பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம்

167

இனப்பெருக்கம்

ஒட்டிக்கொண்டு உறைகின்றது. குழலுருவம் பெற்ற தாயின் உடலினின்று புறத்தே புடைத்துக்கொண்டு சிறிய கிளைகள் தோன்றும். அவை வளர்ந்து தாயின் உருவத்தை முழுவதும் அடைந்து, குட்டிகள் போலக் காணும். பிறகு தாயைவிட்டு இவை ஒவ்வொன்றாக R நீங்கித் தனித்தனியாகத் தத் இச் தம் உயிர்வாழ்க்கையை நடத் தப் பிரிந்துபோகும். செய்கையைக் குருத்து விடு தல் (Budding) என்பர். இவற்றினும் உயர்ந்த அமைப்புள்ள பலவணுப் பிராணிகளும், முதுகெலும் புப்பிராணிகளும் பல உறுப் புக்களை உடையனவாகி, அவ் வுறுப்புக்களின் அணுக்கள் பல்வேறு பண்புகளைப் பெற் றுப் பலவகைத் திசுக்களாகி நிற்கும் நிலையில், குருத்து விடும் நெறிமுறையை அவை கையாளுவது இய வாது. ஹைடிரா பாசியில் ஒட்டியிருத்தல் கலவி யினப்பெருக்கம் : பலவணுப் பிராணிகளில் பொதுவாக நடைபெறும் இனப்பெருக்கத்துக்கு முதன் மையான ஆதாரம் அவைகளுக்குள் புதைந்தும் மறைந் தும் கிடக்கும் ஆண்பால் அணுக்களும் பெண்பால் அணுக்களுமேயாம். கலவி யினப்பெருக்கத்தைச் சற்றேறக் குறைய வொக்குஞ்செயல் ஒற்றையணுப் பிராணிகளிடமும் சிறு பான்மையாகக் காணப்படுகிறது. அகன்று கிடந்த வோர் இனத்தைச் சார்ந்த அணுக்கள் சில வமயங்களில் இரட்டையிரட்டைகளாக அணுகிக்கொள்ளும். பின் ஹைடிரா குருத்துக்கள் னர், அவற்றின் உயிர்ப்பொருள் இரண்டறக் கலந்து கொள்ளும். கலந்துகொண்டவுடன் இரு உட்கருக்களும் இரண்டறக் கலந்து ஒரே உட்கருவாகும். எனவே இரண்டு முழுவணுப் பிராணிகள் ஒன்றுகூடிக் கலந்து ஒரே முழுவணுவுயிராக முடிவது காண்கின்றோம். இவ் வாறு தம் மெய்யைக் கலந்து கொள்பவை . பால் அணுக்கள்' எனப் பெயர் பெறும். இத்தகைய பிணை தலை நிலையாக இணை தல் என்பர். இரண்டறக் கலந்தமை யினால் விளைந்த அணுவைக் கருவணு' எனக் கூறுவர். கருவணு முன் உரைத்தவாறு பிளவுக்குட்பட்டுப் பிறந்த இரு மகவு அணுக்களும் பிளவினால் தலைமுறை

யின் தொடர்பை இடையறாது நிறைவேற்றும். இணைந்து ஒன்றாதல் அவ்வப்போது மட்டும் நிகழும். இங்கு மிதியடிச் சிற்றுயிர் அல்லது பாரமீசியம் என அழைக்கப்படும் ஒற்றையணுப் பிராணியின் இனப் பெருக்கத்தில் நிகழும் ஒரு செயல் கருதற்பாலது. பாரமீசியம் நாளொன்றுக்கு ஒரு தடவை அல்லது இரண்டு தடவை ஒன்று இரண்டாகப் பிளவுபட்டுப் பல்கும். இச்செயல் வாரக்கணக்கிலோ, மாதக் கணக் கிலோ, ஆண்டுக்கணக்கிலோ நிகழ்ந்து கொண்டிருக் 04 2 00 12 10. QUT 60T நாரமீசியம் இணைவும் (1-6) பிளவும் (7-12) அல் கும். இது இடையறாது நிகழ்வதொன்றன்று, ஊடே யூடே இணைவுச் செய்கை இச்சிற்றுயிரினத்திலும் நடக் கின்றது. ஆனால் இரு முழுவணுக்களின் உயிர்ப் பொருள் இரண்டறக் கலப்பதில்லை. ஒண்டிகளாகத் திரியும் இவை உரிய காலங்களில் இரட்டையிரட்டை யாகச் சேர்கின்றன. தம் வாயை வாயுடன் பொருத் திக் கொள்ளுகின்றன. இவ்விரட்டைகளின் இளக் உயிர்ப்பொருள்கள் வாய்கள் வாயிலாகத் தொட்டு ஒன்றோடொன்று முட்டுகின்றன. வமயத்தில் இருவணுக்களிலுமுள்ள உட்கருக்கள் மிகச் சிக்கலான பிளவுக்குட்பட்டு, ஒவ்வொன்றும் இரண்டு பகுதிகளாகின்றன. எனவே ஒவ்வொரு பாரமீசியத் தின் உடலிலும் இரண்டு உட்கருக்கள் நிலவுகின்றன. ஒன்றின் உடலிலிருந்து ஓர் உட்கரு ஊர்ந்து மற்றொன் றின் உடலுக்குட் புகுந்து, அங்கு அசைவின்றி வாளாக் கிடக்கும் உட்கருவுடன் இரண்டறக் கலந்து, ஒரே உட் கருவாக அமைவுறும். பின்னர், இரண்டு பாரமீசியங் களும் விலகி, ஒண்டிகளாகப் பிரிந்து, தன்தன் இருபா லற்ற கலவியிலா வினப்பெருக்கத்தில் ஈடுபட்டுத் தலை முறை தலைமுறையாக வாழ்ந்து வரும். இவ்வகைய உட்கரு இணைவு பாரமீசியத்தின் உயிர்வாழ்க்கையில்