பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரத்தம்

46

இரத்தம்

தடுக்கின்றன. இவற்றுள் 70 சதவிகிதமானவை நியூட்டிரோபில் என்னும் அணுக்களாம். உடம்பில் கோய்க் கிருமிகள் புகுந்தால் உடனே இவ்வணுக்கள் அங்கே போய்க் குவிந்து நோய்க் கிருமிகளைக் கொல்லுகின்றன. சீழாகத் தோன்றுவது இவ்வாறு கொல்லப்பட்ட

இரத்த அணுக்கள்


1. பலவகையான வெள்ளணுக்கள். முதலிரண்டும் பல வடிவ உட்கரு வெள்ளணுக்கள். மூன்றாவது இயோசினொபில், நான்காவது மாஸ்ட் செல். ஐந்தாவது லிம்பொசைட்டு. ஆறாவது மானொசைட்டு,
2. சிவப்பணுக்கள்.

3. இரத்தத் தகடுகள்.

நோய்க் கிருமிகளின் கூட்டமேயாகும். அதனுடன் நோய்க் கிருமிகள் உடலுள் புகுந்ததும் இந்த அணுக்கள் பல்கிப் பெருகும் தன்மை வாய்ந்தவை.

வெண்மையணுக்களும் லிம்போசைட்டுகள், இயோசினோபில் என்ற அணுக்களும் உள. இவை தவிர ஒரு கன மில்லிமீட்டர் இரத்தத்தில் 2½ இலட்சம் முதல் மூன்று இலட்சம்வரைப் பிளேட் லெட்டுகள் என்ற சிற்றணுக்களும் காணப்படும். இவைதாம் இரத்தத்தைக் கட்டியாகத் தோயச் செய்யும் தன்மை வாய்ந்தவை. இவை கன சென்டிமீட்டருக்கு 2½ இலட்சத்துக்கும் குறைவாயிருந்தால் இரத்தம் நன்றாகக் கட்டியாக மாட்டாது.

இரத்தத்திலுள்ள புரோட்டீன் அல்புமின், குளோபுலின், பைப்ரினொஜென் என்பன முக்கியமானவை. பைப்ரினொஜென் என்பது இரத்தத்தைக் கட்டியாக்க

வெள்ளணுக்கள்


1. வெள்ளணுக்கள் அமீபாபோல வடிவம் வடிவம் மாறுவதும் இயங்குவதும்.
a. வெள்ளணு ஒரு பாக்டீரியத்தை விழுங்கி அழிப்பது.

b. பாக்டீரியா ஒரு வெள்ளணுவை அழிக்கின்றன.

உதவுகின்றது. இந்தப் புரோட்டீன் உரைவதால் தான் இரத்தத்தை இரத்தக் குழாயிலிருந்து வெளியே ஒழுகவிடாதபடி தடுக்கின்றது.

நோய்க் கிருமிகளைக் கொல்ல உதவும் எதிர்ப்பொருள்கள் (Antibodies) என்பவையும் பிளாஸ்மாவில் காணப்படுகின்றன. பிளாஸ்மாவே குடலிலிருந்து உறிஞ்சும் உணவையும், நீரையும், சுரப்பிகள் தரும் ஹார்மோன்களையும் சுமந்து செல்லுகின்றது. உடம்பில் உண்டாகும் கழிவுப் பொருள்கள் வெளியேற்றப்படுவதற்காகச் சிறுநீர்ச் சுரப்பிகளுக்குக் கொண்டுபோவதும் பிளாஸ்மாவே.

இவ்வாறு இரத்தம் வேலை செய்ய வேண்டுமானால் அது எந்நேரமும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். பாய்குழாய்கள், வடிகுழாய்கள், தந்துகிகள் மூலம் இதயம் உடம்பு முழுவதும் இரண்டு மூன்று நிமிடங்களில் சுற்றி வருமாறு செலுத்துகிறது. ஒரு மணி நேரத்தில் ஆறு பீப்பாய் இரத்தம் இதயம் வழி செல்லுகின்றது.

இரத்தமானது கல்லீரல் வழியாகச் செல்லும்போது இரத்தத்திலுள்ள சர்க்கரை பிரிக்கப்பட்டு ஈரலில் சேமித்துவைக்கப்படுகிறது. இரத்தத்திலுள்ள கழிவுப் பொருள்கள் சிறுநீர்ச் சுரப்பி வழியாக வெளியேற்றப்படுவதற்குத் தக்கனவாக மாறுதல் அடைகின்ன்றன. வயதான சிவப்பணுக்களின் ஹீமொகுளோபின் பிரிந்து, பித்தமாக மாறி உணவைச் செரிக்கச் செய்ய உதவுகிறது.

இரத்தம் உடம்பில் ஓடுவதால் உடம்பின்

வெப்ப நிலையை எப்பொழுதும் 98.6° பா. ஆக இருக்கும்படி செய்கிறது. இரத்தம் குடலிலுள்ள நீரை உறிஞ்சி, சுவாசப்பைகள், வியர்வைச் சுரப்பிகள், சிறுநீர்ச் சுரப்பிகள் ஆகியவற்றுக்குக் கொண்டுபோய் உதவுகிறது. இவ்வாறு உடலிலுள்ள நீரின் அளவு எப்போதும் குறைவுபடாமலிருக்கச் செய்கின்றது.