பக்கம்:கலைக்களஞ்சியம் 3.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடையே (Intervocalic) வரும்போது என்ற ஒலி பெறும் ; IV. அழுகி என்பதிற்போல மொழியீற் றில் இகரத்தோடு வரும்போது " என்ற வல்லண உயிர்ப்பு உரசொலி பெறும். V. குருடர்கள், பிறகு என்பவற்றிற்போல மொழியின் 'கடையசையில் க என்றோ கு என்றோ வரும்போது V என்ற மெல்லண ஒலிப்பு உரசொலி பெறும். எஃகு என்றபோது ககரம், மெல்லண உயிர்ப்பு உரசொலியாய் X என்றும், மெல் லண ஒலிப்பு உரசொலியாய் / என்றும் ஒலித்தலைக் கண்டோம். (பார்க்க : ஃ. ஜிஹ்வா மூலம் இது முன்பு தவறாகக் காகபத்யம் என அச்சிடப்பெற்றுள்ளது.) அ, ஆ ; இ, ஈ என உயிரெழுத்துக்களைத் தொடர்ந்து ஒலிக்கும் போது இடையிடையே குரல்வளை மூடிக் கொள்வதனை உணர்கிறோம்; அப்போது க் என்பது போன்ற ஒலி எழும். இதனை விட்டிசை என்பர். ? என்ற ஒலியாகும் இது. வல்லெழுத்தோடு இந்த விட்டிசை ஒலி பழங்காலத்தில் எதுகை கொண்டது. சிரிப்பொலியையும், கக்கக் கெனல், கக்குதல் முதலிய இசைக் குறிப்புக்களையும் (அநுகரண ஒலி - Onomato poeia) அறிந்தால் இவ்வொலியைக் கேட்கலாம். ககரம் இரட்டித்து வரும்போது ஹ் என உயிர்ப் பிசையோடு k - h என ஒலிக்கும் என்பர் எம். பவுலர். k, kh,g, gh, q என்ற பிற மொழி ஒலிகள் தமிழில் க் என்றே எழுதப்பெற்று ஒலிக்கப்பெறும். (உ- ம்) kara (கரம் - கை), khara (கரம் - சூடு), gara (கரம் - நஞ்சு), ghosa (கோஷம் - பேரொலி), gamis (கமிசு - உட் சட்டை ). பிற மொழி ஒலிகளைத் தமிழில் வழங்கும் போது கால்டுவெல் கண்டதற்கிணங்க g என்ற ஒலிப்பு ஒலியைக் குறிக்கத் தனிக் ககரத்தையும் (Rega - ரீகா ) k போன்ற உயிர்ப்பு ஒலியைக் குறிக்க இரட்டித்த வல்லெழுத்தையும் (Baku - பாக்கூ) எழுதுவது வழக்க மாக வருகிறது. பொருள் : க என்பது காந்தார சுரத்தின் குறியாக வழங்குகிறது. க என்பது ஒன்று என்ற எண்ணின் குறி யாகும் (பார்க்க : எண்சுவடி). க என்பதற்குப் பிரமன் என்றும் அக்கினி என்றும் பொருள் (தமிழ் லெக்சிக் கன்); வாழ்க என்பதிற்போல வியங்கோள் விகுதியும் ஆம். வரிவடிவம் : தமிழ் நாட்டில் வழங்கிய வடிவங் களைத் தருகின்றோம். அசோகன் எழுத்திலும் பஞ்ச பாண்டவக் குகை எழுத்துக்கள் சிறிது மாறியவை. பிராமி எழுத்திலிருந்து தமிழ் எழுத்துக்கள் வளர்ந் தனவா, தென்னாட்டிலிருந்து வடக்கே எழுத்துக்கள் சென்றனவா, சிந்து நதிக்கரையிலிருந்து எழுத்துக்கள் வளர்ந்தனவா என்று எழும் கேள்விகளுக்கு முற்ற விடை கூற முடியாது. . அசோகன் எழுத்து பஞ்சபாண்டவக் குகை கி.மு. 3ஆம் நூ. திருநாத குன்றம் கி. பி. 7ஆம் நூ. 8 , கஃபா 10ஆம் நூ. 11 ட 13 ' 15 இந்த எழுத்துச் சிலுவை போல் முதலிலிருந்தது; அதன் தலையின் நுனி தடித்தது. அது குறுக்குக் கோடாக வளர்ந்தது ; இடப்புறம் வளைந்தது; நடுக் கோட்டைத் தொட்டது; வலப்புறம் நீண்டது; தலை சதுரமாக அமைந்தது; இடையே குறுக்குக் கோடு கீழாக வலப்புறம் வளைந்து கீழிறங்கிச் சுழியாயிற்று; நேர்க் கோடு இடப்புறம் கீழே வளைந்து பின் நடுவே உள்ள குறுக்குக் கோட்டின் வளைவோடு ஒன்றாயிற்று. என் பது க என்ற உயிர் மெய்யெழுத்தினையும் க் என்ற மெய் யினையும் சுட்டும். உயிர் மெய்யெழுத்துப் புள்ளியின்றி யும் மெய்யெழுத்துப் புள்ளி பெற்றும் வரும் என்பது தொல்காப்பியம், இராசேந்திர சோழன் ஆள வரும்வரை மெய்யெழுத்துக்கள் பெரும்பான்மையும் புள்ளி பெற்று வரக் காண்கிறோம். பின்னர்ப் புள்ளியிட்டெழுதும் வழக் கம் 19ஆம் நூற்றாண்டில் புத்துயிர் பெற்றது. புள்ளி என்பதே மெய்யெழுத்திற்குப் பெயர். புள்ளி சிறு நேர்க் கோடாக அமைந்தது போலவும் சிலபோது தோன்றிது. வட்டெழுத்து : பஞ்சபாண்டவக் குகை கி. மு. 3ஆம் நூ. + *

    • KX

சிலுவைக் குறிக்கோடு போலிருக்கும் எழுத்து இடப் புறமாகச் சாய்ந்தது; தலையில் ஒரு குறுக்குக்கோடு இடப் புறம் சென்றது; சிலபோது ச போலவும் தோன்றிற்று; ஆனால் ககரத்தின் சுழி சிறிது. முடிவில் ஆங்கில N போல் ஆயிற்று. இங்கும் முன்போல் மெய்யெழுத்துப் புள்ளி பெற்று வழங்கியது. தெ. பொ . மீ.

கஃபா : இது மக்காவிலுள்ள மிகப் பழமையான இஸ்லாமிய ஆலயம். கஃபா என்பதன் பொருள் அறை என்பதாகும். இப்ராஹீம் நபியாலும் அவர்தம் முதல் மைந்தர் இஸ்மாயீல் நபியாலும் (ஆபிரகாம், இஸ்ம வேல் என்னும் இரு பெருந் தீர்க்கதரிசிகளாலும்) இவ் வாலயம் பழுதுபார்க்கப்பட்டுள்ளது. இதுவரை இது ஒன்பது முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இப்போ துள்ளது 1626ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இது 40 அடி நீளமும், 35 அடி அகலமும், 50 அடி உயரமு முள்ள ஒரு கருங்கற் கூடமாகும். இதற்குள்ளே உரு வம் அல்லது தொழுவதற்கென்று வேறு எதுவும் இல்லை. இவ்வாலயத்தின் புனிதத் தன்மைக்குக் காரணம் இதில் வடகிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள ஜஹருல் - அஸ்வத் என்னும் கருங்கல்லேயாகும். இது