அறியலாகும். அரங்கேற்றுவித்த பூபால ரெட்டியார் பொன், மணி, குதிரை, சிவிகை முதலிய வரிசைகளையும் வழங்கிச்