பக்கம்:கலைக்களஞ்சியம் 3.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக்கள் ஒலி : இதுக் என்ற மெய்யெழுத்தினையும் க் அ என ஒலிக்கும் உயிர்மெய் எழுத்தினையும் குறிக்கும். க் என்பது தமிழ் மெய்யெழுத்து வரிசையில் முதல் எழுத்தாகும்; இந்திய நாட்டு மொழிகள் எல்லாவற்றிலும் அவ்வாறே ஆகும். க் என்ற மெய்யெழுத்தினை எளிதே ஒலித்துக் காட்டு வதற்காக அ என்ற எழுத்துச் சாரியை சேர்த்து, க என வழங்குவர்; மேலும் கரம் என்ற சாரியை சேர்த் துக் ககரம் என்றும் வழங்குவர். அனா, ஆனா என்ற சாரியைகள் பெற்றுக் க-னா, க-ஆனா எனப் பள்ளிச் சிறு வர் வாயில் இஃது ஒலிக்கும். ஆ-னா என்பது ஏனம் என்ற பழைய சாரியையின் மருவிய வழக்குப்போலும். க் என்பது இக்கன்னா, இக், இக்கு என்று இன்று ஒலித் துக் காட்டப்பெறும். தனிநின்று ஒலிப்பது - தானே தனி நின்று அலகு (Syllable) பெறுவது உயிர் என்றும், உயிர் இன்றி இயங்காதது பாட்டில் அலகு பெறாதது மெய் என்றும் பெயர் பெறும். இவை அழகிய, பொருள் நிறைந்த உவமைப் பெயர்களாகும். உயிரினும் ஒலி குறைந் தவை, அழுத்தம் குறைந்தவை மெய்யெனப் பெயர் பெறும். உயிரை ஒலிக்கும் போது யாதொரு தடையும் வாயில் எழுவதாகத் தோன்றுவதில்லை ; மெய்யினை ஒலிக் கும்போது ஏதோ ஒருவகையான தட்டுப்பாடு எழுவது போலத் தோன்றுகிறது. இதனால் ஓற்று என்பது மெய்க்குப் பெயராக அமைந்தது. - எழுத்துக்கள் உயிர்ப்பொலிகள் (Breathedsounds), ஒலிப்பொலிகள் (Voiced s.) என இருவகை பாகும். குரல்வளையில் உள்ள குரல் நாண்கள் ஒன்று கூட, மூச்சு அத்தடையைத் தாண்டி, அவற்றின் இடையே புகுந்து வெளிவரும்போது அந்த இதழ்கள் துடிக்கத் தொடங்குகின்றன. அவையே ஒலிப்பொலிக ளாகும். அ என ஒலிக்கும்போது ஊட்டியில் (Adam's apple) கை வைத்துப் பார்த்தால் இந்தத் துடிப்புப் புலனாகும். குரல் இதழ்கள் இடையூறு தோன்ற நிற் கும்போது மூச்சுத் தடைப்படாது வெளிவருமானால் உயிர்ப்பொலி தோன்றும். K என்பது க் என்பதன் -- ளஞ்சியம் உயிர்ப்பொலி; G என்பது அதன் ஒலிப்பொலி. தொடர்ந் தொலிக்கும் ஒலி தொடரொலியாகும் (Continuant). எழுத்துக்களின் ஒலி வாயொலியாக முழுவதும் வெளி வருவதும் உண்டு; அப்போது மெல்லண்ணம் மேலே ஓங்கி நின்று மூக்குக்கும் வாய்க்கும் இடையிலுள்ள வழியை மூடி விடும். ஆனால் மெல்லண்ணம் கீழே இறங்குமானால் அந்த வழி திறக்கும்; அப்போது ஒலிப்பு வாய் வழியாக மட்டும் அன்றி, மூக்கு வழியாகவும் சென்று மூக்கொலிப்பும் பெறும். முன்னையவற்றை வாயொலி (Oral s.) என்றும், பின்னையவற்றை மூக்கொலி (Nasals-மெல்லெழுத்து - நாசிகை) என் றும் வழங்குவர். ககரத்திற்கேற்ற மூக்கொலி நகரம் என்பதாம். மெய்யெழுத்துக்கள் தடை தோன்றும் இடத்திற்கு ஏற்ப வெவ்வேறாகும். மெல்லண்ணமும் அடி நாவும் ஒற்றப் பிறப்பன மெல்லண ஒலிகள் (Velars). வல்லண்ண மும் இடைநாவும் ஒற்றுவதால் எழுவன வல்லண ஒலிகள் (Palatals) : இதழ்கள் ஒற் றப்பிறப்பன இதழ் ஒலிகள் (Labials); இதழும் பல் லும் ஓற்றப் பிறப்பன இதழ் பல் ஒலிகள் (Labio dentals). வல்லண்ணத்தை நாவால் தொட்டால் இடை யில் உள் குழிந்தும் பல்லுக்கு அருகே புறம் குவிந்தும் இருக்கக் காணலாம். புறங்குவிந்த இடத்தினைப் பல் லீறு என்பர். நாவால் பல்லைத் தொடுவதால் பிறப்பன பல் ஒலிகள் (Dentals); பல்லைத் தொடாமல் பல் ஈற் றினைத் தொடுவதால் பிறப்பன பல்லீற்றொலிகள் (Alveolars). நாவினை மடித்து வல்லண்ண த்தை ஒற் றப்பிறப்பன நாமடி ஒலிகள். இவை வளைநா ஒலிகள் நா ஒலிகள் (Linguals, Acuminals, Retroflexes) எனவும் பெயர் பெறும். இங்கு வல்லண்ணத்தின் உச் சியை - முடியை நாத்தொடுவதால் இவற்றினை மூர்த் தாட்சரம் தலையொலி (Cerebrals) என்றும் வழங்கு வது உண்டு. இந்த வகையில் க் என்பது அடி நாவும் மெல்லண்ணமும் ஒற்றப்பிறக்கும் மெய்யெழுத்தாகும். இவ்வெழுத்துக்களில் ஏற்படும் தட்டுப்பாட்டினை நோக்கி முற்றும் தடைப்பட்டெழும் வெடி எழுத்துக் கள் (Pldsives) என்றும், முற்றும் தடைப்படாமல்