பக்கம்:கலைக்களஞ்சியம் 3.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரும் உரசொலிகள் (Fricatives) என்றும் வேறு பிரிப்பது உண்டு. முற்றும் தடைப்பட்டெழும்போதும் நிறுத்தொலி (Stop) இறுகச் செறிந்த செறிவொலி யாகவும் நெகிழ்ந்தொலிக்கும் நெகழொலி (Lax) ஆக வும் வேறுபடும். பொதுவாக, க் என்பதனை மெல்லணச் செறிவுடை வெடிப்பிசை உயிர்ப்பொலி எனலாம். வெடிப்பொலியில், ஒற்றுதலால் வரும் : (1). முழுத் தடையும், (2). ஓட்டியது சடுக்கெனப் பிரிவதால் வரும் வெடிப்பும் என இரண்டு நிகழ்ச்சிகள் வரும். வெட்கம் என்பதில் டக என்பதில் போல, ஒரு வெடிப்பெழுத்தின் பின் மற்றொரு வெடிப்பெழுத்து வருமானால், முன்னைய வெடிப்பொலியில் (ட்) நிறுத்தொலியாம் தடை ஒன் றுமே நிகழும்; வெடிப்பென்பது நிகழாமல் இரண்டாம் வெடிப்பெழுத்து (க்) ஒலிக்கத் தொடங்கும் ; அங்குத்தான் வெடிப்பு நிகழும். பாக்கு என்பதில் போல க்க் இரட் டித்து வரும் இடங்களில் இந்த உண்மையைக் காண்க. தமிழில் க் என்னும் ஒலி மொழிக்கு முதலில் வரும்; மொழியின் ஈற்றில் வருவதில்லை. ஈற்றில் பெரும்பான் மையும் உகரமும் சிறுபான்மை பிற உயிர் எழுத்துக் களும் பெற்றே வரும். ஓரலகுக்குக் குறையாதவை முன் வந்தால் உகரம் குற்றியலுகரமாக ஒலிக்கும்; இதனை இதழ் குவியா உகரம் என்பர் . ய என்பது இதன் குறி ; யா என்பது பின் வந்தால் இந்த உகரம் மேலைய உகரத்திற்கும் இகரத்திற்கும் இடைப்பட்ட ஒலி பெறும் என்பது இதன் குறி. இதனைக் குற்றியலிகரம் என்பர். குற்றியலுகர ஒலி ய என ஒலியாது . எனவே ஒலிக்கும் என்பர் எம். பவுலர் (M. Fowler) என்ற அறிஞர். மொழிக்கு இடையே உயிரெழுத்துக்களோடு சேர்ந்து உயிர்களுக்குப் பின்னும் இது தனித்து வரும் ; யாழ - இன் பின்னும் உயிர்களின் பின்னும் இரட்டித்து வரும் ; ட் (வெட்கம்), ற் (முற்கு), ல் (பல் கடிது), ள் (முள் கடிது), ண் (மண் கடிது),ன் (பொன் கடிது), ங் (அங்கு) என்ற எழுத்துக்களின் பின்னும் தனித்து வரும். மெல்லெழுத் துக்களில் பெரும்பான்மையும் ங் என்பதன் பின் வரும். ம் என்பதுங் எனத் திரியும் (மரங்களை); ஞ், ந் இப்போது மொழியீற்றில் வருவதில்லை ; முன்னாளில் வந்தபோது அவற்றின் பின் க் என்பதன் முன் சாரியை வரும் ; வந்தபோது ககரம் இரட்டிக்கும்; வகரம் முன் வந்தால் சாரியை பெறும்; அல்லது ஆய்தமாகும். பார்க்க : ஃ.) தமிழில் வரும் க் என்ற எழுத்துப் பலவகை ஓலிக ளாக ஒலிக்கக் காண்கிறோம். அறிஞர் கால்டுவெல் வெடிப்பெழுத்துக்கள், மொழிக்கு முதலிலும் இடையே இரட்டித்து வருகையிலும் k முதலிய போன்ற உயிர்ப் பொலியாகவும், மொழிக்கிடையே உயிர் எழுத்துக் களின் நடுவே ஒற்றையாய் வரும்போதும் மெல்லெழுத் தின் பின் வரும்போதும் முதலிய போன்ற ஒலிப்பொ லியாகவும் மாறும் என்ற ஒரு நியதி கண்டு, அதற்கு, ' உயிர்ப்பொலி ஒலிப்பொலி மாற்றுச் சட்டம்' (Law of convertibility of surds and sonants) எனப் பெயரிட்டு, அதனைத் திராவிட மொழி இனத்தின் சிறப் பியல்பு எனக் கூறுகிறார். இப்போது இங்ஙனம் ஒலித் தரலும் எப்போதும் இவ்வாறு இவை ஒலித்தன அல்ல என்பர் ஒரு சாரார். பழைய திண்ணைப் பள்ளிக்கூடங் களில் இந்த ஒலி வேற்றுமையை வற்புறுத்தக் கணக் காயர்கள் க் என்பது போன்ற ஒலியைத் தனியாகவும் சங்க' என்பது போன்ற ஒலியை வேறாகவும் கற்பித்து வந்தனர். இந்த வேறுபாடு முன்பின் வரும் எழுத்துக்களின் சாயல் படிவதால் எழுவதாகும். கு என்று ஒலிக்கும் போது க் என்பது உள் நாக்கிற்கு அருகாக ஒலிக்கவும், கி என்று ஒலிக்கும் போது வல்லண்ணம் தொடங்கு மிடத்திற்கு அருகாக ஒலிக்கவும் காண்கிறோம். இக ரம் வல்லண்ண உயிர் ஆதலின் கி என்பதில் வரும் க் வல்லண்ண ச் சாயல் (Palatalisation) பெற்று ஏறக் குறைய என்பதுபோல் ஒலிக்கும். இதனால் முதன் முதலில் சகர ஒலியே இருந்ததில்லை என்றும், கெம்பு > செம்பு, கை > செய் ; கெவி > செவி என இவ்வாறு ககரம் மாறுவதால் சகர ஒலி தோன்றியது என்றும் கூறுவாரும் உண்டு. . உயிரெழுத்துக்களினிடையே க் வரும்போது உயிர்ச் சாயலால் உயிர்ப்பொலி ஒலிப்பொலியாக மாறுவது இயல்பே . வடமொழியிலும் (பதஞ்சலி 1. iv, 4) சகரம் இத்தகைய மாற்றத்தினைப் பெறுவதெனக் கூறுகிறார்; பிராகிருதங்களிலும் இவ்வாறாகும். மொழியோ, பொருளை அறிவிப்பதற்கு ஏற்பட்டது. பொருள் மாருத வரையில் ஒலி மாறுவதனைத் தடுப் பான் ஏன்? பல முறை ஒலிக்கப்பெறும் ஒலிகள் இவ் வாறு மாறுவதும் இயல்பு. எனவே, ஒலிகளின் மாற்றங் களை ஒன்று விடாமல் குறிப்பதனைவிட, அந்த அந்த மொழியில் பொருள் மாற்றத்தினை விளைவிக்கும் எழுத் துக்களை மட்டும் குறிப்பதே மேல் என முன்னோர் கண்டனர். இன்றைய அறிஞர்களும் ஒலியன் (Pho neme பொருள் மாற்றொலி) என்ற கருத்தினை மனத் தில் வைத்து ஆராய்கின்றார்கள். பொருள் மாற்றொலி யினையே முன்னோர் எழுத்து என்றனர். பலவகையான ஒலிகளின் தனிக் குடும்பமே எழுத்து அல்லது ஒலியன் எனப்பெறும். - Call என்பதற்கும் gall என்பதற்கும் வெவ்வேறு பொருள் உண்டாதலின் ஆங்கிலத்தில் k என்பதும் g என்பதும் வெவ்வேறு எழுத்துக்கள் அல் லது ஒலியன்கள். தமிழிலோ கால் என்பதனை kal, gal, hal, xal, cal, val என இவ்வாறு ஒலித்தாலும் * பொருள் மாறுவதில்லை. எனவே kg, h, x, , V என் பவையெல்லாம் க் என்ற எழுத்தை அல்லது ஒலியினைச் சேர்ந்த குடும்பமே ஆம். க் என்பது அடுத்துவரும் எழுத்துக்களின் சாயலால் பலவகையாக மாறக் காண் கிறோம். இவ்வாறு காணும் போது கால்டுவெல் கூறும் சட்டம் பொருளற்றுப்போதல் காண்க. வடமொழி அறிந்தவர் அங்குள்ள g ஒலியைக் குரு முதலிய சொற் களில் வழங்கியதால் அத்தகைய ஒலி பரவியது என்பார் எம். பவுலர் . க் (k) என்பது g என ஒலிக்கின்றது என்பதினும் க் என்ற முழுத்தடைச் செறிவொலியே நெகிழொலியாக உயிர்களினிடையே ஒலிக்கின்றது என் பதே உண்மை என்பர் அந்த அறிஞர். இலங்கைத் தமிழர்கள் வெடி ஒலிப்பொலிகளையும் இவ்வாறு நெகிழொலியாக ஒலிப்பதனால் வட்டுக்கோட்டை என் பதனை Vaddukkoddai. என எழுதக் காண்கிறோம். உயிர்களுக்கிடையே க் என்பது g என்ற ஒலி பெறக் கண்டே கால்டுவெல் எழுதினார் என அறிதலும் வேண் டும். பகல் என்பதில் க் என்பது g என்றும் h என்றும் h என்றும் ஒலிக்கக் காண்கிறோம். பவல் என இழிசினர் வழக்கிலும் பால் என இலக்கிய வழக்கிலும் மாறக் காண்கிறோம். முடிவில் க் என்பதே மறைகிறது என லாம் (k > zero). ஜே. ஆர். பிரித் (J. R. Frith) என்ற அறிஞர் ககரத்தின் பிற ஒலிகளையும் கண்டெழுதி யுள்ளார். I. (1). கல் என்பதில் போல க் என்பது மொழிக்கு முதலில் வரும்போதும், (2). பக்கம் என்பதிற் போலக் ககரம் இரட்டித்து உயிர்களினிடையே வரும் போதும், (3). தீர்க்க என்பதிற் போல ரகரத்தின் பின் இரட்டித்து வரும்போதும் , k என்ற ஒலி பெறும். II. நாங்கள் என்பதிற்போல ஙகரத்தின் பின் g என்ற ஒலி பெறும். III. பகல் என்பதிற்போலத் தனியே