பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரசாங்க மத்திய போதனாமுறை.... சிறப்பித்தமையும் தெரியவருகிறது (25). பாடுவித்த திருமலைவேளும் இது போன்ற சிறப்பினை இப்புல வர்க்கு அளித்தனர் என்பது கவிஞர் தமது நூலகத் துத் துருவாசச் சருக்கம் 20 ஆம் பாடலில் கூறிய குறிப்பிளைக் கொண்டு அறியலாகும். இந்தக் காவியம் துறையூர் உபாத்தியாயர் மு.கோவிந்தப் பிள்ளையால் பல பிரதிகளைக் கொண்டு பரிசோதிக்கப்பெற்று, சென்னைப் பண்டிதமித்திர எந்திரசாலையில் 1902-ல் அச்சிடப்பெற்றுள்ளது. நிற்க, இரணிய விலாசம் என்னும் ஸ்ரீ பிரகலாதன விலாசம்' என்ற நாடக நூலை இயற்றியவர் புதுவை அரங்கநாத கவிராயர் என்று குறிக்கப்பட்டிருக்கிறார். இந்த நூலும் சென்ற நூற்றாண்டின் மத்தியில் அச்சி டப்பெற்றுள்ளது. இதன் இரண்டாவது பதிப்பு 1876-ல் வந்துள்ளமை திட்டமாகத் தெரியவருகிறது. இந்த நாடக நூலையும் மேலே குறித்த பாரதத்தையும் பார்க்குங் காலத்துத் தமிழ் நடையும், சொல்லாட்சியும் பெரிதும் மாறுபடக் காணலாம். இருவரும் வேறு வேறு புலவரே என்பது பாரதம் பாடியவரை 'அட் டாவதானம் எனக் குறிப்பிடும் அடைமொழி கொண்டே அறிதல் கூடும். மு.ச. அரசாங்க மத்திய போதனாமுறை ஆராய்ச்சி நிலையம், அலகாபாத் (உத் தரப் பிரதேசம்): மாநில, மத்திய அரசியலா ருக்குப் போதனாமுறையில் சிறந்த ஆலோசனைகளை வழங்கிவரும் இந்த நிலையம், 1909-ல் ஆரம்பிக்கப் பட்ட அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியினின்றும் வளர்ந்து, 1948ஆம் ஆண்டிலிருந்து இன்றுள்ளவாறு. உருவெடுத்து வளர்ந்து வருகிறது. மத்தியதரப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களைப் பயிற்று வித்தல், பொதுவியல் அறிவியல் ஆகிய துறைகளில் பயிற்சி பெருத ஆசிரியர்களுக்கு நடைமுறைப் பயிற்சி யளித்தல், படக்காட்சி, நூலகம், மறு பயிற்சி வகுப்பு, கருத்தரங்கு ஆகியவற்றை ஏற்பாடு செய்து போதனாமுறையைச் செம்மையுறச் செய்தல் போன்ற பல்வேறு திட்டங்களையும், குறிக்கோள்களை யும் கொண்டுள்ள இந்நிலையத்தில் கீழ்க்கண்ட பிரிவு கள் இருக்கின்றன. 1. ஆசிரியர் பயிற்சிப் பிரிவு. 2. ஆராய்ச்சித் துறை. 3. விஸ்தரிப்புப் பணிப் பிரிவு. ஆசிரியர் பயிற்சிப் பிரிவில், ஓராண்டு பயிற்சித் திட்டம், பகுதி நேரப் பயிற்சித் திட்டம், மறுபயிற்சி வகுப்புத் திட்டம், சொற்பொழிவு, சுற்றுலா, சமூகப் பணி, கண்காட்சி முதலியவைகளை ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளின் மூலம் சிறந்த ஆசிரியர்களை உரு வாக்க முயல்கிறார்கள். ஆராய்ச்சித் துறையில் போதனாமுறை, பாடத் திட்டம், மதிப்பிடுதல் போன்ற பிரிவுகளில் போதனா முறை சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளையும், தேர்வு சம்பந்தப்பட்ட பல ஆராய்ச்சிகளையும் செய்து வரு கிறார்கள். 22 அரசாங்க முதலீட்டுக் கொள்கை விஸ்தரிப்புப் பணிப் பிரிவில் பொதுவாகப் பணி களின் வாயிலாகப் பல துறைகளில் நேரடித் தொடர்பு கொள்கிறார்கள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை ஆராய்ச்சிப் பிரிவின் மூலமாகத் தீர்வு காண முயல் கிறார்கள். மேலும் அலகாபாத் கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்கள், மாணவரல்லாதவர்களுக்குள் இளம் விளையாட்டு வீரர்களைக் கண்டுபிடித்து உடற் பயிற்சித் துறையில் பல நூதன முறைகளைப் பயிற்றுவித்து உற்சாகமூட்டும் பணியில் உடற்பயிற் சிக் கல்விப் பிரிவு 1952ஆம் ஆண்டு முதல் பணி யாற்றி வருகிறது. மற்றும் இரண்டு மாதிரிப் பள்ளி களை நடத்திப் போதனாமுறையில் ஆராய்ச்சிகள் செய்து பல ஆக்கப் பணிகளை இந்த நிலையம் செய்து வருகிறது. அரசாங்க முதலீட்டுக் கொள்கை (State Capitalism): முதலீட்டுக் கொள்கை ஒரு பொருளியல் அமைப்பு. அதன் முக்கிய நோக்கம் இயற் கைப் படைப்பாலும் மனித ஆக்கத்தாலும் உருவாகும் மூலதனத்தைப் பயன்படுத்தித் தனியார் உடைமை யினையும் இலாப நன்மையினையும் இணைப்பதாகும். நுகர்வுப் பொருள்களின் உற்பத்தியினைப் பெருக்க முதலீட்டினை நெறிப்படுத்துவதும் அதன் குறிக்கோ ளாகும். ஆகவே அக்கொள்கை ஒரு பொருளியல் வழக்கு. அது பல வகைப்படும். அவையாவன : 1. வாணிக முதலீட்டுக் கொள்கை (Trade G.) 2. நிதி முதலீட்டுக் கொள்கை (Financial C.). 3. தொழில் துறை முதலீட்டுக் கொள்கை (Industrial C ). 4. அரசாங்க முதலீட்டுக் கொள்கை என்பன. இறுதியில் கூறிய கொள்கையினைத் திட்ட மிட்ட முதலீட்டுக் கொள்கை' (Planned C.) எனவும் கூறலாம். இக்காலத்தில் முதலீடுகளின் பெருந்தொகை தனியார் நிதித் தொகையினை மிஞ்சியதாக இருக் கிறது. ஆகவே அரசாங்கம் முதலீடுகளில் தலையிடத் துவங்கியது. மேலும், தனியார்துறை முதலீடுகள் போக உரிமை (Monopoly power), வியாபார மந்தம் பல தீமைகளை விளைவிக்கின்றன. சிறப்பாக, ஏக (Business depression) போன்ற தீமைகள் உருவாகின் றன. 1980-ல் உருவான மிகப் பெரிய தொழில் மந்தம்' (Great depression), மேற்கூறிய தீமைகளின் தன்மைகளை வெளிப்படுத்தியதுடன், அரசாங்கத்தை விழிப்புறவும் செய்தது. அதுமுதல் முதலீட்டுக் கொள்கை அரசின் கண்காணிப்பிற்கும் கட்டுப்பாட் டிற்கும் உட்பட்டது. ஆகவே நிதி முதலீட்டுக் கொள்கை அரசாங்க முதலீட்டுக் கொள்கைக்கு விட்டுக் கொடுத்தது. அரசாங்கம் முதலீட்டினை மேற் கொண்டபோதிலும் தனியார் முதலீட்டு உரிமைகள் பறிபோகவில்லை. அமெரிக்க நாடுகளிலும், ஓரளவிற்கு இந்தியாவிலும் நிலைபெற்ற கொள்கையாக இது உள்ளது. அரசாங்க முதலீட்டுக் கொள்கையின் தத்துவமும் நடைமுறையும் 'மார்க்சிச' (Marxist) நாடுகளில் வழக் கில் உள்ளன. இந்நாடுகள் கடைப்பிடிக்கும் இக் கொள்கை மிகத் தொன்மை வாய்ந்த முதலீட்டுக் கொள்கைக்கு (Classical thought) முரண்பட்டது அன்று. தொழில் வளம் பொருளாதாரக் கொள்கை யின் அடிப்படை என்பது இவ்விரு கொள்கைகளின் அடிப்படை நோக்கம். தனியார்துறை முதலீட்டுக் கொள்கையில் தனி உரிமையுண்டு. ஆனால் அரசாங்க முதலீட்டுக்கொள் கையில் அரசு முதலிடம் பெறுகிறது. தனியார் துறை முதலீட்டுக்கொள்கை சமுதாயத்தை வெறுக்கிறது. ஆனால் அரசாங்க முதலீட்டுக்கொள்கை தனியார் துறையினை மறுக்கிறது. தனியார்துறை முதலீட்டுக் கொள்கை இலாபத்தினையே கருதும் ஒரு கொள்கை. அரசாங்க முதலீட்டுக் கொள்கை இலாபம் கருதாது பொதுநலம் பேணும். கொள்கை. தனியார்துறை முத லீடு பொருளியல் துறையிலோ, பொதுத்துறையிலோ உரிமை கொண்டாட முடியாது. ஆனால் அரசாங்க முதலீட்டுக் கொள்கை எல்லா உரிமைகளையும் கொண்டது. தனி முதலீட்டுக் கொள்கை தனியார்துறை முதலீட்டைப் பெருக்குவதி லும் உரிமைகளை அதிகப்படுத்துவதிலும் முனைந்திருக் கிறது; அரசாங்க முதலீட்டுக்கொள்கை சமூக நன்மை யைப் பெருக்குவதில் முனைந்திருக்கிறது. அரசாங்க