பக்கம்:கலைக்களஞ்சியம் 3.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக்கரி பச்கப்படுகிறவனும் முட்டை வடிவமுடையது. 6-7 அங்குல விட்ட முடையது. ஆலயத்துக்கு வருபவர் ஒவ்வொருவரும் இக்கல்லை முத்தமிடுவர். தேவ தூதர் காபிரியேல் இக் கல்லை ஆபிரகாமுக்குத் தந்ததாக முகம்மது நபி கூறி னார். இவ்வாலயச் சுவர் ஆண்டுதோறும் சரிகைத் துணியால் போர்த்தப்படுகிறது. இதை முஸ்லிம்கள் தங்கள் ஆயுளில் ஒரு முறையேனும் தரிசித்தல் வேண் டும் என்பது விதி. பார்க்க : இஸ்லாம். பா. தா.

கக்கரி (Cucumber) தரையிலும் பந்தலிலும் பற்றுக் கம்பிகளால் படரும் ஒரு பருவக் கொடி. குக் கர்பிட்டேசி என்னும் பூசணிக் குடும்பத்துக் குக்குமிஸ் என்னும் சாதியில் சட்டைவஸ் என்னும் இனம். இதன் காய் நீண்டு தடித்து உருளையாகப் பல அளவிலும் வடி விலும் இருக்கும். இது வட இந்தியாவுக்குரிய செடி எனக் கருதுகின்றனர். இதனை இந்தியா முழுவதும் அயன, உப அயன மண்டல நாடுகளில் நெடுகவும் கல்லும்

கக்கரி உதவி : விஞ்ஞான ஆராய்ச்சி நிலையம். இந்திய அரசாங்கம் புது டெல்லி

பயிரிடுகின்றனர். இந்த இனத்தில் பயிர் செய்வதால் உண்டான பல வகைகள் உண்டு. காய் 10-15 அங் குல நீளம், 3-4 அங்குல விட்டம் வரையிலும் இருக் கும், தோல் சற்றுத் தடிப்பாக இருக்கும். நிறம் வெளுத்த பச்சை முதல் கரும் பச்சை வரை பல சாயை களில் இருந்து, காய் முற்றும்போது பழுப்பான மஞ்ச ளாக அல்லது கரும் பழுப்பாக மாறும். சென்னை ராச்சியத்தில் சில பகுதிகளில் காயின் மேல் சிறு முட் கள் இருக்கும் மண்டோசா என்னும் ஒருவகை வளர் கிறது. கக்கரி விதையிலுள்ள பருப்பு குளிர்ச்சியும் பலமும் தரும் சுவையுள்ள பண்டம், பார்க்க : வெள் ளரி, குக்கர்பிட்டேசீ.

கக்குவான் ஒருவகையான தொற்று இருமல் நோய், இதைக் கக்குவாய், பெருஞ்சளி என்றும் அழைப்பதுண்டு.

உலகம் முற்றும் இந்நோய் பரவியிருக்கிறது. தமிழ் நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது. ஓர் ஊரில் தோன்றினால் அந்த ஊரில் இருக்கும் ஏறக்குறைய அத் தனை குழந்தைகளுக்கும் இது தொற்றிக்கொள்கிறது. ஒரு வயது குழந்தைகளுக்குத்தான் இது விரைவாக வும் எளிதாகவும் தொற்றும். 10 வயதுக்குமேல் இந்நோய் அவ்வளவு எளிதில் பற்றுவதில்லை. ஆயினும் 60 வயது உடையவர்களையும் அரிதாக இந்நோய் தாக் குவதுண்டு. ஒரு வயதுக்கும் குறைந்த குழந்தைகளுக்கு இது கண்டால், நான்கு குழந்தைகளில் ஒன்று இறந்து விடுகிறது. வயது ஏற ஏற, நோயைத் தடுக்கும் ஆற்ற லும் வளர்ந்துகொண்டே வருகிறது. பொதுவாக ஒரு தடவை இந்நோய் வந்தால் பிறகு வருவதில்லை.

ககந்தன்

பார்டெட் கெங்கோ (Bordet-Gengon) என்கிற கிருமிதான் இந்த இருமலுக்குக் காரணம் என்று பெரும் பாலோர் கருதுகிறார்கள். நோயாளியின் தொண்டையி லும் சுவாசப்பாதையிலும் இருக்கும் சளியின் நுண்ணிய திவலைகளில் கக்குவான் கிருமிகள் இருக்கின்றன. இத் திவலைகள் 5 அடி தூரத்திலிருந்து பேசினாலும், 18 அடி தூரத்திலிருந்து இருமினாலும் பிறரைத் தாக்கும். இத் திவலைகள் பிறர் மூச்சிழுக்கும்போது அவர் உடலில் உள்ளே போய்த் தங்கிய 13-15 நாட்களில் அவருக்கு இருமல் உண்டாகிறது. முதல் 2 வாரங்கள் வரை சளி இருமலாக இருந்து, நாளாக நாளாக இருமலின் வேகம் அதிகரிக்கிறது. இரண்டாம் வாரக் கடைசியில் இருமல் தொடர்ச்சியாக (Paroxysmal stage) வரும். கடைசி யில் வாந்தி உண்டாகலாம். 2-3 நிமிஷம் கூட இருமல் தொடர்ச்சியாக இருந்து, சுவாசப் பையிலிருக்கும் காற்று முழுவதுமே வெளியில் வந்துவிடலாம். அப் போது மயக்கம் உண்டாகலாம். சில சமயம் சன்னியும் உண்டாகும். இருமல் தொடர்ந்து வரும்போது முகம் சிவந்து உப்பிக் கொள்ளும்; கண்கள் சிறிது பிதுங்கும்; கண்ணீர் பெருகும்; வாய் திறந்து நாக்குச் சிறிது வெளியே நீளும்; மூச்சு நின்று விடுமோ என ஐயுற வேண்டி வரும். அச்சமயம் திடீரென்று குரல்வளை தளர்ந்து, காற்று 'ஊ' என்ற சத்தத்தோடு உள்ளே பாயும். இப்படி 3 லிருந்து 10 வாரங்கள் வரை நீடித்திருக்கும். அதன்பிறகு உடல் தேற மூன்று பிறைவரை செல்லும் எனத் தமிழ் நாட்டில் சொல்வ துண்டு .

இதைத் தடுப்பதற்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ள லாம். அதைவிட முக்கியமானது நோய் கண்டால் அந் தக் குழந்தையைத் தனியாகப் பிரித்து வைப்பது தான். இதைக் கடைப்பிடிக்காததாலேயே இந்தியாவில் இந்த இருமல் பெரிய அளவில் பரவி வருகிறது. கக்குவான் உள்ள குழந்தையைப் பள்ளிக்கூடத்திற்கோ, குழந்தைகள் இருக்கும் மற்றவர்கள் வீட்டிற்கோ அனுப்புவது மிகப் பெரிய தவறு. நோயுற்ற குழந்தை இருமும் போது அதற்கு மூச்சடைப்பு அல்லது இழுப்பு உண் டாகலாமாதலால் குழந்தையின் அருகில் எப்போதும் யாரேனும் இருத்தல் வேண்டும்.

இந்நோயினால் சாவதைவிட இதனால் உண்டாகும் பலவீனத்தினால் பிறநோய்கள் எளிதிற் பற்ற, அவற்றால் சாவதுதான் மிகுதி.

சிகிச்சை : சோடா உப்பை அடிக்கடி நீரில் போட்டுக் கொடுத்தால் இருமலின் வேகம் குறையும். முதலைக் கறி போன்றவைகள் குணப்படுத்தும் என்று நம்புவதில் உண்மையில்லை. டெர்ரமைசின், குளோரோமைசீட்டின் போன்ற மருந்துகள் நோயை நன்றாகக் கண்டிக்கின்றன; ஆனால் விலை மிக அதிகம். மற்றும் மேனாட்டு முறையில் எத்தனையோ மருந்துகள் சொல்லுகிறார்கள். அவைகள் அனைத்தும் பயனற்றவை.

நோய் இருக்கும் போது எளிதாகச் செரிக்கக்கூடிய உணவு கொடுக்க வேண்டும். பால், முட்டை போன்ற வற்றைக் கொடுக்கலாம். தூய காற்றும் சூரிய ஒளியும் மிகுந்த நன்மை செய்வன.

ல. கி.மு. ககந்தன் தமிழ்க் காவியமாகிய மணிமேகலையிற் கூறப்படும் ஒருவன். காந்தன் என்னும் அரசனுடைய காதற்கணிகையின் மகன். காந்தன் தன் குலத்தை அழிக்க வந்த பரசுராமனுக்கு அஞ்சி மறைந்திருந்தான். அப்போது சம்பாபதி என்னும் தெய்வத்தின் சொற்படி இவன் அரசாண்டான். இவன் அரசாளும்போது இவன் மக்களில் ஒருவன் பார்ப்பனி மருதியையும், மற்றொரு